பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்து!

உலகத்து உயிர்களெல்லாம் உய்விக்க
உலாவரும் கதிரோன் அயனத்தைமாற்றி
பயணத்தை தையில் பதிக்கும் வேளை!
அகரத்தின் அழுக்குகளை விலக்கி
நகரத்தின் எழிலினைக் கூட்டி
உலகத்தின் தமிழரெல்லாம் உவப்புடனே
உழவர்களை சிறப்பிக்கும் விழா!

தருமமிகு தமிழர்களின்
பெருமைமிகு பொன்னாள்!
சுற்றமும் நட்பும் சூழ்ந்து
குற்றங்களை கலைந்து ஒற்றுமையாய்
கூடிக் களிக்கும் களிப்பான விழா!

உள்ளத்து அழுக்கினங்களை ஒட்டடை அடிப்போம்!
பள்ளத்து நீராய் தேங்காமல்
வெள்ளத்து நீராய் பெருக்கெடுப்போம்!
திரியிலிட்ட தீபமாய் ஒளிகொடுப்போம்!
தறிகெட்டு மனதை ஒடவிடாது
நெறிபடுத்தி சரித்திரத்தில் இடம்பிடிப்போம்!

மங்கல் பொங்கல் நன்னாள் முதலாய்
மகிழ்ச்சி நிறையட்டும் எங்கும் என்னாளும்!
பெரும்பொங்கல் திருநாளில்
கரும்பாய் வாழ்க்கை இனித்திட  எங்கும்
நன்மை பொங்கிட  எல்லோர் வாழ்வும்

ஏற்றம் பெற எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Comments

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
    http://www.friendshipworld2016.com/

    ReplyDelete
  3. கவிதை அருமை தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இந்தத் தைப் பிறப்பில் தங்களிடம் இருந்து மரபுக்கவிதைகளையும் எதிர்பார்க்கிறோம்.

    தங்களின் கதம்பப்பதிவில் மற்றுமொரு மகுடம்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2