கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
60
1.
கொத்தனார்
கிட்ட நியாயம் கேட்க போனியே என்ன ஆச்சு?
பூசி மெழுகி அனுப்பிச்சிட்டார்!
2.
ஏரியைத்
திறந்தது பத்தி விவாதம் பண்ண சபாநாயகர் ஒத்துக்கலையாம்!
அப்புறம் என்ன?
மொத்த சட்டசபை கதவையும் திறந்து விட்டுட்டாங்க வெளிநடப்புக்கு!
3.
மருந்து
சீட்டை எடுத்துக்கிட்டு போயும் அந்த மெடிக்கல்ல மருந்து தர மாட்டேன்னுட்டாங்களா ஏன்?
நான் பணம் கொண்டு போகலையே!
4.
காலையிலே
சாப்பிடாம கோச்சுக்கிட்டு ஆபிஸ்வந்துட்டா சாயந்திரம் என் வொய்ஃப் சமாதானப்படுத்த ஊட்டி
விடுவா?
பரவாயில்லையே என் வொய்ஃப் உள்ள வரவிடாமா பூட்டி
விடுவா!
5.
பல
தடைகளை கடந்துதான் முன்னேற வேண்டும்னு மன்னர் சொல்றாரே எதுக்கு?
போரில் தப்பித்து ஓடிவருகையில்
ஏற்படும் தடைகளைத்தான் சொல்றாரு!
6.
மன்னரின்
வாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டதா என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே!
கரகாட்டகாரியோடு அவர் ஆட்டம்
போட்டதை ராணியார் பார்த்து தொலைத்துவிட்டாரே!
7.
எக்ஸ்ட்ரா
கவர்லே நிக்கிற பீல்டர் எப்பவும் பந்தை நழுவ விட்டுட்டு இருக்காரே,,,!
ஒரு வேளை “எக்ஸ்ட்ரா கவர்” வாங்கிட்டாரோ
என்னமோ!
8.
ஒண்ணை
நூறா மாத்திரதிலே நம்ம தலைவர் கில்லாடியா? எப்படி சொல்றே?
பத்துரூபா பொங்கல் இனாம் கொடுத்துட்டு
போட்டோ எடுக்க நூறு ரூபா வசூலிச்சிடறாரே!
9.
அவர் போலிச் சாமியாருன்னு எப்படிச் சொல்றே?
துன்பங்களில் இருந்து விடுபெற சரியான “போதை” யை
தேர்ந்தெடுங்கள்னு சொல்றாரே!
10. மன்னா! நம் இளவரசர் எப்போதும் கார்டூன் சேனல்களாகவே
பார்த்துக் கொண்டு இருக்கிறாராம்…!
“போகோ” வென்று வருவான் என்று
சொல்லுங்கள்…!
11. நெசவுத்தொழிலாளியா விஜய் நடிச்சா படத்துக்கு
என்ன தலைப்பு வைப்பாங்க?
“ தறி”ன்னு தான்!
12. அவரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
ப்ளட் குருப் எதுன்னு எழுதிக் கொடுங்கன்னு கேட்டா
வாட்ஸ் அப் குருப்பை எழுதிக் கொடுக்கிறாரே!
13. 2016ல் நாம் ஆட்சியை பிடிப்போம்…..!
கனவு காணனுது போதும் நினைவுக்கு வாங்க தலைவரே!
14. தலைவரை எங்க தேடியும் போலீஸ்ல கண்டுபிடிக்க முடியலையாமே
எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருந்தார்?
சொந்த தொகுதியிலேதான்! அங்கதானே அவரை யாருக்கும்
அடையாளம் தெரியாது.!
15. கோலியை கேப்டனாக்கனுன்னு எல்லோரும் சொல்றாங்களே
எப்பய்யா கோலி விளையாட்டை கிரிக்கெட்ல சேர்த்தாங்க?
தலைவரே… அது விராட் கோஹ்லி!
16. மன்னர் எதற்கு
காதில் பஞ்சு அடைத்துக் கொண்டு உலா வருகிறார்?
அவருக்கு எதிரான கோஷ சத்தம்
அதிகமாகிவிட்டது என்று மந்திரியார் எச்சரித்தாராம்!
17. நிவாரணப் பணம் வாங்கற இடத்திலே ஒரே தள்ளு
முள்ளா போயிருச்சு!
அப்ப நிவா”ரணம்” ஆகிப்போச்சுன்னு சொல்லு!
18. அந்த பேச்சாளர் பேச ஆரம்பிச்சா கெட்ட வார்த்தைகளா
வந்து விழும்…!
அப்ப ரொம்ப “பீப்” புலரான பேச்சாளர்னு
சொல்லுங்க!
19. முதல் நாள்…. முதல் கையெழுத்து…!
ஒண்ணுமில்லே தலைவர் முதியோர் கல்வியிலே சேர்ந்து
இருக்கார் அதுக்குத்தான் இத்தனை பில்டப் பண்றார்!
20. ஆத்திரத்துல நேத்து என் மனைவிகிட்டே கொஞ்சம் வாயை
விட்டுட்டேன்…!
அப்புறம்?
பல்லை பிடுங்கிட்டுத் தான் விட்டா…!
21. அவரு கமல்
ஹாசன் ரசிகரா இருக்கலாம்.. ஆனா பூட்டுக்கடையிலே இப்படியெல்லாம் கேட்க கூடாது…!
அப்படி என்ன கேட்டார்?
“லிப்லாக்” பூட்டு இருக்குதான்னுதான்!
ஜீவி சார் நேற்றைய பதிவில் ஜோக்ஸுக்கு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் சிரிக்காம சொல்லுங்கன்னு கேட்டிருந்தார்...! சிரிக்காம சொல்ல முடியாது போலிருக்கே ஆனா இது சரியா வருமா “நகைப்பூ”
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
“நகைப்பூ”
ReplyDeleteநன்றாக இருக்கிறதே. அருமை சுரேஷ்
வணக்கம்
ReplyDeleteநகைச்சுவை சுவையாத்தான் இருக்கிறது. இரசித்தேன் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நகைப்பூ.... நல்லா இருக்கு!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.
லிப்லாக் பூட்டு. அருமை.
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன் நண்பரே
நன்றி
அனைத்தும் அருமை லிப்லாக் முதற்கொண்டு...
ReplyDeleteஎல்லாமே ரசித்தேன் நண்பரே கமல்ஹாசனை இப்படியும் காலை வாரலாமோ.... ஹாஹாஹா
ReplyDeleteஹா ஹா!
ReplyDeleteஇது கூட நன்றாகத் தான் இருக்கிறது.. போன பதிவு பின்னூட்டத்திற்கு இந்த பதிவில் பதில்.. நானும் இப்படி முயற்சி செய்து பார்க்கிறேன். முன்னேராய் வழிகாட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteநகைப்பூ.. 'கொல்'ன்னு பூத்தமாதிரி ஒரு சிரிப்பு.. சிரிப்பு கூட பெண்டீர் போல் நகை பூணுகிற அழகு! அற்புதம், தங்கள் சொல்லாட்சி!
பீப்புலரான பேச்சாளர் நகைப்பூவை அதிகம் ரசித்தேன் :)
ReplyDeleteஇது அது என்றில்லாமல் அனைத்தையும் ரசித்தேன்! நன்று!
ReplyDelete