தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


  சூரியன் மறைவு!
  துக்கம் அனுஷ்டித்தது பூமி!
  இருள்!

  ஓய்வு நேரத்தில்
  ஓயாத இரைச்சல்!
  சில்வண்டுகள்!

  கிழித்துக் கொண்டே இருந்தார்கள்
  அழித்துக் கொண்டிருந்தது
  நாட்காட்டி!

  கோலம் கலைக்கையில்
  ரசிக்கிறார்கள்!
  குழந்தை!


  பூச்சூடியது
  பூ!
  கோலத்தில் பூசணி!

  அணைத்ததும்
  விரட்ட நடவடிக்கை!
  பனி!

  நிசப்தம்
  அச்சுறுத்திக் கொண்டிருந்தது
  கடிகார முள்ளின் ஓசை!

  காட்டிக் கொடுப்பவனை
  கையில் கட்டிக் கொண்டார்கள்!
  கடிகாரம்!
 
 வெல்ல நிவாரணம்
 வீட்டில் முற்றுகையிட்டன
 எறும்புகள்!

 எவ்வளவு சாப்பிட்டும்
 பெருக்கவில்லை!
 பிள்ளையார் எறும்புகள்!

புத்தாடை கட்டின சுவர்கள்
பொங்கல் பரிசு!
வெள்ளையடிப்பு!

களவாடப்பட்ட நதிகள்!
கண்ணீர்விட்டது மேகம்!
மழை வெள்ளம்!


முத்தெடுத்த புற்கள்!
மொத்தமாய் விழுங்கியது சூரியன்!
பனி!

நெருப்பு அணைந்ததும்
கரியானது பூமி!
இருள்!

குற்றம் செய்யாமல்
பழி ஏற்றது
உப்பு நீர்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கடிகாரம், வெல்ல நிவாரணம் ஸூப்பர் நண்பரே

    ReplyDelete
  2. தங்கள் திறனை வியந்து நிற்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  3. பழி ஏற்ற உப்பு நீர்...அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை சகோ. நாட்காட்டி, பூசணி, உப்புநீர் மிகப் பிடித்தது.

    ReplyDelete
  5. அனைத்துமே அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    அருமையாக உள்ளது இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. ஹைக்கூக்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  8. களவாடப்பட்ட நதிகள்!
    கண்ணீர்விட்டது மேகம்!
    மழை வெள்ளம்!

    அருமை
    அருமை
    உண்மை

    ReplyDelete
  9. தங்களது கவிதைக் கோலத்தை
    சிறுவர்களும் கலைக்க முற்பட மாட்டார்கள்
    அருமை நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. எல்லாமே மிக மிக அருமை.

    ReplyDelete
  11. அருமை அருமை சுரேஷ் அனைத்தும்!! மிக மிக அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2