குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!
குரோதம் கொண்ட
குரோம் பிரவுசர்!
கடந்த வெள்ளியன்று
வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று
இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு போட்டிருந்தேன். வரலஷ்மி
மா இண்டிக்கு ராவம்மா…! என்ற பாடலை யூடியுபில் பார்த்தேன். இன்றைய தினத்திற்கு இது
பொருத்தமாக இருக்கும் என்று யூ டியுப் டவுன் லோடரில் தரவிறக்கினால் கொஞ்சத்தில் தரவிறங்க
வில்லை.
ஏதோ எரர் காட்டிக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு
விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போயிருக்க வேண்டும். அங்கேதான் என் கை சும்மா இருக்கவில்லை.
கூகுளில் சர்ச் செய்து வேறு ஒரு யு டியுப் டவுண்லோடரை இன்ஸ்டால் செய்து அந்த பாடலை
டவுண்லோடிட்டுவிட்டேன்.
மாலையில் ஏழு மணி அளவில் பதிவிட்டு கொள்ளலாம்
அதுவரை சக பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம் என்று எண்ணி பதிவுகளை வாசித்து கருத்திட
ஆரம்பித்தேன். அப்படியே யாதோ ரமணி அவர்கள் தளம் சென்றதும் விளம்பரம் ஒன்று குறுக்கிட்டது.
இவர் தளத்தில் இப்படி ஆகாதே என்று அடுத்த தளம் சென்றாலும் படிப்பதற்குள்ளேயே விளம்பரம்
ஆக்ரமித்து அதை குளோஸ் செய்தால் அடுத்த பக்கத்தில் திறக்க ஆரம்பித்துவிட்டது.
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயர்பாக்ஸ்
பிரவுசருக்குச் சென்று ஓப்பன் செய்தால் இப்படி
விளம்பரம் குறுக்கிடவில்லை. பிரவுசரில்தான் கோளாறு என்று குரொம் பிரவுசர் செட்டிங்
சென்று எதை எதையோ மாற்றியும் ஒன்றும் சரியாகவில்லை. இரண்டு ஜீ.பி வேறு செலவாகிவிட்டது.
எப்படி என்றே தெரியவில்லை. வருத்தமுடன் குளோஸ் செய்துவிட்டு படுக்கப் போய்விட்டேன்.
சனியன்று மீண்டும் இணையத்தை திறந்து பிரவுசர் ஓபன்
செய்கையில் விளம்பரம் குறுக்கிடவில்லை! அப்பாடா என்று ஒர் பதிவு போட்டுவிட்டு அடுத்த
பதிவுகளுக்கு சென்றால் மீண்டும் விளம்பரத் தொல்லை. அதுவும் டேட்டிங்க் விளம்பரங்கள்,
ரம்மி என்று அநாகரிகமான விளம்பரங்கள். குரோம் செட்டிங்ஸ் சென்று எதை எதையோ குடாய்ந்து
குக்கிஸ்களை நீக்கிய பின் விளம்பரம் சிறிது நேரம் நின்றது. ஆனால் என் ஐடியில் கருத்திட
முடியவில்லை.
வெறுத்துப் போய் பயர் பாக்ஸில் சிலரது தளங்களுக்கு
மட்டும் சென்று கருத்திட்டு வந்தேன். உடல் அசதியாக இருந்தமையால் வேறு ஒன்றும் செய்ய
முடியவில்லை. இறுதியாக குரோம் பிரவுசரை என் கம்ப்யூட்டரில் அன் இன்ஸ்டால் செய்தேன்.
இன்று சீ கிளினரில் டியுன் அப் செய்துள்ளேன். நாளை மீண்டும் தரவிறக்கி பார்க்கலாம்
என்று நினைக்கிறேன்.
இன்றைய பதிவுகள் படிப்பது, இடுவது எல்லாம் பயர்பாக்ஸில்தான்.
முதலில் இதைத்தான் பயன்படுத்தினேன். குரோம் வந்தபின் இதில் பயன்படுத்துவது கஷ்டமாக
இருக்கிறது.
வேறு யாராவது ஊடுருவி விட்டார்களா என்றும் பயம்!
