கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 59

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 59


1.   மன்னர் போருக்கான மூஸ்தீபுகளை பண்ண ஆரம்பித்துவிட்டாராமே?
ஆமாம்! ஆமாம்! பதுங்கு குழிகள், சுரங்கபாதைகள், காலணிகள் எல்லாம் ரெடியாக பழுது பார்க்கும்படி சொல்லிவிட்டார்!

2.   தலைவர் இன்னமும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே?
அன்னைக்கு கொடுத்த அதே பத்து ரூபாயை இன்னிக்கும் இனாமா கொடுக்கிறதை வச்சுத்தான்!

3.   முதலாளிக்கிட்டே பொங்கல் இனாம் கேட்டியே என்ன சொன்னார்?
  இனிமே நீ இங்கே நிற்க “வேணாம்”னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு!

4.   அந்த டாக்டர்கிட்டே ஏன் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணிக்க கூடாதுன்னு சொல்றே?
பண்ணிக்கிட்டா அதோட வாழ்க்கையே “குளோஸ்” ஆயிருமே!

5.   உங்க ஹஸ்பெண்டுக்கு பார்வையிலே கோளாறுன்னு கூட்டிட்டு வந்திருக்கீங்களே போனவாரம்தானே ஆபரேஷன் பண்ணி எல்லா டெஸ்டும் எடுத்தோம்…!
ஆபரேஷனுக்கு முன்னாடி கண்ணே மணியேன்னு என்னை கொஞ்சிக்கிட்டிருந்தவர் இப்ப சனியனே மூதேவின்னு திட்டிக்கிட்டு இருக்காரே!

6.   வெள்ளம் வந்ததும் தலைவருக்கு தலை கால் புரியலை…!
  அப்புறம்…?
வந்த நிவாரணம் எல்லாத்தையும்  “வாரிச்சுருட்டிக்கிட்டு” கிளம்பிட்டாரு!

7.   மன்னா! எதிரியின் படை தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்டது!
  மந்திரியாரே அப்படியானால் விட்டு விடலாமா ஜூட்…!


8.   தலைவர் ஜெயிலுக்குள்ளே பெரிய கலாட்டா பண்ணிட்டாராமே…?
  ஆமாம்…! சாதா களியெல்லாம் என்னால சாப்பிட முடியாது “ கதகளி” தான் வேணும்னு அடம்பிடிச்சாராம்!

9.   தலைவர் எதுக்கு கூட்டத்துல தனக்கு இவ்ளோ நெட் பேலன்ஸ் டேட்டா இருக்குன்னு புள்ளிவிவரம் சொல்றாரு…?
” அவரு அப்டேட்டா” இல்லைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டு இப்படி பேசிக்கிட்டிருக்காரு!

10.  தன் கட்சி எம்.எல்.ஏக் கள் விலை போறதை தடுக்க தலைவர் ஒரு ஐடியா பண்ணிட்டாரு…!
என்ன பண்ணாறு..?
  ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ஒரு ரேட் அவரா பிக்ஸ் பண்ணி ஏலத்துல விட ஏற்பாடு செஞ்சிட்டாரு..!

11. படத்துல பதினெட்டாவது முறையா அரியர்ஸ் எழுதி பாஸ் பண்றாரு நம்ம ஹீரோ?
“ கஜினி முருகன்”னு சொல்லுங்க!


12. வெள்ள பாதிப்புல இருந்து நம்ம தலைவர் இன்னும் மீளவே இல்லே போலிருக்கு…!
   எப்படிச் சொல்றே?
வடியட்டும், விடியட்டும்னு அறிக்கை விடறாரே!

13. புலவர் ஏன் வருத்தமாக இருக்கிறார்?
மன்னரை கலாய்த்து பாடியதால் வாட்சப் குருப்பில் இருந்து மன்னர் புலவரை நீக்கி விட்டாராம்!

14. எதிரிகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள் தளபதியாரே…!
  உங்களைப் பற்றி இவ்வளவு மீம்ஸ் கிரியேட்டிவ் பண்ணி இருக்கிறார்களே அதை வைத்துத்தான்!

