நொடியிலே படிக்க ரெடியா? நொடிக்கதைகள்!

  
  சரக்கு!

 ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு ரூபாயை வாங்கி சேலையில் முடிந்து கொண்ட காமாட்சி அரிசி, கரும்பு சர்க்கரையை வீட்டில் வீசிவிட்டு  மடமடவென்று நுழைந்தாள் டாஸ்மாக்கினுள்!

இரக்கம்!
   ஒவ்வொரு நாளும் ஒரு பிடி சோற்றுருண்டையை காக்கைக்கு வைப்பார் சண்முகம். காக்காவுக்கு சோறு வைக்காம சாப்பிட மாட்டோம் நாங்க! என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு… மனசுக்குள் ஒரு முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.

ஜல்லிக்கட்டு!
   நம்ம டிரெடிஷன் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கேலியா போயிருச்சு! யாருய்யா அவன் பீட்டா! அவனுக்கு எந்த உரிமை இருக்கு ஜல்லிக்கட்டை தடுக்க! நம்ம அரசாங்கம் அவனுக்கு கைக்கூலியா வேலை பார்க்குது… இப்படியே போனா நம்ம கலாச்சாரமே அழிஞ்சு போயிரும்!  ஜீன்ஸும் பெர்முடாஸும் அணிந்தபடி பீட்ஸா சுவைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் இரு இளைஞர்கள்.

  நன்றிகெட்ட மனுஷங்க!
   இந்த மனுஷங்க ரொம்ப மோசம்பா! என்னை பத்தி கதை கதையா எழுதறாங்க? ஆனா கிட்டப் போனா துரத்திவிடறாங்க!
 அவங்க நம்மளை வைச்சு எவ்ளோ சம்பாதிக்கிறாங்க ஆனா நமக்குன்னு ஒரு பைசா செலவழிச்சிருப்பாங்களா?
  அட போப்பா! வேப்பிலையிலும் திருநீறிலேயும் நம்மை அடிக்காம இருந்தா போதாதா? 
   இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

  ஒப்பீடு!
   வெற்றிலை பாக்கு பழங்கள் ஸ்வீட் காரத்தோடு தட்டில் வைத்து தனது மகனின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார் வேலாயுதம். அவசியம் வந்துடனும்! என்றார். கல்யாணத்திற்கு சென்று கவரையும் கொடுத்து திரும்பிய வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியும் பத்திரிக்கை பூ பழம் நம்ம வீட்டுக்கு வந்தது என ஒரு ஐநூறு செலவாயிருக்கும். அதான் நான் ஆயிரமா மொய் வைச்சுட்டு வந்தேன்.  அங்கே சம்பந்தம் பேசிக்கொண்டிருந்தார். பத்திரிக்கை வைக்கவே எனக்கு ஆயிரம் செலவாச்சு! அதே ரூபாயை மொய்யா எழுதி இருக்கான் பிசாத்து பய…!

சிபாரிசு!

    எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.

  சில்லறை!
    அந்த குளிர்பான கடையில் பாதாம் மில்க் ஒன்றை அருந்திய ராம் இருபது ரூபாய் நோட்டை தர, சார் சில்லறை இல்லீங்களே! ஒரு சாக்லெட் தந்திடட்டுமா? என்ற கடைக்காரரிடம் என்ன சார் வியாபாரம் பண்றீங்க சில்லறை கூடவா மாத்தி வைச்சுக்க மாட்டீங்க சரி கொடுத்து தொலைங்க என்று எரிச்சலாக சாக்லேட்டை வாங்கி பையில் போட்டுக்கொண்ட ராம் நின்றிருந்த பேரூந்தில் ஏறினான். எல்லோரும் சரியா சில்லறை எடுத்து வைச்சுக்கங்க 50ம் நூறுமா நீட்டாதீங்க என்றான்.

போதை!
   எப்பப் பாரு போகோ சேனல், விட்டா டோரா… வேற எதுவும் பார்க்க மாட்டேங்கிறா? வோம் ஒர்க் கூட செய்யாம அப்படி என்ன டீவியோ…? அப்படியே அடிக்ட் ஆயிட்டா..
  தன்னுடைய மகளை பற்றி இரண்டு மணி நேரமாய் பேஸ்புக் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா..

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் அருமை சுரேஷ்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை நண்பரே டாஸ்மாக்கும், பேய்க்கதையும் ஸூப்பர்

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை.... ! ரேசன் கடை, பேய் கதை, திருமண அழைப்பு, கண்டக்டர் கதை, கான்ட்ராக்டர் கதை.. எல்லாமே அருமை...!

    ReplyDelete
  4. இரண்டாவது கதை யதார்த்தம்! :(

    ReplyDelete
  5. கதைகள் ஒவ்வொன்றும் அருமை!

    ReplyDelete
  6. senriyoo கதைகள் போலிருக்கே :)

    ReplyDelete
  7. நொடிக் கதைகள் அனைத்தும் அருமை ! ஒப்பீடு மற்றும் போதை செம !

    ReplyDelete
  8. கதைகள் ஒவ்வொன்றும் அருமை..அருமை.....அருமை!

    ReplyDelete
  9. ரசித்தேன். விகடனுக்கு அனுப்பலாமே...

    ReplyDelete
  10. ஆஹா!! அருமை இங்கும் ஒன்று ஹஹஹஹஹ் முகநூல்!!!!

    செமையா எழுதறீங்க சுரேஷ்...பாராட்டுகள்!

    ReplyDelete
  11. /// இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு…\\\ அற்புதம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2