வெறிபிடித்த தாலிபான்களும்! இன்ஷ்யூர் செய்த கணவனும்! கதம்பசோறு! 53

கதம்பசோறு! பகுதி 53

தாலிபான்களின் வெறியாட்டம்!

      பாகிஸ்தானில் உள்ள ராணுவப்பள்ளியில் புகுந்த தாலிபன் தீவிரவாதிகள் 132 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 145 பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள். இன்னும் 150 பேருக்குமேல் காயம் அடைந்துள்ளனர். 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று இருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். தீவிரவாதிகளின் மூர்க்கத்தனம் கண்டிக்கத்தக்கது. ஒன்றும் அறியாத பிஞ்சுகளை கொன்று குவிப்பதால் அவர்களின் லட்சியம் நிறைவேறிவிடுமா? இதுபோன்ற செயல்களால் இந்த அமைப்பின் மீது இன்னும் கோபம்தான் மக்களுக்கு உண்டாகுமே தவிர ஆதரவு பெருகாது. பாகிஸ்தானில் ஒரு பகுதியில் 1700 பேருக்கு மேல் கொன்று குவித்துவரும் தாலிபான்கள் எங்களது வலி ராணுவத்திற்கு தெரியவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். மூடத்தனத்தின் முன்னோடிகளாக இருக்கும் இவர்களை விதைத்து பார்த்து இப்போது விபரீதமான அறுவடையை நடத்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இது போன்ற பழமைவாத மதவாத அமைப்புக்களை வளரவிட்டால் நாட்டை குழியில் தள்ளவேண்டியதுதான். இந்தியாவில் அந்த நிலை வரக்கூடாது.

ரஜினியின் லிங்கா!

     கோச்சடையானின் ஏமாற்றத்திற்கு பின்னர் ரஜினி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படம் லிங்கா. சில முட்டுக்கட்டைகளை கலைந்து வெற்றிகரமாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது. வழக்கமான ரஜினி பார்முலா கதை! தன்னுடைய பாணியில் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி சாதனை படைத்துவிட்டார் கே.எஸ். ஆர். ஆனால் பாடல்களை பொறுத்தவரை ஏ.ஆர்.ஆர் சொதப்பிவிட்டார். ரஜினியை இளமையாக காட்டி ஒளிப்பதிவாளர் பாஸ் செய்துவிட்டார். எந்திரன் போன்றோ ஒருபாட்ஷா போன்றோ அல்லது படையப்பா போன்றோ எதிர்பார்த்து சென்றால் ஏமாற வேண்டியதுதான். அதே சமயம் ரஜினி படம் என்ற கேரண்டியை காப்பாற்றிக் கொள்கிறது படம். மற்றபடி லிங்கா ரஜினிபட எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்று. அவ்வளவே!

கோஹ்லி செய்தது சரியா?

    ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக செயல்பட்டு தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்சி முறையால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் கோஹ்லி. கடைசி நாளில் அனைவரும் இலக்கு முன்னூறை தாண்டினால் போட்டியை டிரா செய்யவே முயலுவர். அதுவும் அதிரடி தவான் விரைவில் அவுட்டாகிய பின்னும் அடுத்து வந்த புஜாரா விரைவில் வெளியேறினாலும் வெற்றி ஒன்றையே குறியாக நினைத்து கடைசிவரை போராடினார். சதமடிக்கும் பதற்றத்தில் முரளி விஜய் தடுமாறி ஆட்டம் இழந்ததும், ரகானாவுக்கு தரப்பட்ட தவறான தீர்ப்பும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டன. இவர்கள் இரண்டு பேர் மட்டும் இன்னும் கூடுதலாக ஒரு நாற்பது ரன்கள் சேர்த்திருந்தால் போட்டி இந்தியாவின் வசமாகி இருக்கும். டிரா செய்ய ஆடியிருந்தால் மோசமான தோல்வி கிடைத்திருக்கும் என்பதும் சரியே! வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்ற கோஹ்லியின் துணிச்சல் அவரின் கேப்டன்சி திறமை அனைவரையும் அவருக்கு ஆதரவாக இழுத்துள்ளது. எனக்கும் கோஹ்லியின் இந்த அணுகுமுறை சரியெனவே தோன்றுகிறது.

பதிவர் அறிமுகம்:


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்துகொண்டே வலைப்பூ எழுதுகிறார் மைதிலி கஸ்தூரி ரங்கன். மகிழ்நிறை என்ற வலைப்பூ. அவர்களது குழந்தைகளின் பெயரை இணைத்து வலைப்பூவுக்கு பெயர் சூட்டியுள்ளார். தமிழார்வம் மிக்க ஆங்கில ஆசிரியை! இவரது வலையில் எளிமையாக ஆங்கிலம் கற்க கற்றுக் கொடுக்கிறார். கவிதைகளும் அருமையாக எழுதுகிறார். மரபுக்கவிதையிலும் அசத்துகிறார். இவரது கணவரும் ஓர் வலைபதிவரே! மலர்தரு என்னும் தளத்தில் எழுதும் கஸ்தூரி ரெங்கன், உலகப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு முகநூலில் பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களது வலைப்பூக்களை வலைச்சரம் மூலம் அறிந்து தொடர்ந்து வருகிறேன்! நீங்களும் தொடர இதோ இணைப்புக்கள்!  மகிழ்நிறை

  
கிச்சன் கார்னர்:
 பச்சை சுண்டக்காய் வத்தல் குழம்பு.


பச்சை சுண்டைக்காய் இரண்டாக நறுக்கியது 1 கப்,
நறுக்கிய பெரியவெங்காயம் ½ கப்
நறுக்கிய பூண்டு பற்கள் ¼ கப்
சாம்பார் தூள் 4 மேசைக்கரண்டி,
தக்காளி -3
வெல்லம் சிறிது, கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
நல்லெண்ணெய் ¼ கப்

ஒரு வாணலியில் கால் கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு பெருங்காயம் தாளிக்கவும். அதில் சுண்டைக்காயை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வெள்ளை நிறமாகும் வரை வதக்கவும். நன்கு வதக்கியதும் வெங்காயம் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, புளி, சாம்பார்தூள் போட்டு கொதிக்க விடவும். கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் இறக்கிவிடவும். சிறிது வெல்லம் சேர்த்து கிளறிவிடவும்.
   இந்த வற்றக் குழம்பு ஒருவாரம் வரை கெடாது.

(பழைய புத்தகம் ஒன்றில் படித்தது)

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பெண்களின் மாதவிடாய் வயிற்று வலித் தொல்லை நீங்க பெருஞ்சீரகம் சிறிது இலேசாக வறுத்து கொதிநீரில் போட்டு மூடி வைத்து இளம் சூட்டில் தினமும் அருந்தி வந்தால் மாதவிடாய் வயிற்றுவலி மறையும்.


ஹீல்ஸ் வைத்த செருப்புக்களை தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு மணி நேரம் அணிபவரா நீங்கள்? நாளடைவில் முதுகுவலி குதிகால் வலி வரும். தேவையா என்று யோசிக்கவும்.

பிரண்டையை பசு நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பசி உண்டுகும்.மூலநோய் குணமாகும். உடல் வலிமை பெறும்.

மாசிக்காயை நன்றாக தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு சிட்டிகை வீதம் நெய்யுடன் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.

காரில் செல்கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்வதாக இருந்தால் இஞ்சின் அருகில் வைக்கக் கூடாது. இஞ்சின் சூடு பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுக்கழிவுகள் தண்ணீரில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு.


சமையல் காஸ்மானியம்!

     சமையல் காஸ் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடுவது என்று அரசு முடிவெடுத்து செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விளம்பரங்களோ ஊடகங்களில் அறிவிப்புக்களோ இல்லை! ஜனவரி முதல் மானியம் வேண்டுமென்றால் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்க என்று செல்போனில் மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டன கேஸ் விநியோக மையங்கள். மொத்தம் இரண்டு படிவங்கள் ஒன்று வங்கியில் தரவேண்டும் மற்றொண்டு காஸ் விநியோக மையத்தில். ஆதார் அட்டை வேண்டும் என்றார்கள். இப்போது தேவையில்லை வங்கி கணக்கு மட்டும் இருந்தால் போதும் என்கிறார்கள். மூன்று மாத அவகாசமும் வழங்கி உள்ளார்கள். இதை முதலிலேயே சொல்லி இருந்தால் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டு இருக்காது. கேஸ் ஏஜென்சிகளில் தள்ளு முள்ளுக்கள் மக்களிடையே வீண் பதட்டம் என்று இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் ஏகப்பட்ட குழப்பங்கள். என்னைக் கேட்டால் இது வேண்டாத வேலை! தலையை சுற்றி மூக்கை தொடுகிற வேலை. ஆனால் இப்படி வங்கி கணக்கில் மானியம் தந்தால் இதில் மோசடிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. உண்மையான பயனாளிகளை அறிய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் வங்கியிருப்பும் அரசால் அறிந்து கொள்ள முடியும்.படிப்படியாக மானியமும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

படிச்சதில் பிடிச்சது!
இன்சுயர் பண்ணலையே!

நள்ளிரவு நேரம். மனைவி கணவனை எழுப்பி, “ஐயோ! திருடன்! திருடன்! அறைக்குள்ளே பீரோவை உடைக்கிறான். திருடிட்டு போறதுக்கு முன்னாடி அவனை பிடியுங்க!” என்று கத்தினாள்.
    கணவன் தயங்கினான்.
 “ஐயோ! நான் கத்தறேன்! நீங்க சும்மா இருக்கீங்களே!”
   ”அந்த திருடன் கையில் துப்பாக்கி வைத்திருந்தால் என்ன செய்வது?” கணவன் பம்மினான்.
    “அதானாலேத்தான் உங்களை போகச்சொல்றேன்! முட்டாள்தனமா பேசாதீங்க! உங்களை இன்சூயர் பண்ணியிருக்கு! ஆனா நகைகளை இன்சுயூர் பண்ணலையே என்றாள் மனைவி.