ஆனால் செக் செய்தபோது அப்படி எதுவும் கிடைக்கவில்லை! அதனால் ஓர் நிம்மதி! இந்த குழப்பத்தில்
நேற்று பதிவும் இடவில்லை. யாருடைய தளத்திற்கும் வரவில்லை! நாளையும் சங்கட ஹர சதுர்த்தி
இருப்பதால் இணையம் பக்கம் வர முடியுமா என்று தெரியவில்லை.
குரோம் பிரவுசர்
மீண்டும் தரவிறக்கலாமா? அல்லது பழைய தறவிறக்கையதையே பயன்படுத்தலாமா? இல்லை பயர் பாக்ஸிலேயே தொடரலாமா? உங்கள் ஆலோசனைகளை
சொன்னால் நன்றாக இருக்கும்.
தரவிறக்கிய வீடியோ
டவுன் லோடர் ytd video downloader.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!
இது மாதிரி எதுவுமே நமக்குத் தெரியாது. ஏதேனும் குறுக்கிட்டால் தோழர் கஸ்தூரி ரெங்கன் தொலைந்தார். கற்ருக் கொள்ள நிறைய இருக்கு தோழர்.
ReplyDeleteகூகுள் ஆண்டவர் வழி விடுவார் கவலை வேண்டாம் நண்பரே...
ReplyDeleteஎன் பிரச்சனையே வேறு மாதிரி. என்னிடம் இரு ப்ரௌசர்களும் உண்டு. ஃபயர் ஃபாக்சில் காணொளி வராது. க்ரோம் உபயோகிப்பேன். சில தளங்களுக்கு க்ரோமில் சென்றால்தான் படிக்க முடியும் நானாக எதையும் செய்து பார்ப்பதில்லை. இரண்டு மூன்று நாட்கள் பதிவுப்பக்கம் வரவில்லை.
ReplyDeleteநான் பயர் பாக்ஸ் தவிர வேறு ஏதும் பயன்படுத்துவதில்லை..
ReplyDeleteSettings சென்று site settings ல Pop-ups blocked னு இருக்கிறதா என்பதைச் சரி பார்த்தீர்களா சகோ? Allowed என்று இருந்தால் உடனடியாக Blocked என்று மாற்றிப் பாருங்கள் சகோ. ரீ இன்ஸ்டால் செய்தால் எல்லாம் சரியாகி விடும். தாராளமாக ரீ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
ReplyDeleteபாண்டியன் சகோ சொல்லியது போல செய்யலாம். எங்களுக்கும் இப்படி ஆயிற்று. எதையோ டவுன் லோட் செய்யப்போக. முதலில் அனின்ஸ்டால் ப்ரோக்ராம் போய் ஏதாவது புதிதாக டவுன் லோட் ஆகியிருக்கிறதா என்று பாருங்கள் இருந்தால் அதை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். பின்னர் குக்கீஸ் டெம்ப் ஃபைல்ஸ் எல்லாம் க்ளீன் செய்துவிடுங்கள். க்ரோம் க்ளீனர் போட்டு விட்டு செட்டிங்க்ஸ் சென்று பா அப்ஸ் ப்ளாக் செய்து செட்டிங்ஸ் டிஃபாட்ல்ட் செட்டிங்க்ஸ் செய்தால் அப்படிச் செய்த பிறகு எங்களுக்குச் சரியாகிவிட்டது....ரி இன்ஸ்டால் செய்யலாம்.
ReplyDeleteவணக்கம் தளீர்,
ReplyDeleteநல்ல பகிர்வு, இதுபோல் சங்கடங்கள் சில சமயம் வரும், அப்போல்லாம் ஆப் செய்து போட்டுவிடுவேன்,,,,,,
பகிர்வுக்கு நன்றி.
Whatever happens, I stick to only Firefox, no rethinking.
ReplyDeleteஇப்படியான தொல்லை வரும் போதெல்லாம் சகபதிவாளர் நண்பனை வீட்டுக்கழைப்பேன் ஒரு உதவி தேவை என்று.கூகில் ஆண்டவர் வழிகாட்டட்டும் சுரேஷ்!
ReplyDelete