தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள் உடைபட்டுப்போகின்றன க
பாப்பாவுக்கு அன்பு வாழ்த்துக்கள். புகைப்படங்கள் இயற்கையாக உள்ளன.
ReplyDeleteவேத ஜனனி அழகான பெயர்....
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி செல்லத்துக்கு....
நீண்ட ஆயுளும், எல்லா வளங்களும் பெற்றும், கடவுளின் ஆசிகள் பூரணமாய் பெற்றும் வாழ வாழ்த்துகிறேன்...
அன்பு மலருக்கு அகவை ஆறு
ReplyDeleteஅடைகவே வாழ்வில் பெரும்பேரு!
வேதஜனனி நல்நா வளம் சிறந்தே
நாதன் அருளால் இளந்தளீரே வாழ்க
"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்"
செல்லமே!
அழியாப் புகழை அகிலத்தில் பெற்று
வாழிய வாழிய வளர் தளீரே!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வேத ஜனனி அனைத்து நலனும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteஜனனி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் தங்கக் கட்டிக்கு என் வாழ்த்துக்கள் பல. வளமும் நலமும் பெற்று வாழ உளம் நிறைய வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவேத ஜனனிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாவுக் கரசியின் நல்லாசி பலபெற்று
நீடூழி வாழவென் வாழ்த்து !
வேதஜனனிக்கு எங்கள் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!! இறைவனின் அருள் என்றும் பரிபூர்ணமாக நிலைத்திருக்கட்டும்!
ReplyDeleteஇன்று பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் மகள் வேத ஜனனிக்கு எனது உளங் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteகுழந்தைக்கும் அன்பும், ஆசிகளும். எல்லா செல்வங்களும் - குறிப்பாக கல்வி செல்வம் நிறைந்து நல்வாழ்வு வாழ ஆசிகள்.
ReplyDeleteபெரிசா வாடா சாமி
ReplyDeleteதங்களின் அன்பு மகளுக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
தங்கள் செல்ல மகள்
ReplyDeleteவேத ஜனனிக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்!
எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொதுத் தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களையும் தமது வசிப்பிட விபரங்களையும் எல்லோரும் அரிய தருவதை தவிர்க்கவும். முகநூலிலும் நண்பர்களுக்கானது என்று பகிர்ந்தாலும் அதில் அதிகம் பழக்கம் இல்லாத நபர்கள் இருந்தால் அதுவும் உசிதம் இல்லை.
இப்ராஹிம்.
மழலை ஜனனிக்கு வாழ்த்துக்கள்.!
ReplyDeleteதங்கள் தளத்தில் இணைந்துள்ளேன். இனி தொடர்கிறேன். நன்றி!
குழந்தைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி! எஸ். வேத ஜனனி
ReplyDeleteஅழகான படங்கள்.. செல்லத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவியுங்கள்.
ReplyDeleteநண்பரே...
ReplyDeleteதங்கள் மகள் வாழ்வின் செல்வங்கள் அனைத்தையும் குறைவில்லாமல் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
நன்றியுடன்
சாமானியன்
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி