புகைப்பட ஹைக்கூ 72
புகைப்பட
ஹைக்கூ 72
வேஷம்
போட்டு
ஏமாற்றுகிறார்கள்!
தேர்தல்!
காசுக்கு
போடுகிறார்கள்
வேஷம்!
தேர்தல்!
காசுக்கு
ஆடுகிறார்கள்
‘கை’
கூலிகள்!
உடல்முழுதும்
வண்ணம்
உழைக்காமலே
வருது பணம்!
தேர்தல்!
சாமிமுன்
ஆடினால் அருள்
சரக்கடித்து
ஆடினால்
தேர்தல்!
‘கை’ கோர்த்ததும்
கரைபுரண்டது உற்சாகம்
தேர்தல்!
தலைவனை உருவாக்க
தப்பாட்டம் ஆடும் தொண்டர்கள்!
தேர்தல்!
உழைப்பை விரட்டி
உல்லாசத்தை அழைக்கிறது
தேர்தல்!
எந்த வண்ணம் பூசினாலும்
இவர்கள் வண்ணம் மாறவில்லை!
தேர்தல்!
வண்ணங்கள்
எண்ணங்களாகாது
தேர்தல்!
உழைக்கிறார்கள்
கட்சிக்கல்ல
ஒப்பந்தக் கூலிக்கு!
வண்ணங்கள் கலையும்போது
வாக்குறுதிகளும் மறந்துபோகும்
தேர்தல்!
கரைபுரண்ட வெள்ளத்தை
அணைபோட்டது ஆணையம்!
தேர்தல்!
‘கை’க்கு கைமாறும் பணம்
‘கை’ கொட்டி சிரித்தது ஜனம்!
தேர்தல்!
வண்ணம் அடித்து கொண்டாடினும்
வரவில்லை மறுமலர்ச்சி!
தேர்தல்!
ஒரு வேளைச்சோற்றுக்கு
உத்திரவாதமளித்தது
தேர்தல்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் அருமை சகோதரர். அதிலும் எந்த வண்ணம் பூசினாலும் இவர்கள் வண்ணம் களைவதில்லை அற்புதம். சிந்தனைகள் அனைத்தும் இமை மூடாமல் பார்க்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்..
ReplyDeleteபல வரிகள் உண்மைகள்...
ReplyDeleteஅன்புக்குரிய சுரேஷ்
ReplyDeleteதேர்தல்
தேர்தல்
என்கிற வார்த்தையை ஒருமுறைமட்டும் பயன்படுத்தி மற்ற இடங்களில் நீக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது..
தேர்தலை பற்றி முழங்கியுள்ளீர்கள்
ReplyDeleteசாமிமுன் ஆடினால் அருள்
சரக்கடித்து ஆடினால்
தேர்தல்!
அருமை ! வாழ்த்துக்கள்....!
தேர்தலைப் பற்றி சாமி ஆடிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சுரேஷ். அருமையான சிந்தனை.
ReplyDeleteஒரு வேளைச் சோற்றிற்கு உத்திரவாதம் அளித்தது தேர்தல் - பலருக்கு இது நிதர்சனம்....
ReplyDeleteநல்ல கவிதைகள். பாராட்டுகள் சுரேஷ்.