உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!



உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு
ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை!
ஓய்விலும் ஓர் வேலை செய்து
திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு!

ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு
உழைக்கப் பிடிப்பதில்லை!
எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே
குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை!
என்பான்!
 ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு!
 ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு!
  ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம்!
   ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம்!

சிற்றெரும்புகள் தான் ஆனாலும்
கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை!
காட்டெருமைகளாய் இருந்தாலும்
காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை!

ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில்
உப்புக்கள் கூட  உழைப்பால்
இனிக்கின்றன!
தேயத் தேயவே பளிச்சிடுகின்றன
இயந்திரங்கள்!
வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு!
உழைப்பை நீ கைவிட்டால்
உயர்வு உன்னை கைவிடும்!
உழைப்புக்கு காலமில்லை!
உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க
நேரமில்லை!

உழைக்கத் துவங்கிவிட்டால் 
மலைகூட கடுகாகும்!
ஓய்வெடுக்க நினைக்கையில்
கடுகும் மலையாகும்!
இருபத்திநாலுமணி நேரமும்
ஓயாது சுற்றுகின்றன முட்கள்!
மூச்சிறுக்கும் வரை துடித்துக் கொண்டே
இருக்கின்றது இதயம்!
நினைவிருக்கும் வரை எதையோ
சிந்தித்துக் கொண்டே இருக்கிறது மூளை!
உயிர் இருக்கிறது! வலிமை இருக்கிறது!
திறன் இருக்க தேக்கம் ஏன் நண்பா!
தயங்காமல் உழைப்போம்!
தலைநிமிர்ந்து நடப்போம்!
அனைவருக்கும் எனது இனிய மே தின நல்வாழ்த்துக்கள்!




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. என்னையே நினைத்து ,நீங்கள் எழுதி இருக்கும் கவிதையை மிகவும் ரசித்தேன் :)

    ReplyDelete
  3. அருமை நண்பரே.
    உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும்... //

    சிறப்பான வரிகள்...

    ReplyDelete
  5. உழைப்பும் களைப்பும் உயிரைப் பேணும்
    உயர்வும் உணர்வும் மகிழ்வைக் கூட்டும்

    அருமை அருமை ! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. சுறுசுறுப்பை சிற்றெரும்புகளிடம் கற்றுக்கொள்ளவேண்டும். மே தினத்தில் இதுபோன்ற நல்ல வரிகளைக் கொண்ட கவிதை தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. "உழைக்கத் துவங்கிவிட்டால்
    மலைகூட கடுகாகும்!
    ஓய்வெடுக்க நினைக்கையில்
    கடுகும் மலையாகும்!" என
    அழகாகச் செய்தி கூறும்
    சிறந்த பாவரிகள்

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை.

    அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமையான கவிதை! நல்ல வரிகள் நண்பரே!

    ReplyDelete
  10. சிறப்பான உவமைகள். வளர்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2