கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 46

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 46


1.    நீ என்ன பெரிய பருப்பா?ன்னு இனிமே யாரையும் கேக்க முடியாது போலிருக்கே!
ஏன்?
பருப்பு விலை எல்லாம் கிலோ 150 ஐ தாண்டிருச்சே!

2.   தலைவர் கம்ப்யூட்டர் பழக ஆரம்பிச்சது தப்பா போச்சு!
  ஏன்?
 “குரோம்” பேட்டை நம்ம ஏரியாவாச்சே! கூகுள் காரன் கிட்டே குரோம் பிரவுசர் பேர் வைச்சதுக்கு கேஸ் போடலாமான்னு  கேக்கறார்!

3.    தலைவருக்கு கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் மேல ரொம்ப ஆர்வம்னு எப்படி சொல்றே?
2016ல் முதல்வர் ஆயிருவோம்னு நம்பிக்கிட்டு இருக்காரே!

4.   மதுவிலக்குக்கு எதிரான போராட்டத்தில் தலைவர் ஏன் கலந்துக்க மறுக்கிறார்?
இந்திய “குடிமகன்”களுக்கு எதிரா அவர் எதுவும் செய்ய மாட்டாராம்!


5.   கள்ள ஓட்டு போட்டு ஜெயித்துவிட்டதாக பேசும் எதிர்கட்சியினரை ஒன்று கேட்கிறேன்! அதற்கு எத்தனை நல்ல நோட்டுக்கள் செலவானது என்று உங்களுக்குத் தெரியுமா?

6.   அமைச்சரே போரென்று வந்தால் புயலென்று புறப்பட்டுவிடுவார்கள் நமது வீரர்கள் என்று சொன்னீர்களே! இப்போது என்ன?
ஆம் மன்னா! நாட்டை விட்டு புயலாக பறந்துவிட்டார்கள்!


7.   மன்னர் ஏன் புலவரை சிறையில் அடைக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்?
உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் மன்னரை பார்த்து, “ தேறா மன்னா!” என்று கவி பாடியிருக்கிறார்!

8.   சிக்கனத்தை பத்தி பேச எதுக்கு கவர்ச்சி நடிகையை கூப்பிட்டு இருக்காங்க?
அவங்கதான் உடை சிக்கனத்தை கடை பிடிக்கிறாங்களே!

9.   டாக்டர் இப்ப அட்மிஷன் பண்ண பேஷண்டுக்கு உடனடியா ஆஞ்சியொ பண்ணனும்னு ஏன் சொல்றீங்க?
ரொம்ப நாளா வருமானம் இல்லாம நம்ம ஆஸ்பிடல் காஞ்சியே கிடக்கே அதான்!

10. அந்த பேட்ஸ்மேன் ஏன் கையில பேட்டுக்கு பதிலா ஸ்டிக்கை எடுத்துக்கிட்டு வரார்?
அவரு நைட் வாட்ச் மேன் ஆச்சே!

11.  மன்னர் ஏன் இப்படி ஓய்ந்து போய் கிடக்கின்றார்?

போரில் எதிரி பிரித்து மேய்ந்து விட்டானாம்!

12. 24 மணி நேரம் கழிச்சுத்தான் எந்த முடிவையும் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்றாரே! பேஷண்ட் அவ்ளோ சீரியஸா இருக்காரா?
நீ வேற… இவர் ஹாஸ்பிடல் கட்ட வாங்கின லோனை கட்டறதுக்கு 24 மணிநேரம் பாக்கியிருக்கு! அந்த டென்ஷன்ல பேசறார்!

13.  என் பொண்டாட்டி சமைச்சி எதுவும் குப்பைத்தொட்டிக்கு வீணா போனது இல்லே…!
  அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?
அட நீ ஒண்ணு…! கெட்டுப்போனாலும் விட்டுக் கொடுக்காம நானே சாப்பிட்டுருவேன்னு சொல்ல வந்தேன்!

14. உன்னோட வைஃப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தது தப்பா போச்சா ஏன்?
வைஃபை  ஆன் பண்ணி என் டேட்டா எல்லாத்தையும் ஸ்மார்ட்டா க்ளோஸ் பண்ணிட்டாளே!

15. போர் என்றதும் எல்லோரும் மன்னரை நிர்க்கதியாக விட்டு விட்டு போய்விட்டார்களாம்!
அப்புறம்?
அப்புறமென்ன? சரணாகதி அடைந்துவிட்டார்!


16. மன்னா! எதிரி நாட்டு இளவரசியோடு இளவரசர் காதலில் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது!
வாலண்டியராக போய் வம்பை இழுத்து வருகிறான் என்று சொல்லுங்கள்!

17.  சேடிப்பெண்களை மன்னர் வரும்போது தள்ளி நிற்க மகாராணியார் உத்தரவிட்டிருக்கிறாராமே!
இல்லாவிட்டால் மகாராஜா கிள்ளி விளையாட ஆரம்பித்து விடுகின்றாராமே!

18.   வம்சத்தை பார்த்துட்டுத்தான் கண்ணை மூடணும்னு சொல்லிக்கிட்டிருக்காங்களே உங்க அம்மா சீக்கிரம் ஒரு வாரிசை பெத்து கொடுத்திர வேண்டியதுதானே!
அவங்க சொல்லிக்கிட்டிருக்கிறது டீ வீ சிரியல் வம்சத்தை!

19. அந்த டைரக்டரை ஜெயில்ல போட்டுட்டாங்களாமே! ஏன்?
இத்தனை நாள் கதையை மட்டும் திருடிக்கிட்டு இருந்தவரு ஒரு சேஞ்ச்சுக்கு சிலையை திருடி மாட்டிக்கிட்டாராம்!

20.  டவர் கிடைக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே! எந்த மொபைல் நெட் ஒர்க் யூஸ் பண்றாரு?
எந்த நெட் வொர்க்கையும் அவர் கேக்கலை! போராட்டம் பண்றது டவர் சிக்கலைன்னு சொல்றார்!

21.  உங்க பையனை வீட்டுப்பாடம் ஏன் எழுதிட்டு வரலைன்னு கேட்டா உங்களை கை காட்டறானே ஏன்?
சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு என்னால வீட்டுப்பாடத்தையும் எழுதி கொடுக்க முடியலை மிஸ்!

22.  சாதா வார்டுக்கும் ஸ்பெஷல் வார்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்!
சாதா வார்டுல நீங்க டாக்டரை  துரத்திக்கிட்டேஇருக்கணும்! ஸ்பெஷல் வார்டுல டாக்டர் உங்களை  துரத்திக்கிட்டே இருப்பார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் அருமை ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
  2. இந்த நகைச்சுவை ஏரியாவில் நீங்கள் செமையா கலக்குறீங்க... பாரட்டுக்கள் சுரேஷ்.....

    ReplyDelete
  3. பருப்பு விலையோடு சேர்த்து வெங்காயத்தையும் உரித்து பார்த்தேன், அழுகை வந்தது.
    காமெடிக் கதம்பம் முழுவதுமே வீசியது சிரிப்பு வாசம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. எல்லா நகைச்வையும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. நகைச்சுவை சுவையாய் அருமை...

    ReplyDelete
  6. அருமை நண்பரே
    ரசித்த்ன் சிரித்தேன்
    நன்றி

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை! ரசித்து சிரித்தோம் சுரேஷ்! அருமை..

    ReplyDelete
  8. தொடக்கமே அசத்தல்,,,,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வழக்கம்போலவே அனைத்தும் அருமை.

    ReplyDelete
  10. அனைத்துமே அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!