கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 36
கொஞ்சம்
சிரியுங்க பாஸ்!
1.
தலைவர்
ஊழல் பண்றவங்களோட எப்பவும் கூட்டு வச்சிக்க மாட்டார்!
அவ்ளோ நல்லவரா?
நீ வேற எதையும் தானே தனியா பண்ணனும்னு
நினைப்பார்!
2.
தலைவர்
எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தற இடத்தை மூன்று சுற்று சுற்றி வர்றாரு!
மூன்று சுற்று பேச்சுவார்த்தைன்னு
சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாரு போல!
3.
புலவரே!
பொய்யுரைத்த வாய்க்கு போஜனம் கிட்டாது என்பது உண்மையா?
நிஜம்தான் மன்னா! தங்களை புகழும் எனக்கு ஒருவாய்
சோறு கிட்டவே இல்லையே!
4.
இப்ப
எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே?
நீங்கதானே சொன்னீங்க! மாமியாரை தாயா பார்த்துக்கணும்னு!
வரசொல்றேன் பார்த்துக்கங்க!
5.
பார்டர்ல
பிரச்சனையானதுல ஆபிஸுக்கு லேட்டா வர்றியா? அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?
நான் சொன்னது என்பொண்டாட்டி
பட்டுப்புடவை பார்டரை!
6.
லோன்
வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா? ஏன்?
லோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே!
7.
ஒரு
டஜன் சீப்பு வாங்கச் சொல்லி மானேஜர் உத்தரவு போட்டிருக்காரா ஏன்?
யாரோ அவர்கிட்ட ஆபிஸ்ல லஞ்சம்
தலைவிரிச்சு ஆடுதுன்னு சொல்லிட்டாங்களாம்!
8.
பதுங்கு
குழிகள் நிறைய வெட்டச்சொல்கிறாரே மன்னர் என்ன விஷயம்?
இல்லாவிட்டால் எதிரி மன்னன்
பல்லாங்குழி ஆடிவிடபோகிறான் என்றுதான்!
9.
இனிமே
பிறந்தநாள் கொண்டாடவே மாட்டேன்னு தலைவர் சொல்றாரே ஏன்?
போஸ்டர் அடிச்ச காசு கூட வசூலாகாத
எரிச்சல்லதான் அப்படி பேசுறாரு!
10. இந்த குழந்தை வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா
வருவான்னு எப்படி சொல்றீங்க?
ஆள மாத்தி ஆள் தாவிக்கிட்டே
இருக்குதே!
11. என் பொண்ணு பின்னாடி ஆறு மாசமா சுத்தறியே?
அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?
இப்ப அவ மூணு மாசம் கர்பமா இருக்கான்னு
தெரியும்!
12. கால் அமுக்கிவிடாம என் மனைவி தூங்கவே மாட்டா?
இந்த காலத்திலேயும் இப்படி இருக்காங்களா?
நீ வேற நான் அவ காலை அமுக்கி
விட்டாத்தான் அவ தூங்குவான்னு சொல்ல வந்தேன்!
13. மக்களுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கேன்!
கடன் பட்டிருக்கேன்! அப்படின்னு தலைவர் சொல்றாரே என்ன விஷயம்?
தொகுதி பக்கம் தலை காட்டாம இருக்கிறதைத்தான்
அப்படி சிம்பாலிக்கா சொல்றாரு!
14. நகையை தொலைச்சிட்டு கவலைப்பட்டுகிட்டிருந்த
பொண்டாட்டிகிட்ட கவலைப்படாத கிடைச்சுரும் நம்பிக்கைத்தானே வாழ்க்கைன்னு சொன்னது தப்பா
போச்சு!
ஏன்?
அப்ப வாங்க கல்யாண் ஜுவல்லர்ஸ்
போகலாம்கிறா!
15. டி.வி காம்பியரரை கல்யாணம் பண்ணது தப்பா
போச்சு!
ஏன்?
பேசியே கொல்லுறா!
16. என்னம்மா சொல்றீங்க! உங்க பையன் ஆயிரம் ரூபாயை
முழுங்கிட்டானா எப்படி?
பையன் ஒரு ரூபாயை முழுங்கிட்டான்!
அதை எடுக்க டாக்டர் ஆயிரம் ரூபாயை பீஸா முழுங்கிட்டாரே!
17. மன்னரின் குரல் நடுங்கி இருக்கிறதே குளிர் ஜுரமா?
போர் சுரம்! எதிரி மன்னன் படையெடுத்துவருகிறானாம்!
18. எதிரி மன்னனுக்கு கொஞ்சம் இரக்கம் அதிகம்
என்று எப்படி சொல்கிறீர் மந்திரியாரே!
புரட்டி புரட்டி அடித்துவிட்டு
காயம் தீர களிம்பு கொடுத்து அனுப்பி இருக்கிறாரே மன்னா!
19. எதுக்கு பத்து பயில்வானுங்களை கட்சியிலே
திடீர்னு சேர்த்து இருக்கீங்க தலைவரே!
கட்சியிலே பலம் இல்லேன்னு யாரும் பேசக்கூடாது இல்லே!
20. தலைவர் புயல் வீசுற சமயத்துல எதுக்கு சுற்றுப்பயணம்
போகணும்னு அடம்பிடிக்கிறாரு!
சூறாவளி சுற்றுப்பயணம்னு அறிவிச்சிட்டாராம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தையும் ரசித்தேன் சகோ....
ReplyDeleteபோஜனம்
காம்பியர்
ஆயிரம் ரூபாய் முழுங்கிட்டான்..
சூப்பர்...
அனைத்து நகைச்சுவைகளும் அருமை. ரசித்தோம்.
ReplyDeleteசரவெடி அனைத்தும் கல்யாண் ஜூவல்லர்ஜூம் சிக்கிடுச்சே.... ஸூப்ப்ர்.
ReplyDeleteஎல்லாமே
ReplyDeleteசிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்