Posts

Showing posts from July, 2021

கிரீடம்!

Image
  கிரீடம் !           நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   பாலாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளி பரபரப்பாய் இருந்தது . இன்று அந்த பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றிபெறுவதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய கல்வி ஆலோசகர் கருணாகரன் வழங்க உள்ளார் .   பள்ளியின் தாளாளர் பார்த்தசாரதியும் பிரின்ஸ்பல் நரசிம்மனும் நுழைவாயிலில் மாலையோடு கருணாகரனின் வரவுக்காக காத்திருந்தனர் . கருணாகரனின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது மிகவும் அரிது . அவரது ஆலோசனைகளை கேட்பதற்காக பெரிய கல்லூரிகள் ஐ . ஐ . டிக்கள் கூட வருடக் கணக்காக காத்துக்கிடக்கின்றன . பாலாம்பாள் பள்ளி தற்போது தமிழ்நாட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான வளர்ச்சியை பெற்றுவருகிறது . அதன் மாணவர்கள் பல்வேறுதுறைகளில் பெரிய சாதனைகளை பெற்றுவருகின்றனர் . அந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தவமிருக்கின்றனர் . பள்ளியின் கட்டணம் அதிகம்தான் என்றாலும் அங்கே தன் பிள்ளை படித்தால் ...