குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!
குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்! கடந்த வெள்ளியன்று வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு போட்டிருந்தேன். வரலஷ்மி மா இண்டிக்கு ராவம்மா…! என்ற பாடலை யூடியுபில் பார்த்தேன். இன்றைய தினத்திற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று யூ டியுப் டவுன் லோடரில் தரவிறக்கினால் கொஞ்சத்தில் தரவிறங்க வில்லை. ஏதோ எரர் காட்டிக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போயிருக்க வேண்டும். அங்கேதான் என் கை சும்மா இருக்கவில்லை. கூகுளில் சர்ச் செய்து வேறு ஒரு யு டியுப் டவுண்லோடரை இன்ஸ்டால் செய்து அந்த பாடலை டவுண்லோடிட்டுவிட்டேன். மாலையில் ஏழு மணி அளவில் பதிவிட்டு கொள்ளலாம் அதுவரை சக பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம் என்று எண்ணி பதிவுகளை வாசித்து கருத்திட ஆரம்பித்தேன். அப்படியே யாதோ ரமணி அவர்கள் தளம் சென்றதும் விளம்பரம் ஒன்று குறுக்கிட்டது. இவர் தளத்தில் இப்படி ஆகாதே என்று அடுத்த தளம் சென்றாலும் படிப்பதற்குள்ளேயே விளம்பரம் ஆக்ர...