முட்டாள் ஜோக்ஸ் என்ற புத்தகத்தில் படித்தது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. கதம்பச் சோறு அருமை.
    அதிலும் அந்த முட்டாள் ஜோக்ஸ் சூப்பர்.

    ReplyDelete
  2. கதமபச் சோ றுக்கு அருமையான ஊறுகாய் ஜோக்ஸ்

    ReplyDelete
  3. ஏதுமறியா பிஞ்சுக் குழந்தைகளை
    கொன்று குவித்தது
    மூர்க்கத்தனம் மட்டுமல்ல நண்பரே
    அசல் கோழைத்தனம்
    (எழுத்துப் பிழையால் முதல் கருத்தினை நீக்கம் செய்துவிட்டேன்)

    ReplyDelete
  4. படிப்படியாக மானியமும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.?????????

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.
    பலரை அறிமுகம் செய்த விதம் சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இது போன்ற பழமைவாத மதவாத அமைப்புக்களை வளரவிட்டால் நாட்டை குழியில் தள்ளவேண்டியதுதான்//பாகிஸ்தானில் இதுதானே நடக்கிறது.
    அனைத்துப் பதிவுகளும் அருமை,

    ReplyDelete
  7. அருமையான பதிவர்கள் அறிமுகங்களோடு அனைத்தும் அருமை...

    ReplyDelete
  8. சகோதரரே தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை தந்து பார்வையிட அழைக்கிறேன்

    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  9. கதம்ப மாலை அருமை அய்யா!
    உங்களது மரபின் வருகைக்காய்க் காத்திருக்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  10. வன்முறையை கருவறுக்க களம் தந்துள்ளது உமது தளம் "தளீர்"
    சமூக அக்கறைக்கு இக்கரையில் (அயல் நாடு) இருந்து செலுத்துகிறோம்
    நன்றியினை! சிறக்கட்டும் உமது சீரிய இலைக்கிய பணி! வாழக!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய் அய்யா வாராய்!)

    ReplyDelete
  11. அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  12. நாட்டுநடப்பு, சமையல், ஜோக் என்று பலவற்றையும் கலந்து நீங்கள் கொடுத்திருக்கும் கதம்ப சோறு ருசியாக இருக்கிறது, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. அன்பு நன்பா! இப்படி அறுமையானா பிரியானியை நாண் எதிர்பாற்கவிள்ளை. இந்த மாதிறி குலந்தைகலை கொண்ரவற்கலை கண்டிக்காமள் நீங்கல் இருந்திருந்தாள் இது தான் என் கடைசி வறவாக இருந்திறுக்கும். கண்டித்தது ஓகே. ஆனால் அதர்கு காரனமான மதத்தினரை ஏன் கண்டிக்கவில்லை. உலகிள் உல்ல எள்ளா மூடபலக்கவளக்கங்கலையும் தன் வசம் கொண்ட இந்துக்கள் செய்கிர அக்கிரம்கல் தானே அப்பாவி இலைஞர்களை தீவிரவாதிகலாக மார்ருகிரது. கோவில்கல் ஏன் இப்படி கொடியவர்கலின் கூடாறமானது. ஏன் இந்த இந்து மதத்தினர் மார்ரு மதத்தின் அப்பாவிகலை திவிரவாதிகலாக மார்ரிவிட்டுவிடுகிரார்கள். இந்த தீவிரவியாதிகள் எப்ப திறுந்துவார்கல். கோவில்கலில் கடவுலை கும்பிட்டால் போதும் அங்கே ஏன் அலிவை போதிக்கிரார்கள்.

    சறி இவை கிடக்கட்டும், அந்த பிஞ்சு குலந்தைகலுக்காக ஒற் அஞ்சளி கவிதை ஒன்ரு எலுதுவீர்கலா ?
    பரமுசிவசாமி

    ReplyDelete
  14. பதிவற் போட்டாவிள் பம்மிக் கொண்டு இறுப்பது தான் நீங்கலா ? நாண் நினைத்தைவிட கம்பிரமாக அடக்காம இறுக்கீங்க. அதானாள தான் இவ்வலவு பிரபளமா இறுக்கீங்க. வால்த்துக்கல் சார்

    பரமு சிவசாமி

    ReplyDelete
  15. முட்டாள் ஜோக்ஸ் அறுமை சார்

    ReplyDelete
  16. கதம்பம் அருமை! வெறியர்கள் நடத்தும் ஆட்டம்...சுட்டுத்தள்ள வேண்டும் அவர்களை....

    டிப்ஸ் அருமை....பச்சைச் சுண்டைக் குழம்பு செய்வதுண்டு. முட்டாள் ஜோக்ஸ் ஹஹாஹ்ஹ ரகம்.....

    ReplyDelete
  17. சார் என்ன இது அவ்வலோ தான் உங்கல் திவிரவாத எதிற்ப்பு ? சத்தமே இல்லாம சைளண்டா இருக்கீங்க ? பூ.......பூ தனா ? இந்து திவிரவியாதிகல் துழிர் விடுமெ உங்கல் கட்டு றை வறையுங்கல்.

    பரமு சிவசாமி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!