கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 45
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
45
1.
மன்னரின்
வாய் இப்படி திடீரென தந்தி அடிப்பது எதனால் அமைச்சரே?
எதிரி மன்னன் போரெடுத்து வர
முந்திக்கொண்டதால்தான்!
2.
வாயுள்ள
புள்ளைதான் பொழைக்கும்னுறது தலைவர் விஷயத்துல ரொம்ப சரியா போயிருச்சு!
எப்படிச் சொல்றே?
பேசிப் பேசியே இவ்ளோ சொத்து
சேர்த்து வச்சிருக்காரே!
3.
சிவப்பாகணும்னு அழகு கிரிம் நிறைய யூஸ் பண்ணியே முகம் பொலிவாயிருச்சா?
என்னோட பணம் தான் கொஞ்சம் நலிவாயிருச்சு!
4.
மாப்பிள்ளை
கவர்மெண்ட் சொத்தை வித்துக்கிட்டிருக்காருன்னு சொல்றீங்களே என்ன வேலை செய்யறார்?
டாஸ்மாக்லே சேல்ஸ் மேனா இருக்கார்!
5.
சாமரம்
வீசும் சேடியிடம் மன்னர் வாலாட்டியது ராணியாருக்கு தெரிந்துவிட்டதாம்!
அப்புறம்!
ராணியார் முறம் எடுத்துவீசியதில்
முகம் தொங்கிப்போய்வந்துவிட்டார் மன்னர்!
6.
தலைவர்
அல்லும் பகலும் உழைச்சும் கடைசியில் ஒன்றுக்கும் உதவாது போய்விட்டது.
என்ன சொல்றே?
ராப்பகலா கஷ்டபட்டு நிறைய சொத்து
சேர்த்தார்! அத்தனையும் பிடுங்கிட்டாங்களே!
7.
அந்த
பிளேயர் ஏன் பெவிலியன்லே ஒரு ஸ்டெப் கிழே இறங்கி
உக்காந்து இருக்காரு!
அவரு ஒன் டவுன் பேட்ஸ்மேனாம்!
8.
மன்னரே!
உங்களை புகழ்ந்து உலா ஒன்று இயற்றியுள்ளேன்! பாடிக்காட்டவா?
புலவரே! நீர் விடும் பீலாவெல்லாம்
உலா என்று என்னை நம்பச் சொல்லாதீர்!
9.
ஏய்யா!
மளிகை கடையிலே வந்து பிராந்தி கேக்கறியே அறிவில்லை உனக்கு?
கோச்சுக்காதிங்க! உங்க கடையிலதான்
எல்லாம் சரக்கும் விலை கம்மியா இருக்குன்னு சொன்னாங்க அதான்..
10. தலைவர் தன் பெயர் எப்பவும் தலைப்பு செய்தியில
இருக்கணும்னு விரும்பறார்!
அதுக்காக தன் பெயரை வரி விளம்பரம்னு
மாத்திக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
11. பக்கத்துவீட்டு பொண்ணுக்கு பக்கம் பக்கமா
லவ் லெட்டர் எழுதுவியே பிக்கப் ஆயிருச்சா!
எதுத்த வீட்டு பையனோட பொண்ணு
பேக்கப் ஆயிருச்சுடா!
12. சிலிண்டர் ஏஜென்ஸி நடத்தறவர் பொண்ணைக் கேட்டது தப்பா போச்சா ஏன்?
பொண்ணை முதல்லே அனுப்புவேன்!
சீரை பின்னாலே பேங்க்ல போடறேன்னு சொல்றாரே!
13. மார்க்கெட்ல போய் ஒரு காய் வாங்கிவரத்தெரியுதா
உங்களுக்கு? எல்லாம் சொத்தையும் சொள்ளையுமா இருக்கு!
அது தெரிஞ்சா உன்னை ஏன் நான்
கல்யாணம் பண்ணியிருக்க போறேன்!
14. தொலைதொடர்பு துறை அமைச்சரை ஏன் பதவியிலிருந்து
நீக்கிட்டாங்க!
