ஏமாத்திட்டீங்களே டாக்டர்?

ஏமாத்திட்டீங்களே டாக்டர்?


   “ எங்கப்பா பிழைச்சுடுவார்னு சொன்னீங்களே டாக்டர்? இப்ப அநியாயத்துக்கு சாகடிச்சீட்டீங்களே! உங்களாலே காப்பாத்த முடியாதுன்னு சொல்லி இருந்தா, நாங்க பெரிய ஆஸ்பிட்டலுக்கு  பிரைவேட் ஹாஸ்பிட்டல் எதாவதுக்கு கொண்டு போய் இருப்போம். எல்லாம் நார்மல்! பிழைச்சு எழுந்திருவார்! அப்படின்னு சொல்லி சொல்லியே எங்களை ஏமாத்திட்டீங்களே! எங்க நம்பிக்கையை சிதற அடிச்சிட்டீங்களே!” தன் தந்தை இறந்துவிட்டார் என்று டாக்டர் சொன்னதும் குமார் டாக்டரிடம் குமுறினான்.

  குமாரின் தந்தை நகரின் மொத்த காய்கறி வியாபாரி. திடீர் என்று வயிற்று வலி என்று ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். அங்கு ஜி.எச்.சிற்கு செல்லும் படி கூறிவிட்டனர். குமார் தனக்கு தெரிந்த செல்வாக்குள்ள நபர்கள் மூலம் தந்தைக்கு நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான்.
    கல்லீரல் பாதிக்க பட்டு இருப்பது தெரிந்தது. குடியும் பாக்கும் அவரது கல்லீரலை அரித்து எடுத்து விட்டு இருந்தது. நோ ஹோப்! ஆனால் அப்படி சொல்லிவிடவில்லை டாக்டர்.
       நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் மருத்துவ தொழிலின் பால பாடம். எவ்வளவு பெரிய வியாதியானாலும் வைத்தியம் பாதி என்றால் நம்பிக்கை மீதி வேண்டும் அல்லவா? அப்படித்தான் நம்பிக்கை ஊட்டினார். கவலைப்படாதீங்க! உங்க கல்லீரல் பாதிக்கப் பட்டு இருக்கு. நிறைய அழுக்கு சேர்ந்து இருக்கு! அதை சுத்தம் செய்யனும் என்று சொன்னார்கள்.

  இரண்டு நாள் மூன்று நாள் கொஞ்சம் கொஞ்சமாகத்தேறினார் குமாரின் அப்பா. நடக்க முடியாமல் வந்தவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இன்று திடீரென இறக்கவும் குமார் கோபம் அடைந்து டாக்டரை சாடினான்.
     காம் டவுன் குமார்! உங்க அப்பாவோட மெடிக்கல் ரிப்போர்ட் பாத்தியா! அவரது கல்லீரல் மொத்தமும் அரிச்சு போயிருக்கு! அவர் இன்னும் கொஞ்சநாள் உயிரோடு இருந்திருப்பார்தான்! ஆனா அது கொஞ்ச காலம்தான்! இப்படி திடீர்னு இறக்க காரணம் அவர் தண்ணீர் குடிச்சதுதான்!  ஐ மீன்! நிறைய ட்ரிங்க் பண்ணதால அவர் கல்லீரல் பாதிச்சது. அது அவர் நோய்க்கு காரணம். இப்ப நாங்க குடிநீர் குடிக்க வேணாம்னு சொல்லியும் அவர் எப்படியோ ஏமாற்றி குடிச்சுட்டுஇருக்கார். கல்லீரல் வேலை செய்யலை!  தண்ணி மூச்சுக்குழலை அடைச்சு மூச்சடைச்சு இறந்து போயிருக்கார். தண்ணி மட்டும் குடிக்காம இருந்தா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.

   ஆனா அவர் நல்லா ஆயிருவார்னு சொன்னீங்களே!
  நோயாளிக்கு நம்பிக்கை கொடுப்பது டாக்டரின் கடமை குமார். பேஷண்ட் கிட்ட ஆறுதலா பேசி நம்பிக்கை ஊட்டவேண்டியது டாக்டரோட பணி. அப்படி செய்யாம நீதான் செத்து போகப் போறியே உனக்கு எதுக்கு மருந்துன்னு கேட்டா நோயாளி அப்பவே செத்துருவான். அதைத்தான் நான் செய்தேன். வேற எங்க வேணும்னாலும் உங்க அப்பாவோட ரிப்போர்ட்ட கொண்டு போய் காமி! அப்ப உனக்கு புரியும். இந்த ஹாஸ்பிடல்ல என்ன மருத்துவ வசதி இருக்கோ அத்தனையும் அவருக்குச் செஞ்சிருக்கோம்! இதுக்கும் மேல அவரை காப்பாத்த நாங்க கடவுள் இல்லை! புரிஞ்சிக்கோ!

  உண்மை புரிந்தது! குமார் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

  அழாதே குமார்! யாரும் இந்த உலகில் நிரந்தரம் இல்லை! ஆகவேண்டிய வேலைகளைப் பாரு! என்று பரிவோடு சொன்னார் டாக்டர்.


(நண்பர் ஒருவர் சொன்ன உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. போற்றுதலுக்கு உரிய மருத்துவர்களும்இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  2. கதை அல்ல. சம்பவம்!

    சுரேஷ்.. உங்கள் மெயில் முகவரி என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்! மெயில் முகவரி thalir.ssb@gmail.com. அலைபேசி 9444091441

      Delete
  3. நல்ல நிகழ்வினை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!