தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


சுட்டதால்
சுட்டது பாறை
வெயில்!

பூமித்தாய்க்கு
பூப்பறித்துக் கொடுத்தது!
காற்று!

குற்றம் செய்யாமலேயே
பழி ஏற்றுக் கொண்டது
தண்ணீர்!

வேறோடிய நம்பிக்கை!
உயிரிழக்கவில்லை!
துளிர்த்த புற்கள்!

வெப்பம் கொளுத்துகையில்
ஓய்வெடுக்கச் சென்றது
காற்று!

தவழ்ந்து வருகையில்
ஓடிப்போகின்றன கவலைகள்!
குழந்தை!

படித்துக் கக்கிய பாத்திரங்கள்
பரிசீலனைக்கு வந்தன!
விடைத்தாள்கள்!

சுட்டெரித்தது
ஈரம் உறிஞ்சிய
மணல்!


உயிர்கொடுக்க
உயிரைவிட்டது
தீக்குச்சி!

விரிசல்களில்
விளைகின்றது
விருட்சங்கள்!

நம்பிக்கை வளர்கையில்
நன்றாய் செழிக்கிறது
வாழ்க்கை!

உயர்ந்துகிளர்ந்த மேகங்கள்!
ஈர்த்துக் கரைத்தன காற்று!
மழை!

பதுக்கி வைத்தன
சிறைபடவில்லை!
எறும்புகள்!

துடைத்து எறிந்தாலும்
துரத்திக் கொண்டே வருகின்றது
மண்!


சிரித்ததும்
சிறைபட்டன
பூக்கள்!

கூடவே வந்து குளிர்வித்தாலும்
நெருங்கவில்லை!
நிலா!

சுயத்தை மறைக்க
ரசம் பூசிக்கொண்டது
கண்ணாடி!


மலையின் சிரிப்பில்
மயங்கியது மக்கள் கூட்டம்!
அருவி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தவழ்ந்து வருகையில்
    ஓடிப்போகின்றன கவலைகள்!
    குழந்தை!

    அருமை
    அருமை நண்பரே

    ReplyDelete
  2. அருமையான ஹைக்கூ வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எல்லாமே அருமை. சகலத்திலும் திறமைசாலியாய் இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு ஹைக்கூம் அருமையாக உள்ளது வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. #சுயத்தை மறைக்க
    ரசம் பூசிக்கொண்டது
    கண்ணாடி!#
    அருமை ,பார்ப்பவர்களும் அதையே செய்கிறார்கள் :)

    ReplyDelete
  6. "குற்றம் செய்யாமலேயே
    பழி ஏற்றுக் கொண்டது
    தண்ணீர்!" என்பதில்
    எத்தனை கொடுமை!

    ReplyDelete
  7. அனைத்தையும் ரசித்தேன்...

    ReplyDelete
  8. அட அட அட எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். really great. உண்மையில் அசந்து தான் விட்டேன். எல்லாம் கடவுள் அருள் தான் பக்கத்திலேயே இருக்கிறீர்கள் அல்லவா அது தான் போலும் அவன் கடாட்ஷம் பூரணமாக கிடைத்துள்ளது அசத்துங்கள் ...!

    ReplyDelete
  9. உங்கள் சிந்தனைகள் இனிது.

    நான் அறியாப் புலம்.

    வேறென்ன சொல்ல .....!!

    நன்றி.

    ReplyDelete
  10. ஹைக்கூ ஹை என்று சொல்ல வைக்கின்றன அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2