“ஆன்லைன்”
“ஆன்லைன்”
குமார் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் கடையான
“ஸ்டைல் பேன்ஸி”யின் கண்ணாடிக் கதவுகளை திறந்து தாங்கி கட்டைகளின் உதவியுடன் உள்ளே
நுழைய கல்லாவில் அமர்ந்திருந்த சதீஷ் நிமிர்ந்தான்.
குமார் மெல்லமாக
நடந்து கல்லா அருகில் வந்து நின்றான். அவனது கையில் மஞ்சள் பை ஒன்று இருந்தது. “தம்பி!
அப்பா இல்லீங்களா?” என்றான். சதிஷுக்கு எரிச்சலாக இருந்தது. சகவயதுடைய தன்னை அவன் தம்பி
என்று அழைத்தது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. முகத்தை கடுப்பாக்கிக் கொண்டு “உங்களுக்கு
என்ன வேணும்?” என்றான்.
”உங்க அப்பாவை பார்க்கணும்!”
“அவர் லஞ்ச்சுக்கு வீட்டுக்கு போயிருக்கார்! இரண்டுமணிக்குத்தான்
வருவார்!”
“ அடடே! பண்ணிரண்டு மணிக்குள்ளே வரச்சொல்லி இருந்தார்!
நான் தான் லேட் பண்ணிட்டேன்!”
“ எதுக்கு வரச்சொன்னார்?”
“ தம்பி! நான் இந்த காம்ப்ளக்ஸிலே இருக்கிற கடைகள்,
மற்றும் இந்த ஊரிலே சில தெருவில இருக்கிற வீடுகளுக்கு ஈ.பி பில் கலெக்ஷன் பண்ணிப்
போய் ஈபி ஆபிஸிலே கட்டிருவேன். ஒரு கார்டுக்கு பத்துரூபா சர்வீஸ் சார்ஜ் உங்களுடைய ரெண்டு கடைங்க மற்றும் வீட்டோட ஈ.பி பில்லை
அப்பா இன்னிக்கு கட்டறதா சொல்லி இருந்தார்! அது விஷயமாத்தான்…!”
குமார் முடிக்கும் முன்னரே சதீஷ் குறுக்கிட்டான்.
”இதுவரைக்கும் கட்டிட்டு இருந்தார் சரி! இனிமே கட்ட மாட்டார். நான் ஆன் லைனிலே பே பண்ணிக்கிறேன்!
மூணு பில்லுக்கு முப்பது ரூபா மிச்சமாகும்!” முப்பது ரூபா மிச்சமாகும் என்று உரக்கவே
அழுத்தமாகச் சொன்னான்.
குமாரின் முகம் அதைக்கேட்டு கொஞ்சம் வாடிப் போனது.
”இல்லே தம்பி! உங்க அப்பா என்கிட்டே கொடுக்கிறதா சொல்லியிருந்தார்… அதான்…!”
“ அதான் சொல்லிட்டேன் இல்லே! நான் அப்பாக்கிட்டே
சொல்லிக்கிறேன்! நாடு எவ்வளவோ டெக்னாலஜியிலே முன்னேறி இருக்குது இன்னும் இப்படி பணத்தையும்
டைமையும் வேஸ்ட் பண்ண எனக்கு விருப்பம் இல்லே!” முகத்தில் அடித்தாற் போல சொல்லி முடித்தான்
சதீஷ்.
குமார் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் மவுனமாக தாங்கு
கட்டைகளை ஊன்றியபடி வருத்தமாக கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.
மதியம் இரண்டு மணி!
சதிஷின் தந்தை மாசிலாமணி உள்ளே நுழைந்தார். நுழையும்
போதே “என்னைத் தேடி யாராவது வந்தாங்களா?”
என்றார்.
“இல்லையேப்பா!”
“இல்லே
ஈபி பில் தர்றதா சொல்லி குமாரை வரச்சொல்லி
இருந்தேன். அதை மறந்து வீட்டுக்குப் போயிட்டேன்.”
சதிஷ் இகழ்ச்சியுடன், “ அவரையா? நான் திருப்பி அனுப்பிச்சிட்டேன்!
எதுக்குப்பா வேஸ்டா ஒரு முப்பது ரூபாய் கொடுக்கணும். நம்மகிட்ட நெட் இருக்கு , ஆன்
லைன் பேங்கிங் வசதி இருக்கு அப்புறம் எதுக்கு இந்தமாதிரி ஈபி பில் செட்டில் பண்ணனும்?
ஒரே நிமிஷத்துல நான் ஆன்லைன்ல கட்டிடறேன்.”
“சதிஷ்!
இன்னிக்கு உலகமே ஆன்லைன்ல மார்க்கெட்டிங் பண்ணுது! நாம விக்கிற பொருளெல்லாம் கூட ஆன்லைன்ல
இன்னும் சீப்பா கிடைக்குது! அப்புறம் நாம எதுக்கு கடை போடனும்! தேவைப்பட்டவங்க ஆன்லைன்ல
வாங்கிப்பாங்க இல்லே!”
“நேரில
பாத்து வாங்கிறமாதிரி ஆன்லைன்ல முடியுமா? அப்பா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறீங்க?”
“இருப்பா…!
ஆன்லைன்ல வாங்கிறவங்களும் இருக்காங்க! நேரில் பார்த்து திருப்தி பட்டு வாங்கிறவங்களும்
இருக்காங்க இல்லையா? நான் ஈபி விஷயத்துல இப்படி குமார் கிட்டே கட்டணும்னு நினைக்கறேன்!
மாற்றுத் திறனாளி குறைஞ்ச அளவே படிச்சவர் சுயமா எதாவது செய்து சம்பாதிக்கணும்னு இப்படி
சின்ன சின்ன வேலைகள் செய்து மாச வருமானம் ஈட்டறார். நீ ஆன்லைன்ல பணம் எடுத்தா பேங்க்ல
சர்வீஸ் சார்ஜ் போடறது இல்லையா? அது போலத்தான் இதுவும்! பத்து ரூபா நமக்கு பெரிசு இல்லே!
ஆனா இதையே நம்பி இருக்கிற குமாருக்கு பெரிசு. நம்மளை மாதிரி நாலு பேரு திருப்பி அனுப்பிட்டா
அவருக்கு பேரிழப்பு ஆயிரும். நம்மளாலே முடிஞ்ச ஒரு சின்ன உதவிதான் இது. நீ தப்பு பண்ணிட்டியே…
!”
“ ஸாரிப்பா! இப்பவே குமாருக்கு போன் பண்ணுவோம்!எங்க இருக்காருன்னு கேட்டு நானே அவர்கிட்ட பில் தொகையை எடுத்திட்டு போய் கொடுத்திடறேன்! என் ப்ரெண்ட்ஸ் கிட்டேயும் அவரை அறிமுகப்படுத்திடறேன்!
இது நல்ல முடிவு! கனிவாய் சிரித்தார் மாசிலாமணி!
இது நல்ல முடிவு! கனிவாய் சிரித்தார் மாசிலாமணி!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
கதை மனதை வருடியது நண்பரே அருமை பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
கதை அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவர் மாற்றுத் திறனாளி என்பதால் சதீஷ் குமாருக்கு ஃபோன் பண்ணாமல் நேர்லயே போய்க் கொடுத்துட்டு வந்துடலாம்!
ReplyDeleteஉண்மைதான் ஐயா! இப்போது முடிவை மாற்றிவிட்டேன்!
DeleteThank you. நல்ல முடிவு. சதிஷின் பிராயச்சித்தம்!
Deleteதமிழர் திருநாள் வாழ்த்துக்களை
ReplyDeleteமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
ஸ்ரீராம் சார் சொன்னது சிறப்பு...
ReplyDeleteதற்போது மாற்றிவிட்டேன்!
DeleteThanks DD.
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
கதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
செம கதை சுரேஷ்! அருமை. மனதைத் தொட்டது...
ReplyDeleteஅருமையான கதை. அனைவருக்கும் ஒரு பாடமும் கூட!
ReplyDelete