15. டாடி! நான் ஒரு பையனை லவ் பண்றேன்…!
பையன் எப்படி…?
கையை வச்சுக்கிட்டு ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டேங்கிறார் டாடி!

16. நம்ம தலைவரோட முதுகு இப்படி வளைஞ்சிகிட்டே இருக்குதே… எப்பவுவே இப்படித்தானா…?
  ஆமாம்…! ஆமாம்…! அதனாலதான் அவரோட வாழ்க்கை எப்பவுமே நிமிர்ந்துகிட்டே இருக்கு!

17.  வாரத்துல ஆறு நாள் வீட்டில எல்லோருக்கும் நான் தான் சமைச்சு போடனும்.. ஏழாவது நாள்…
  உங்க வொய்ஃப் சமைப்பாங்களா…?
அவ கூட்டிட்ட வர்ற கெஸ்ட்டுக்கும் சேர்த்து சமைக்க வேண்டி இருக்குன்னு சொல்ல வந்தேன்.

18.  நம்ம ஏட்டையா கடமை தவறாத போலீஸ்னு எப்படி சொல்றே கபாலி…?
மழை வெள்ளம் வந்தப்ப கூட நீந்திக் கிட்டு வந்து மாமூல் வாங்கிட்டு போனாரே அதை வச்சுத்தான்!

19.  எதிர்க் கட்சிகள் எழுப்பும் புகாரைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை…!
   திஹார் எப்படியிருக்குங்கிறதுதானே நம்ம கவலை தலைவரே!

20. எதிரி மன்னன் நோகாமல் நுங்கு தின்கிறான் மன்னரே…!
  எப்படி?
நாம் அனுப்பும் படைகளை எல்லாம் அவன் ஸ்டிக்கர் ஒட்டி அவனது படையில் சேர்த்துக் கொள்கிறான்..

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்த்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




      

Comments

  1. பெரும்பாலும் இப்படி துணுக்குகள் எழுதுபாவர்கள் சிந்திக்கும்படியகவும் சிரிக்கும்ப்டியாகவும் எழுதுவார்கள்
    சிரிப்பது எழுத்தை பார்த்து படித்ததால் வரும் சிரிப்பு சிந்திப்பது இது இதற்குமுன் எந்த இதழில் வந்தது என்பதுபற்றி .... அப்படி எல்லாம் இல்லாமல் உண்மையில் சிரிக்கும் படியாக இருந்தது பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஹாஹாஹாஹா, அனைத்தும் அருமை!

    ReplyDelete
  4. அனைத்தும் ரசித்தேன் நண்பரே ஸூப்பர்

    ReplyDelete
  5. ரசித்தேன் நண்பரே!

    ReplyDelete
  6. ஹஹஹஹ் ரசித்தோம் சுரேஷ்...

    ReplyDelete
  7. கொஞ்சம் என்ன, நிறையவே சிரிக்க முடிந்தது சுரேஷ் சார்!

    சிரிக்காமல் சொல்லுங்கள்.. ஜோக்ஸ் என்பதற்கு தமிழில் என்ன?

    நகைச்சுவை?.. சிரிப்பு?.. தமாஷ்? (தமிழில்லையோ?) கலகல?

    ஊஹூம்.. எதுவுமே குட்டியாய், ஜோராய் -- ஜோக்ஸ் மாதிரி இல்லையே?..

    இல்லை, ஜோக்ஸ் என்கிற வார்த்தைப் பழக்கப்பட்டு விட்டதால் அப்படித் தோன்றுகிறதா?

    ReplyDelete
  8. கடைசி .... கலாய்ப்பு...
    ரசித்தேன் சுரேஷ்.

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு தோழர் தொடருங்கள்

    ReplyDelete
  10. சிரித்தேன், ரசித்தேன். பத்தாம் எண் ஐ பி எல் பாதித்த தலைவர் போலும்!

    ReplyDelete
  11. ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. கடமை தவறாத ஏட்டையா நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து விட்டார் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2