உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36 வணக்கம் வாசக அன்பர்களே! இடையில் இருவாரங்களாக இந்த தொடரை தொடர இயலாமல் போயிற்று. மாமியாரின் மறைவு மற்றும் என்னுடைய உடல்நலக் குறைவினால் இணையம் பக்கம் பத்து நாட்கள் வர இயலாது போயிற்று. கடைசியாக இந்த பகுதியில் வல்லினும் மிகும் மிகா இடங்கள் குறித்து சற்று விரிவாக பார்த்தோம். வல்லினம் மிகாத இடங்களை சென்ற பகுதியில் படித்தோம். இந்த முறை மிகும் இடங்கள் சிலவற்றை படிக்க உள்ளோம். வலிமிகும் இடங்கள். 1 இருபெயராட்டு பண்புத்தொகையில் வலி மிகும். மல்லிகைப்பூ, ஆடித் திங்கள், வரிப்பணம், பசிப்பிணி 2.உவமைத் தொகையில் வல்லொற்று மிகும். மலைத்தோள், குவளைக் கண், அம்புப்பார்வை 3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும். ஓடாக்குதிரைகள், பாடாக்கவிஞன் 4. ‘இகர’ ஈற்று வினையெச்சம் முன் வலி மிகும். அதுபற்றிப் பேச, பேசிக்கெடுத்தான், நோக்கிப்பாய்ந்தான். 5.என, ஆக, போய், ஆய், தவிர, ஏற்ப வினையெச்சங்களின் பின் வல்லொற்று மிகும். எனக்கூறினார், அதிகமாகக் கிடைக...