தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


மின்னும் பூக்கள்
மணக்கவில்லை!
மரங்களில் மின்மினி!

கும்மிருட்டு
அழகாக்கியது
மின்மினிகள்!

சேற்றுத்தடம்!
எளிதில் அழிவதில்லை!
குழந்தைப்பருவ நினைவுகள்!

வழிகேட்டு
கதவைத் தட்டியது!
வெள்ளநீர்!

திருடிச் சென்றும்
உபயோகிக்க வில்லை!
வெள்ளநீர்!

உயிரிழந்த காற்று!
உருவாக்குகின்றது
நோய்கள்!

இறப்பில்லா வரம்
என்றும் பதினாறாய்
நெகிழிகள்!

இழவு வீட்டிலிலும்
சிரித்துக் கொண்டிருந்தார்கள்!
புகைப்படத்தில்

மண் உண்ண மறுத்தது
மண்ணைஅழிக்க பிறந்தது!
நெகிழிகள்!

பிரித்து வைத்தாலும்
ஒட்டிக்கொள்ளவே செய்கிறது!
குழந்தைகளிடம் மண்!

தகிக்கும் சூரியன்!
உடை களைந்த மரங்கள்!
இலையுதிர் காலம்!


முழு பூசணிக்காயை
சோற்றில் மறைத்தது!
மூடுபனி!

அழுக்குகள் மறைவு!
வெள்ளை உடுத்தியது
வீடு!

மாயை மறைக்கையில்
சாயை இழக்கிறது பூமி!
மூடுபனி!

ஊதுபத்தி வாசம்!
தற்காலிகமாய் தடைபட்டது!
சாக்கடை நாற்றம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வழிகேட்டு
    கதவைத் தட்டியது!
    வெள்ளநீர்!//
    அருமை அருமை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மின்மினி, வெள்ளநீர்..மிகவும் ரசித்தேன் சகோ
    அருமையான துளிகள் அனைத்தும்

    ReplyDelete
  3. ///வழிகேட்டு
    கதவைத் தட்டியது!
    வெள்ளநீர்///

    மிக அருமை தோழர்

    ReplyDelete
  4. அருமை சுரேஷ்.

    வெள்ள நீர் கதவைத் தட்டி வழி மட்டுமா கேட்டது உள்ளே நுழைந்தே விட்டதே..வழி தெரியும் வரை இங்கு இருக்கின்றேன் என்று!!!

    ReplyDelete
  5. வெள்ளத்தைக்குறித்த கவிதை மிகவும் நன்று நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  7. அருமை அருமை வழமை போலவே ! ரசித்தேன் நன்றி.

    ReplyDelete
  8. எல்லாமே அருமையாக இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!