ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலி ராஜ்! பகுதி 1

 

 ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலி ராஜ்!

 


ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை எடுப்பது மிகப்பெரும் சாதனையாக கொண்டாடப்பட்டது. ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் தான் இந்தச் சாதனையை முதன் முதலில் செய்து காட்டினார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பத்தாயிரம் ரன்களை கடந்து இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்தார் அவர்.

 இப்போது அந்தசாதனையை பலரும் நிகழ்த்தி வருகின்றனர். ஆனால் பெண்கள் கிரிக்கெட்டில் ஒருவர் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளார் என்றால் அது மிகப்பெரும் சாதனை. ஒரு காலத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதே பெரும் விமர்சனம் செய்யப்பட்டுவந்தது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஏதோ பேருக்கு ஆடிக்கொண்டிருந்தது. அப்படி இருந்த பெண்கள் அணியில் சாதாரண வீராங்கணையாக விளையாடத் துவங்கி பின்னர் அணியின் அசைக்க முடியாத வீராங்கனையாக உறுமாறி அணியின் தலைவராக உயர்ந்து பல சாதனைகளை தன்னுள்ளே  பதிந்துகொண்டே போகின்றார் மிதாலிராஜ். அவர் தற்போது செய்திருக்கும் சாதனை. பெண்கள் கிரிக்கெட்டில் மூன்றுவித பார்மெட்களிலும் சேர்த்து, (டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற அதி அற்புதமான சாதனையை செய்து முடித்திருக்கிறார். இச்சாதனை முன்பு இங்கிலாந்து வீராங்கனை சார்லஸ் எட்வர்டிடம் இருந்தது.

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோற்றபோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிதாலிராஜ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை குவித்து பெண்கள் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையோடு இந்தியாவிற்கு வெற்றியும் தேடித் தந்திருக்கிறார்.

 இது குறித்து அவர் கூறுகையில் 38 வயது ஆனபோதும் என் ரன் குவிக்கும் தாகம் அடங்கவில்லை! களத்தில் இறங்கினால் என்னால் முடிந்தவரை ரன்களை குவிக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். என்கிறார்.

இன்று இந்திய பெண்கள் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் ஓர் வீராங்கனையாகவும் உள்ள மிதாலி ராஜ் பிறந்த்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். இவரது பூர்வீகம் தமிழ்நாடு. தமிழைத் தாய்மொழியாக்க் கொண்டவர்.

மிதாலியின் தந்தை துரைராஜ் இந்திய விமானப்படையில் ஏர்மேனாக வேலை செய்துவந்தார்.தாய் லீலா ராஜ். தந்தையின் பணி மாறுதல் காரணமாக ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தது மிதாலிராஜ் குடும்பம். மிதாலிராஜ் இளமையில் கொஞ்சம் சோம்பேறி. தந்தை துரை ராஜ் ஓர் கண்டிப்பான ராணுவ அதிகாரி. மிதாலியின் சோம்பேறித் தனத்தை மாற்ற துரை ராஜ் கையில் எடுத்த ஒரு விஷயம்தான் கிரிக்கெட் பயிற்சி.

  மிதாலியின் சோம்பேறித்தனத்தை மாற்றஅவரது தந்தை    அண்ணன் மிதுனுடன் கிரிக்கெட் பயிற்சிக்கு போகுமாறு பணித்தார். விடியற்காலையில் அண்ணன் மிதுனுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தார், மிதுனுடைய கோச் ஜோதி பிரசாத் மிதாலியை பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாட அழைத்து விளையாட வைத்தார். சும்மா ஜாலிக்காக விளையாடிய மிதாலியின் கிரிக்கெட் நுணுக்கங்கள் அவரை மிகவும் கவர்ந்தது. மிதுனைவிட மிதாலி சிறப்பாக விளையாடுவதாக ராஜிடம் கூறிய  ஜோதி பிரசாத் அவரை நேஷனல் இன்ஸ்டியுட் ஆப் ஸ்போர்ட்சில் சேர்க்கும்படி கூறினார். அதன் கோச் சம்பத் குமாரிடம் அறிமுகமும் செய்து வைத்தார்.

  அங்கு சேர்ந்த இரண்டே மாத்த்தில் மிதாலியின் திறமையை உணர்ந்து கொண்ட சம்ப்த் குமார் உங்கள் பெண் வருங்காலத்தில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று துரைராஜிடம் சொன்னார். இதை ராஜ் நம்பவே இல்லை.ஆனால் ஒரு கோச்சாக சம்பத் குமாரின் கணிப்புத் தவறவே இல்லை. மிதாலி விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்கும் நிலை வந்தது ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு பயிற்சி அளித்த சம்பத் குமார் டெண்டுல்கர் 14 வயதில் இந்திய அணிக்கு ஆடியிருக்கும் போது மிதாலி ஏன் ஆடக்கூடாது? என்று பயிற்சிகளை முடுக்கிவிட்டார். 9 வயதில் சம்பத்குமாரின் முயற்சியால் சப் ஜூனியர் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் மிதாலி. இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்திய ஜூனியர் அணியிலும்  இடம்பிடித்தார் மிதாலி.

மிதாலியின் இந்த முய்ற்சிகளுக்கும் பெரிதும் துணையாக அவரது பெற்றோர்கள் நின்றார்கள். மிதாலியின் தாய் தன்னுடைய வேலையைத் துறந்து மிதாலியின் பயிற்சிக்காக அவரது டூவீலரில் அழைத்துச் சென்றார். தன் கையினால் சமைத்த சத்தான உணவுகளை மிதாலி சாப்பிட தயாரித்துக் கொடுத்தார். 1997 உலக கோப்பைக்கான உத்தேச அணியில் 14 வயதாக இருந்த மிதாலி சேர்க்கப் பட்டார். ஆனால் துரதிருஷ்ட வசமாக இறுதிப் பட்டியலில் இடம்பெற வில்லை.

 ஏர் இந்தியா அணிக்காகவும் ரயில்வே அணிக்காகவும் விளையாடிய மிதாலி 16  வயதில் இந்திய அணிக்காக விளையாட்த் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று கணித்த அவரது கோச் சம்பத் குமார் மிதாலி முதல் போட்டியில் விளையாடியபோது பார்க்க முடியவில்லை. ஆம். அவர் மிதாலி விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

 

  பள்ளி வயதில் பரதநாட்டிய பயிற்சியையும் மேற்கொண்ட அவருக்கு நடனமும் சிறப்பாக வந்தது. பள்ளி அளவில் பல மேடைகளில் பரதம் ஆடி பரிசுகளை  அள்ளிச்சென்றார்.அவரது அபிநயத்தால் பலரின் மனதைக் கவர்ந்தார்  மிதாலி எட்டாவது படிக்கும் வரையில் பரதம் ஆடிக்கொண்டிருந்தார். பரதநாட்டியம்தான் அவரது முதல் காதல். ஆனால் ஒருநாள் அவரது பரதநாட்டிய குரு மிதாலியை அழைத்துக் கேட்ட ஒரு விஷயம் அவரது வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிட்டது. அது என்ன?

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2