Posts

Showing posts from September, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81 1.    தலைவர் எதுக்கு திடீர்னு கவுன் போட்டுகிட்டு வர்றார்? அவர் வார்டு “கவுன்” சிலருக்கு போட்டியிடப் போறாராம்! 2.    அதோ போறாரே அவர் அதிகார மையத்திலே இருக்கார்! செக்ரெட்ரியேட்ல ஒர்க் பண்றாரா?  ஊகும்! மிளகா மிஷின் நடத்திகிட்டு இருக்கார்! 3.    அந்த டாக்டருக்கு பேஷண்ட்டுங்க பணத்தை கொட்டி கொடுக்கிறாங்களா அப்படி என்ன வைத்தியம் பண்றார்?   ஹேர் டிராஸ்பிரண்ட் பண்றார்! 4.    நம்ம மானேஜரோட ஆக்டிவிட்டி கொஞ்ச நாளா சரியில்லையே ஏன்? அவர் புதுசா வாங்கின ஜியோ சிம் இன்னும் ஆக்டிவேட் ஆகலையாம்! அதான் டென்ஷனா இருக்கார்! 5.     நம் மன்னர் இயற்கை ஆர்வலராமே! அடிக்கடி காட்டுக்கு சென்று விடுகின்றார்?   நீ வேறு காட்டு வாசி தலைவரின் பெண்ணின் பெயர் இயற்கை யாம்! 6.    என் பொண்டாட்டியோட கைப்பக்குவம் யாருக்கும் வராது! அவ்வளவு நல்லா சமைப்பாங்களா? அவ்வளவு நல்லா யாருக்கும் தெரியாத மாதிரி அடிப்பா! 7.    அந்தப் புலவர் இட்டுக் கட்டி பாடுவதில் வல்லவர...

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 20

Image
1.தேசியம்!    பீஹாரிகளால் கட்டப்பட்டு ஆந்திரர்களால் கடப்பை கல் பதியப்பட்டு வங்காளிகளால் வர்ணம் பூசப்பட்டு மும்பைகார்கள் வயரிங்க் செய்ய கன்னடர்கள் சமையல் செய்ய சம்ஸ்கிருதத்தில் ஐயர் மந்திரம் ஓதி ஓமம் வளர்க்க கிரகப்பிரவேசம் ஆனது தமிழனின் வீடு. 2.நிஞ்சா டெக்னிக்!     “ஹோம் ஒர்க் எழுது! என்று  சொன்ன போது அப்பா! நிஞ்சா டெக்னிக் ஏதாவது பண்ணி ஹோம் ஒர்க் எழுதினா மாதிரி டீச்சரை ஏமாத்தா ஏதாவது வழி இருக்கா?” என்றான் பையன். 3.மகிழ்ச்சி!      தந்தை கைது ஆனதும் பிள்ளைகள் எல்லோரும் கூடி பார்ட்டி வைத்தனர். கல்வித் தந்தை கைது என பத்திரிக்கை பேனரில் செய்தி. 4.விழிப்புணர்வு!     திருமண விருந்தில் கொடுத்த பீடாவை மறுத்து நான், பீடா, பான் எல்லாம் போடறதில்லைங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்  ப்ளாக்கில் பான் விற்கும் அந்த நபர். 5.செல்ஃபி:      பொம்மை போனை தூக்கி எறிந்த பாப்பா சொன்னது. இந்த போன்ல செல்ஃபியே எடுக்க முடியலை! சுத்த வேஸ்ட்! எனக்கு வேண்டாம். 6.ராங் ஜர்னி!      “...

தளிர் சென்ரியு கவிதைகள்!

