வாடகை!
வாடகை!
வைத்திய நாதன் அந்த டாக்சி ஸ்டேண்டில் நுழைந்தபோது
உள்ளே நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. டாடா இண்டிகா, அம்பாசிடர், சுமோ, மாருதி
எஸ்டீம் என பல்வகை வாகனங்கள். அவர் உள்ளே நுழைந்ததுமே ”சவாரியா சார்! எங்கே போகணும்?” என்று ஒருவர் கேட்க, அதற்கு முன்னரே மற்றொருவர், ”இவர் நம்ம கணேஷ் அண்ணன் பார்ட்டி! அவரைத் தேடி வந்திருப்பார். கணேஷண்ணன் சவாரிக்கு
போயிருக்கார்! போன் பண்ணட்டுங்களா?” என்றார்.
”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தம்பி! நான் சும்மாத்
தான் வந்தேன்! ஆமா இங்கிருந்து சென்னைக்கு போக வர எவ்வளவு வாங்குவீங்க?”
“எதுக்கு சார் கேட்கறீங்க? கணேஷ் அண்ணன் ஏறக்குறைய
வாங்கிப்பார்! அவருகிட்டேயே…”
வைத்தியநாதன் கையமர்த்தினார். ”கணேஷ் வாங்கிறது
இருக்கட்டும் நீ எவ்வளவு வாங்குவே?”
“ ஒரு ரெண்டாயிரம் ஆகும்! டிரைவர் பேட்டா ஐநூறு ரூபா
சார்!”
“சரி டீசல் எவ்வளவு பிடிக்கும்?”
“ஒரு பத்துலிட்டர் இருந்தா போய் வந்துடலாம் சார்!”
”லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் கொடுக்கும்?”
“அது வண்டியை பொருத்தது
சார்?”
“தோராயமா சொல்லு?”
“குறைஞ்சது பதிமூணு
கி,மீ கொடுக்கும்! அதிகபட்சம் 20 வரை வண்டியோட தேய்மானம் பராமரிப்பை பொறுத்து மாறும்
சார்!”
“ரொம்ப நன்றிப்பா வரேன்!”
இவர் கிளம்பவும் கணேஷ் வரவும் சரியாக இருந்தது.
“என்ன
ஐயா எங்கே இப்படி? வீட்டுல விட்டுறட்டங்களா?”
“வேண்டாம்பா! நான் ஆட்டோவுல போய்க்கிறேன்! நீ வேலையைப்பாரு!”
எதுக்கு இவர் வந்திருப்பார்? கணேஷ் யோசிக்கையில்
பக்கத்து வண்டி டிரைவர் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது கூற கணேஷிற்கு கோபமாக வந்தது.
“என்ன மனுஷன் இவர்? இவருக்கு எப்ப சவாரி போணாலும்
கொடுக்கிறதை வாங்கிக்கிறோம்! பேட்டா கூட கேக்கறது இல்லை! நம்மளை போய் சந்தேகப்பட்டு
விசாரிக்க வந்துட்டாரே! இனிமே இவர் கூப்பிட்டா போகக் கூடாது” ஆத்திரப்பட்டான் கணேஷ்.
அதே சமயம் வைத்தியநாதன் வீட்டில், “ஏங்க நம்ம கணேஷ்
நாம எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிட்டு போற பையன். நீங்க எதுக்கு மெனக்கெட்டு டாக்சி
ஸ்டாண்ட்ல போய் வாடகை பத்தி விசாரிச்சிட்டு வர்றீங்க?”
“அவன் அப்படி எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறதாலதான்
போய் விசாரிச்சேன். நம்ம மேல உள்ள மரியாதையிலே வாயே திறக்காம கொடுக்கிறதை வாங்கிக்கறான்.
காலம் மாறி விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு! இன்னிக்கு எவ்வளவு வாடகைன்னு அவனா சொல்ல மாட்டேங்கிறான்!
நாம கொடுக்கிற தொகை குறைச்சலா இருந்தாலும் கேக்க மாட்டேங்கிறான். ஊர் நிலவரத்தை தெரிஞ்சிகிட்டா
அதுக்கேத்தாமாதிரி கொடுத்திடலாம் இல்லையா? அவனும் சந்தோஷமா இருப்பான். நமக்கும் சங்கடம்
இல்லை!”
“அவனா கேக்க மாட்டான்!
நாமளா கொடுத்தா வாங்கிப்பான் இல்லையா? அதுக்குத்தான் போய் விசாரிச்சேன்! இத்தனை தடவை
ரொம்ப இல்லேன்னாலும் குறைச்சலா வாடகை கொடுத்திருக்கோம்!
இனிமே சரியா கொடுப்போம் அடுத்த தடவை மட்டுமல்ல இனிமே எப்ப எங்க போகிறதா இருந்தாலும்
கணேஷைத் தான் கூப்பிடனும்.”
“ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்” என்றாள் அவர் மனைவி.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
ஆஹா...கனேஷ் வருவாரா?
ReplyDeleteநல்ல கதை சகோ
அட.. முகப்பு மாறியிருக்கே! நல்லா இருக்கு சகோ
ReplyDeleteஉலக மனித நேயம் தினமான ஆகஸ்ட் 19 (World Humanitarian Day)
ReplyDeleteசிறப்பிக்க வந்த கதை.
வாழ்த்துகள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மனிதர்கள் பலவிதம் நல்ல கதை நண்பரே...
ReplyDeleteஇப்படித்தான் இருக்கணும் தொழில் தர்மம் !
ReplyDeleteஇப்படித்தான் இருக்கணும் தொழில் தர்மம் !
ReplyDeleteநல்ல உத்தி. நன்றி.
ReplyDeleteகதை அருமை...
ReplyDeleteஉயரிய மனங்களைச் சொல்லும்
ReplyDeleteஅருமையான கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பல்சுவை வித்தகம்..
ReplyDeleteபிரமிக்கிறேன் ரசனையுடன்.
நன்றி
அருமையான கதைநண்பரே
ReplyDeleteஅருமையான கதை சுரேஷ்! எல்லாத்துலயும் போடு போடுனு போடறீங்களே..
ReplyDeleteநாணயத்தின் இரு பக்கங்கள்!
ReplyDeleteஅருமை