புத்தகத் தொகுப்பாகும் எனது சிறுவர் கதைகள்!


சிறுவர்களுக்கான நூல் வெளியிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று. ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் சிறுவர்களுக்கான கதைகள் எழுதி பழகி கையெழுத்துப் பிரதிகள் எழுதி வெளியிடுவேன். என் முதல் படைப்பு 1993ல் கோகுலத்தில் வெளிவந்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதன் பின் ஒரு நீண்ட இடைவெளி. என் எழுத்து தாகத்தை தளிர் என்ற வலைப்பூ மூலம் தணித்து வந்தேன். அந்த தளிர் வலைப்பூவில் எழுதிய 34 கதைகளை தொகுத்து இரண்டு புத்தகங்களாக பூமிக்கு வந்த நட்சத்திரங்கள், விவேகன் பெற்ற வாழ்வு (18+16) என்று அமேசானில் இ- புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு சங்கப் பலகை முகநூல் குழு வழியே திருமதி உமாஅபர்ணா அவர்களால் கிடைத்தது.
திருமதி உமா அபர்ணா மற்றும் அவரது மகள் டாக்டர் லஷ்மிப்ரியா இருவரும் Pachyderm- tales என்ற இணைய தளம் மூலம் இளம் எழுத்தாளர்கள் நூல் வெளியிட பெரிதும் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர் இலக்கியத்தை வளர்க்கும்
அருமையான
பணியினை செய்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து ukiyoto என்ற நிறுவனம் புத்தகங்களை வெளியிட்டு வருகின்றது.
இளம் எழுத்தாளர்களின் நூல்களை வெகு சீக்கிரமாகவும் குறைந்த பொருட் செலவிலும் இந்த நிறுவனம் நூல்களை வெளியிட்டுத் தருகின்றனர். தற்சமயம் குழந்தைகளுக்கான நூல்களை அழகான தரமான காகிதத்தில் அச்சுப்புத்தகமாகவும் அமேசான் தளத்தில் இ- புத்தகமாகவும் வெளியிட்டுத் தருகின்றனர்.
அந்த வகையில் என்னுடைய இரண்டு சிறுவர் நூல்களை அமேசான் தளத்தில் அழகான வடிவமைப்போடு வெளியிட்டுள்ளனர். விரைவில் அச்சுப் புத்தகமாகவும் இந்த நூல்கள் வெளிவர உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆடியோ வடிவிலும் வெளிவர உள்ளது.
நூல்களை ப்ரமோட் செய்வது, விற்பனை, ராயல்டி போன்ற விதங்களிலும் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பு.
என்னுடைய நூல்களை வெளியிட்டுக் கொடுத்த டாக்டர். லட்சுமிப்ரியாவின் pachydermtales literary consultancy க்கும் திருமதி, uma aparna க்கும் மற்றும்ukiyoto நிறுவனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நூல்கள் கீழே உள்ள லிங்கில் அமேசான் தளத்தில் கிடைக்கும். ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த நூல்களை வாங்கி படித்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சங்கப் பலகை முகநூல் குழுவிற்கும் அதன் அட்மின்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

Comments

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ். நூல்களை விரைவில் வாசிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!