Image
தளிர் சென்ரியு கவிதைகள்! 1.அரசவைப் புலவர்களான அமைச்சர்கள்! சட்டமன்றம்! 2.வீடுதேடிவந்த புடவைகள்! கொலுப்படியில் அமர தனிப்படி! 3.நீரூற்றாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது காவிரி பிரச்சனை! 4.மூடிய கதவுகள்! தட்டியும் திறக்கவில்லை! காவிரி நீர்! 5.நெகிழிப்பைகள் வருகை நினைவிழந்தன துணிப்பைகள்! 6.ஆட்டம் போட்ட பூமி! அடங்கிப்போனது ஊர்! பூகம்பம்! 7.விளக்குமாற்றுக்குப் பஞ்சுமெத்தை விளையாட்டாகிப் போனது சொத்தை! ஒலிம்பிக்! 8.கால்கள் வளைந்தாலும் வளையவில்லை நம்பிக்கை! தங்க மாரியப்பன்! 9வாரி இரைத்துவிட்டு பொறுக்கிறார்கள்! தேர்தல்வெற்றி! 10.விலை பேசப்படும் வாக்குரிமை! வலை வீசும் வேட்பாளர்கள்! தேர்தல்! 11. கடைவாசல் தவம்! கடைந்தேற வழியில்லை! குடிமகன்! 12.விளைந்து அறுவடையில்லை! வீணாய் போனது மழைநீர்! 13.நோட்டுக்கள் சிக்கின! விடுபட்டார் அமைச்சர்! 14.இறக்கும் வரை போராடிக்கொண்டிருந்தன! அரசுப் பேருந்துகள்! 15.சில்லரைத் தட்டுப்பாடு! உறக்கம் பிடிக்கவில்லை! குருக்களுக்கு! 16.குழலூதும் கண்ணன்!...

குதிரை கற்றுக்கொடுத்த பாடம்! பாப்பா மலர்!

Image
வீராபுரம் என்ற சிற்றூரில் கேசவன் என்ற வணிகர் ஒருவர் வசித்துவந்தார். அந்த ஊரை அடுத்துள்ள நகரத்தில் பெரிய வியாபாரியாக அவர் திகழ்ந்தார். கேசவன் ஒரு கடைந்தெடுத்த கருமி! வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அவர் பிறருக்கு ஒரு கவளம் சோறு கூட போட மாட்டார். வேலை செய்யும் பணியாளர்களுக்கும் குறைந்த அளவே சம்பளம் தருவார். அவரிடம் குதிரை ஒன்று இருந்தது. அவர் எங்கு செல்வதானாலும் குதிரையில்தான் செல்வார். அந்த குதிரை இல்லாமல் அவருக்கு பொழுது போகாது. பணி நிமித்தமாக எங்கு செல்வதாக இருந்தாலும் குதிரை சவாரிதான் அவருக்கு பிரியம்.      அவரின் வாகனமான அந்த குதிரை அவரிடம் வரும் வரை நன்றாக கொழுத்து  வலிமையாக இருந்தது. கருமியான கேசவன் அதற்கு ஒழுங்காக உணவு அளிப்பதில்லை! நாளொன்றுக்கு சிறிதளவு புல்கட்டும் கொள்ளும் மட்டும் வைப்பார். பாவம் அது குதிரையின் கால் வயிறுக்கு கூட பத்தாது. அதனால் அது நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டு இருந்தது. ஆனாலும் கேசவன் குதிரையை கண்டுகொள்ளவில்லை. வடி கட்டிய கஞ்சனான அவர் குதிரைக்கு தீனி போட முன் வரவில்லை.    அவருடைய குதிரை இரண்டு ...

இந்த வார பாக்யாவில் (செப்30-அக்-6) எனது ஜோக்ஸ்கள் பத்து!

Image
இந்த வார பாக்யாவில் என்னுடைய பத்து ஜோக்ஸ்கள்! பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்தாலே ஓர் தனி பரவசம்தான்! பல இதழ்களுக்கு தொடர்ந்துஎழுதி அனுப்பினாலும் பாக்யாவில்  என்னுடைய ஜோக்ஸ்கள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக( இடையில் ஒருவாரம் இல்லை) வெளிவந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. பாக்யாவை அறிமுகம் செய்து வைத்த பூங்கதிர் சார்! தொடர்ந்து படைப்புக்களை வெளியிட்டுவரும் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி!  இதோ ஜோக்ஸ்கள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கஷ்டங்கள் போக்கும் கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!

Image
கஷ்டங்கள்  போக்கும்  கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி! சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். சிவனுடைய அம்சமான இவர் ஆலயங்களின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டார். அக்காலங்களில் ஆலயங்களின் கதவை பூட்டி பைரவரின் சன்னதியில் வைத்துவிடுவது வழக்கம். மறுதினம் பைரவரை வழிபாடு செய்து சாவி எடுத்துச் சென்று கதவு திறப்பார்கள்.   பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி திதி ஆகும். ஒரு மாதத்தில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என்ற இரு அஷ்டமி திதிகள் உண்டு. அதில் தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட உகந்தது ஆகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம் , காலமாக நடைபெற்று வருகிறது . பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது . ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும் . அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது .   ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை ...