Posts

Showing posts from November, 2016

எடை!

Image
  எடை!   “என்னங்க! பழைய பேப்பர் நிறைய சேர்ந்து போச்சு! எடைக்கு போடனும்!” என்றாள் மீனாட்சி  “சரி சரி! வழக்கமா வர பொன்னுசாமி அண்ணாச்சியை வந்து எடை போட்டு எடுத்துட்டு போக சொல்லறேன்!”    ”வேணாங்க! புதுசா ஒரு பையன் வந்து கேட்டுட்டு போயிருக்கான்! கிலோவுக்கு பத்துரூபா தரேன்னு சொன்னான். அண்ணாச்சி 8 ரூபாவுக்குத்தான் எடுத்துப்பாரு! சுளையா ரெண்டு ரூபா கூட வருது! உங்ககிட்டே சொல்லிட்டு போடுவோம்னு நாளைக்கு வா!ன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்! அந்த பையன்கிட்டேயே போட்டுருவோமா?”   ”பொண்ணுசாமி அண்ணாச்சி ஏமாத்திற ஆள் கிடையாதே! நியாயமான விலைக்கு எடுத்துக்கிறவர்  வேணும்னா அவர்கிட்டேயே இந்த மாதிரி பத்துரூபாய்க்கு எடுத்துக்கறேன்னு சொல்றாங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டு பார்ப்போமே!” என்றேன் நான்.   ”நீங்கதான் அவரை மெச்சிக்கணும்! காலத்துக்கேற்ப மாத்திக்கணும்! இன்னும் அதே பழைய சைக்கிள்  பழைய தராசு எடுத்துட்டு வந்துகிட்டிருக்காரு! புது பையன் எலக்ட்ராணிக் தராசுலே எடை போடறான்! கூடுதலா ரெண்டு ரூபாவும் தரான் அவன்கிட்டே போடாம நீங்க என்னடான்னா அண்ணாச்சிக்...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.    போர்த்துக்கொண்டதும் போர்வையைத் தேடினார்கள்! பனி! 2.    அணிந்த முத்துக்களை கழற்றிக்கொண்டது சூரியன்! பனி! 3.    சாய்ந்த பொழுது! நிமிர்கிறதுவாழ்க்கை! நடைபாதைவியாபாரிகள்! 4.    உறவைப்பிரிக்க போராட்டம்! பறவையிடம்விளையாடுகிறது காற்று! தூக்கணாம்குருவிக் கூடு! 5.    சிரித்த செடிகள் அழுதுவடிந்தன! உதிர்ந்த பூக்கள்! 6.    சிதறும் பண்டங்கள்! சேதி சொல்லி அழைத்தன! எறும்புகள்! 7.    தொடர்வண்டி தடம்புரண்டது பாதிப்பில்லை எறும்புகள்! 8.    மறைந்து போனாலும் மறையவில்லை! பாடகரின் குரல்! 9.    ஒரு நொடியில் வேறு உலகம் அழைத்துச்செல்கிறது! குழந்தையின் பேச்சு! 10.  பிரித்து வைத்தாலும் ஒட்டிக்கொள்கிறது குழந்தைகளிடம் மண்! 11.  ஒளிந்த நிலவை தேடிய நட்சத்திரங்கள்! அமாவாசை! 12.  பெரும் நிசப்தம்! உணர்த்திவிட்டு சென்றது பேரொலி! 13. வெளிச்சம் போட்டு காட்டியது ஒளிர்ந்த விளக்க...

இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!

Image
இந்த வார பாக்யாவில் என்  ஏழு ஜோக்ஸ்!     பாக்யா இதழில் எனது படைப்புக்கள் வெளியாகி வருவது நம் நண்பர்கள் அறிந்த ஒன்று. இந்த வாரமும் என்னுடைய ஏழு ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது.   பாக்யா இதழில் வெளிவந்த ஜோக்ஸ்களை தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் ஜான் ரவி சார் பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். குழு தோழர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.   பாக்யா இதழ் எங்கள் பகுதியில் கிடைப்பது இல்லை. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் பத்திரிக்கைகளில் வரும் குழுவினரின் படைப்புக்களை ஸ்கேன் எடுத்து குருப்பில் பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பது மிகவும் உதவியாக உள்ளது.    புதுப்புது எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் பாக்யா குழுமம் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரித்து வருவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பாக்யா ஆசிரியர் திரு பாக்யராஜ், பொறுப்பாசிரியர், சித்தார்த், மற்றும் ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம், பூங்கதிர் சார் மற்றும் வலையுலக நண்பர்கள் , என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் சகோதர சகோத...

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 26

Image
நொடிக்கதைகள்! பகுதி 26 பூமராங்க்!   “இந்த வயசுல நான்…” என்று சொல்ல ஆரம்பித்த அப்பாவை இடைமறித்து “உங்க அப்பாவும் இப்படித்தான் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாரு உங்களை மாதிரி!” என்றான் மகன். பொய்!:    “ஃபீவரா இருந்தது ஹோம் ஒர்க் எழுதலேன்னு மிஸ்கிட்ட சொல்லிடறேன்! என்ற குழந்தையிடம் “இந்தவயசிலேயே பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” என்று எரிந்து விழுந்தவன்.,ரிங்கிய செல்லை ஆன் செய்து “ ஆன் த வே சார்! வந்துகிட்டே இருக்கேன்! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல அங்கிருப்பேன்!” என்று பொய் சொன்னான். ஐநூறு!   மளிகை கடை அண்ணாச்சியிடம் எப்படியோ பேசி சாமர்த்தியமாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை தள்ளிவிட்டு வீட்டுக்கு வருகையில் ஏங்க! முருகேசு உன்கிட்ட வாங்கின ஐநூறை திருப்பி தந்துட்டு போனாரு என்று ஐநூறு ரூபா நோட்டை நீட்டினாள் மனைவி. ஆயிரம்! ஆயிரம் முறையாவது நடந்து திரிந்து நண்பனிடம் கடன் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தான். செய்தியில் “ஆயிரம் ஐந்நூறு ரூபா நோட்டுக்கள் செல்லாது” என்று ஒடிக் கொண்டு இருந்தது. கணக்கு!    த...

இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!

Image
இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!   வாராவாரம் என் ஜோக்ஸ்கள் பாக்யாவில் படையெடுத்து வருவதை அறிவீர்கள்! ஒரு மாறுதலுக்கு இந்த வாரம் மன்னர் ஜோக்ஸ் இல்லாமல் ட்ரெண்டி ஜோக்ஸ்கள் பாக்யாவில் இடம்பிடித்தது. பாக்யாவில் எனது படைப்பு வந்ததும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு ஜான் ரவி சார் தகவல் அளித்தார். உடன் தோழர்கள் வாழ்த்துக்கள் நல்கினார்கள்.     சக எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி ஆலோசனைகள் தரும் நல்லதொரு வாட்சப் குழுவாக தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு திகழ்கிறது. குழு அட்மின்ஸ் வைகை ஆறுமுகம் சார், பாண்டியன் சார் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்! நன்றிகள்! வலைப்பூவில் ஊக்கமளித்து வரும் சக நட்புக்கள் என் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்!    எனது படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினர் திரு பாக்யராஜ் சார், ஆசிரியர் சித்தார்த் சார், குருமூர்த்தி சார்! மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் முக்கியமாக எனது படைப்புக்களை பாக்யா பக்கம் திருப்பி விட்ட பூங்கதிர் சாருக்கும் எனது நன்றிகள்! இனி ஜோ...

சாமார்த்திய திருடன்! பாப்பா மலர்!

Image
முன்னொரு காலத்தில் விவேகன் என்ற திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி விவேகம் உள்ளவன். திருடினாலும் திருந்தத் திருடுவான். மிகுந்த திறமை சாலியான அவன் திருடன் ஆனது அவனது பொல்லாத காலம்.  உள்ளூரில் திருடி திருடி பிழைத்துவந்த அவனுக்கு சலித்துப்போய்விட்டது. வெளியூருக்குப் புறப்பட்டான். அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய பண்ணைவீடு இருந்தது. அங்கு சென்று வேலை கேட்டான். முன் பின் தெரியாத உனக்கு எப்படி வேலை தருவது? என்று கேட்டார் பண்ணையார். ஒரு மாதம் இங்கு எனக்கு ஒத்தாசையாக இரு. உன் வேலை எனக்கு பிடித்து உன் மீது நம்பிக்கை ஏற்பட்டால் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.  விவேகனும் ஒருமாத காலம் உண்மையாக அங்கு உழைத்தான். பண்ணையாரிடம் மிகுந்த விசுவாசமாக நடந்து கொண்டான். இன்னு கொஞ்ச நாள் பண்ணையாரின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் இங்கு கொள்ளை அடிப்பது சுலபம் என்று அவரது நம்பிக்கையை பெறும் வண்ணம் வேலை செய்து வந்தான்.   சில நாட்கள் கடந்தன. ஒருநாள் பண்ணையார் விவேகனை அழைத்து  “விவேகா! நீ என்னதான் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும் நீ ஒரு திருடன் என்...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87 1.    ஆயிரம்தான் இருந்தாலும் சொந்தங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேணாமா? ஆயிரம் இல்லாததுதாங்க பிரச்சனை! என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபா நோட்டு செல்லாத போயிருச்சுன்னு திருப்பித் தர மாட்டேங்கிறார்! 2.    ஒருத்தர்கிட்டே  கைமாத்தா ஒரு ரெண்டாயிரம் வேணும்னு கேட்டுட்டிருந்தியே கிடைச்சுதா? கிடைச்சுது! ஆனா மாத்தத்தான் முடியலை! 3.    அந்த டைலர் இதுக்கு முன்னாடி வாஸ்து நிபுணரா இருந்தவராம்! அதுக்காக வாஸ்து பார்த்துதான் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பேன்னு சொல்றது நல்லா இல்லை! 4.    பேங்க்ல விரல்ல வைக்க வைச்சிருந்த மை நான் கட்டப்போன பணத்துல கொட்டிருச்சு! அப்புறம்? கருப்பு பணம் ஆயிருச்சு! 5.    நம்ம காதல் எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு? அப்புறம்? இதுவரைக்கும் எத்தனை ரூபாவுக்கு டாப் பண்ணி இருக்கான்னு கேட்டாரு!! 6.    என் பொண்டாட்டி சேர்த்துவைச்சிருந்த ப்ளாக் மணி எல்லாம் வெளியே வந்துருச்சு! அப்புறம்? அதை மாத்தறதுக்கு என்னை பேங்க் வாசல்ல வைச்சு லாக் பண்ணிட்ட...