தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

ஈரக்காற்று
உஷ்ணமாகியது உடல்!
பனி!

அழைக்காமலேயே
உள்ளேபுகுகிறது தூசு!
சாலையோர வீடுகள்!

கொத்தி தின்றது காகம்
வலிக்காமல் சிரித்தது
வாசலில் கோலம்!

சுற்றி சுற்றி
தேய்ந்து போனது
நிலவு!

சலனப் பட்டது
வாழ்க்கை இழந்தது
நீர்!

பொறுமையின் மரணத்தில்
ஜனனமாகிறது
கோபம்!

மேகப் பொதிகளை
இறக்கிவிட்டது காற்று
மழை!

தொட்டுவிட துடித்தும்
எட்ட முடிவதில்லை!
வானுயர்ந்த கட்டிடங்கள்!

கண்ணை நோண்டியும்
தன்னைத் தந்தது!
நுங்கு!


பல் முளைத்த வானம்!
பார்க்கவந்தன மின்மினிகள்!
பிறைநிலா!

 ஈர்த்ததும்
 இழந்தன உயிர்!
 பழங்கள்!

 புத்தாடை தரித்தன மரங்கள்!
 பூத்து குலுங்கியது!
 வசந்தம்!


 தடங்கள் அழிபட்டது
 தடுமாறிப்போனது!
 வரலாறு!

 பிம்பம் பிரதிபலிக்கும்
 கண்ணாடிகள்!
 குழந்தைகள்!

 கொஞ்சி மகிழ்கையில்
அஞ்சி ஓடுகின்றன துன்பங்கள்!
குழந்தைகள்!

நகர அழுக்குகள்!
நகரமுடியால் உயிர்விட்டன
நதிகள்!

உறங்கிப் போன விவசாயம்!
உயிர்த்து எழுப்பியது
மழை!




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

  1. அனைத்தும் ரசித்தேன் நண்பரே அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை
    அருமை
    அனைத்தும்
    அருமை நண்பரே

    ReplyDelete
  3. நுங்கின் தியாகம் கண்டு ,கண் கலங்கி போனேன் :)

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. அருமை... அருமை... அனைத்தும்...

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    அற்புதமான கவிதை படித்து மகிழ்ந்தேன்.. அருமை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வரலாறு, நதிகள்.... சூப்பர்.

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. அழகான ஹைக்கூக்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2