தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

கூட்டி வந்தாலும்
கழட்டிவிடப்படுகிறது!
வாசலில் செருப்பு!

மேகங்கள் கூடுகையில்
கறுத்தது
வானம்!


கல்லெறிந்தும்
அழவில்லை
குளம்!

தொலைந்து போன பயம்
மீண்டும் வந்தது
நாய் குரைப்பு!


வாழ்க்கை இழந்தன
மீன்கள்
வட்டமிட்ட பருந்துகள்

அருகில் இருந்தும்
தூர நிறுத்துகிறது
மனசு

வசை வாங்கியும்
அரவணைத்தது தாயை
குழந்தை!

மாவில்லாமல் 
கோலம் போட்டன
மரத்தி்ல் பறவைகள்!

தொடர் மழை
புதிதாக குடிபுகுந்தது
ஈரம்!

சூரியன் வருகை
வெட்கப்பட்டு ஒளிந்துகொண்டது
ஈரம்

அலைபாயும் போது
விலை போகிறது
மனசு


கொம்பு ஓலையின்றி
கூரை பின்னியது
கொடி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஸூப்பர் நண்பரே மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
 2. வழக்கம்போல் ஒவ்வொன்றும் அருமை. நன்றி.

  ReplyDelete
 3. அனைத்தும் நன்று. அதிலும் முதல் ஹைக்கூ ஹைலைட்.

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அனைத்தும் அருமை சுரேஷ் டாப் ..செருப்பு...

  பாராட்டுகள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!