கட்சி ரகசியத்தை காத்துல பறக்கவிட்டுட்டாராம்!
15. ஸ்கூல் டீச்சரை கல்யாணம் பண்ணிக்கிட்டியே
எப்படி போகுது வாழ்க்கை?
ஹோம் ஒர்க் சரியா செய்யாட்டி
பணிஷ்மெண்ட் கொடுக்கிறாடா!
16. எதனாலே இப்படி முகமெல்லாம் தீஞ்சு போய் கிடக்குது!
உங்களாலாதான் டாக்டர்!
என்னாலாயா?
நீங்கதானே ஜலதோஷத்துக்கு ஆவிபுடிக்க
சொன்னீங்க! அதான் குக்கர்கிட்ட தலையை விட்டேன்! இப்படி ஆயிருச்சு!
17. தலைவருக்கு பொய்ப்புரட்டுன்னா புடிக்கவே
புடிக்காது!
பரவாயில்லையே!
ஆனா சுருட்டறதுன்னா ரொம்ப பிடிக்கும்!
18. எதிரி மன்னன் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிவிட்டான்
அமைச்சரே!
என்ன ஆயிற்று மன்னா?
அவனுடைய ராணிக்கும் சேர்த்து
சமைக்கச்சொல்லிவிட்டான்!
19. நண்பன் கிட்டே கை மாத்தா ஓர் பத்தாயிரம் ரூபா கேட்டது
தப்பா போச்சு!
ஏன்?
அப்புறம் என் முகம் பார்த்தாலே
ஒளிஞ்சிக்கிறாரே!
20. அதோ போறாரே அவரு தான் பிரஸ்டீஜ் பத்மநாபன்.
எல்லா விஷயத்துக்கும் பிரஸ்டீஜ்
பார்ப்பாரா?
நீ வேற அவங்க வீட்டுல எல்லா
குக் வேரும் ப்ரஸ்டீஜ்னு சொல்ல வந்தேன்!
21. மன்னா! உங்களின் வாள் முனை மழுங்கிவிட்டது
என்று நாட்டில் பேசிக்கொள்கிறார்கள்!
வாளை கூர் தீட்டுங்கள் என்று
சொன்னால் நீங்கள் காதை கூர் தீட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்களே!
22. மதுவிலக்கு போராட்டத்துக்கு தலைவர் போதையோட
வந்தாராமே!
ஆமாம்!
ஊத்திக்கொடுக்க மாட்டோம்! ஊத்தி அழிப்போம்னு சொல்லி அப்ளாஸ் வாங்கிட்டார்!
23. ஒரு பெண்ணுக்கு ஓசியிலே ரிசார்ஜ் பண்ணிக்கொடுத்துட்டு இருந்தியே என்ன ஆச்சு?
ஈசியா என்னை ஏமாத்திட்டு போயிட்டா!
24. மன்னா எதிரி மன்னன் ராணியாரை குண்டுக்கட்டாக கட்டி தூக்கிச் செல்கிறான்!
ஹாஹாஹா! செத்தான்! ராணியாரின் எடை எனக்கல்லவா நன்கு தெரியும்!
25. நம்ம தலைவர் வாயாலாயே பந்தல் போடுறதலே பலே கில்லாடி!
அப்ப மாநாட்டு பந்தல் செலவு மிச்சம்னு சொல்லு!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் சரவெடிகள் நண்பரே மிகவும் ரசித்து படித்தேன்.
ReplyDeleteவணக்கம் தளீர்,
ReplyDeleteஅனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்.
கொஞ்சம் என்ன
ReplyDeleteநிறையவே சிரித்தேன் நண்பரே
நன்றி
நிறைய, நிறைய சிரித்தோம், ரசித்தோம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சிரித்து மகிழ்ந்தேன் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆவி பிடித்த அந்த அப்பாவி யாரு :)
ReplyDeleteஅனைத்தும் அருமை. ரசித்தேன்.
ReplyDeleteஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்...ப்ரெஸ்டீஜ் , ஹோம்வொர்க்...அருமை..
ReplyDelete