தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெள்ளை
அடித்தார்கள்!
மறைந்து
போனது!
அழுக்கு!
குழந்தையின்
சிரிப்பில்
கரைந்து போயின
துக்கங்கள்!
விளக்கேற்றி
விரட்டினார்கள்!
விடாமல்
தொடர்கிறது
இருட்டு!
ஈரம்
கசிகையில்
அணைந்து
போகிறது
நெருப்பு!
பற்று அறுத்ததும்
பக்குவப்பட்டது
உதிரும் சருகு!
தாய்க்கு பூச்சூட்டின
மரங்கள்!
உதிரும் பூக்கள்!
குடிபுகுந்த புழுக்கம்!
விரட்டி அடித்தது
காற்று!
உப்பை அள்ளிப் பருகினார்கள்!
இனித்தது!
கடல்!
நகை சூடிய மரங்கள்!
ஜொலித்தன!
மின்மினி!
நீரில்
மூழ்கியும்
நனையவில்லை
மரங்கள்!
நீர்நிலையில்
நிழல்!
திருட்டுப்
பொருள்!
இனித்தது!
தேன்கூடு!
தேங்கி
நிற்கையில்
ஓங்கி
வளர்கின்றன!
பாசிகள்!
மரங்களின்
பின்னே
மறைந்தன
கிராமங்கள்!
பதுக்கல்
பொருள்
பகிரங்கமாய்
விற்பனை!
இளநீர்!
இணைந்தன இமைகள்!
பிறந்தது
உறக்கம்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்!
நன்றி!
இரு கை அள்ளிப் பருகியும் குறையவில்லை, உம் ஹைக்கூ,,,,,,,,
ReplyDeleteஅத்துனையும் அருமை. நன்றி.
ஹைக்கூ அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகு. தொடர்ந்து எழுதுங்கள் தோழர்
ReplyDeleteநகைச்சுவை, கதை, கவிதை என்று மாறிமாறித் தரும் தங்களுடைய பாணி அருமையாக உள்ளது. அனைத்துத் துறையிலும் வித்தகராக உள்ள உங்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteமொத்தம் நூறு கவிதைகளை தந்தபின் அவற்றை நூலாக்கி வெளியிடலாமே..
ReplyDeleteமுயலுங்கள் ..
அனைத்தும் அருமை!
ReplyDelete
ReplyDelete"குழந்தையின் சிரிப்பில்
கரைந்து போயின
துக்கங்கள்!" என்பது உண்மை தான்.
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
அனைத்தும் அருமை...
ReplyDeleteஅனைத்தும் அருமை அருமை!
ReplyDeleteஹைக்கூக்கள் அனைத்தும் அருமை!
ReplyDelete