தளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ
கவிதைகள்!
கொம்பு சீவி விட்டார்கள்!
உடைந்து போனது!
ஜல்லிக்கட்டு!
கரும்பும் சர்க்கரையும்
வீடு நுழையும்
முன் நுழைந்தது
டாஸ்மாக் சரக்கு!
வாட்ஸ் அப் வாழ்த்துக்களோடு
துவங்கி
பேஸ்புக் வணக்கத்தோடு
முடிந்து போனது
பொங்கல் கொண்டாட்டம்!
தூர்ந்த ஏரிகள்
துரத்தப்பட்டனர்
மக்கள்!
சென்னை வெள்ளம்!
டோராவும் பீமும்
சொந்தமானதால்
வேறாகிப் போகின்றன
குழந்தைகளின் உறவுகள்!
பண விளைச்சல்!
பசியாற்றமறந்தன
விலைநிலங்கள்!
வீட்டுமனை வியாபாரம்!
எண்ணெய் வழியும்
சிலை!
ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தான்!
பரட்டைத்தலைச்
சிறுவன்!
மேம்பாலக் கட்டுமானங்கள்
மேம்படுத்துகின்றன
வடமாநில தொழிலாளர்வாழ்க்கை!
விதைக்கப்பட்டன
மரபணுமாற்ற பயிரினங்கள்!
உலைவைத்துக்கொண்டது விவசாயம்!
விதையே இல்லாமல் காய்கனிகள்!
இனித்தாலும் புளித்துப்போனது
விவசாயம்!
அரக்கனின் மாயவலை
சிக்கிய பிள்ளைகள்!
சிதைந்தது அரசுப்பள்ளி!
அறுபட்ட மரங்கள்
அகன்ற சாலைகள்!
வேகமாய் துரத்தும் மரணம்!
மனிதர்களின் உழைப்பை
களவாடிவிட்டன
இயந்திரங்கள்!
சரிந்தாலும் முட்டுக்கொடுத்து
நிமிர்த்தப்படுகின்றது
பெட்ரோல் விலை!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
புளித்துப்போனது சரி தான்...
ReplyDeleteநல்ல கவிதைகள்..
ReplyDeleteஅருமையான சென்ரியூ சுரேஷ்! அருமை!
ReplyDeleteஅனைத்தும் அருமை சகோ
ReplyDeleteபல விசயங்கள் முட்டுக்கொடுக்கப் படுகின்றன என்பது வேதனை
அத்தனையும் அருமை.
ReplyDeleteஅனைத்தும் அருமை. முதல் கவிதை அபாரம். நன்றி.
ReplyDeleteஎண்ணெய் வழியும் சிலை!
ReplyDeleteஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தான்!
பரட்டைத்தலைச் சிறுவன்!
அருமை நண்பரே
ம் ...
ReplyDeleteரசித்தேன் அனைத்தையும்.
ReplyDeleteஅனைத்துமே அருமை எனினும், மூன்றாவதும், ஐந்தாவதும் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. :(
ReplyDeleteஅருமையான கவிதை துணுக்குகள்.
ReplyDelete