பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!
பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்! ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வங்காள கிராமத்துல பாட்டி ஒருத்தங்க வசிச்சு வந்தாங்க. அவங்க ரொம்ப ஏழை! ஏதோ தன்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு அதுல வருகிற வருமானத்துல பிழைச்சு வந்தாங்க. ஒரு நாளு அந்த பாட்டி வேலை செஞ்சதுக்கு கூலியா கொஞ்சம் கோதுமை மாவு கிடைச்சுது. பாட்டி அதை பிசைஞ்சு ஒரு ரொட்டி செஞ்சாங்க. அதை ஒரு தட்டில் வைச்சுட்டு ஏதோ வேலையா திரும்பினாங்க. அப்ப ஒரு காக்கா உள்ளே நுழைஞ்சு அந்த ரொட்டியை தூக்கிக்கிட்டு பறந்துருச்சு! பறந்து போய் பக்கத்தில இருந்த மரத்தில இருந்த கூட்டுல வைச்சுருச்சு. ரொட்டியைக் காக்கா தூக்கிப் போனதை பாட்டி பார்த்துட்டாங்க! ”காக்கா! காக்கா! என்னோட ரொட்டியைத் திருப்பிக் கொடுத்திடு!” அப்படின்னு பாட்டி கேட்டாங்க. “ தரமுடியாது! நான் சாப்பிடப்போறேன்!” அப்படின்னு சொல்லிருச்சு காக்கா. பாட்டி பாவம், பசியோட இருந்தாங்க, திரும்பவும் வேற ரொட்டி செய்ய மாவும் இல்லை! நேரமும் இல்லை. அதனால் காக்கா உக்காந்திருந்த மரத்துக்கிட்டே “மரமே! மரமே! நான் ரொம்ப பசியாய்...