மறதி!


வயது அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் நினைவுத்திறன் குறைந்து போகிறது எங்கோ படித்ததாக ஞாபகம். எதில் படித்தேன் யார் சொன்னார்கள் என்பது நினைவில் இல்லை. இதாவது பராவாயில்லை! பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர் கூட என் நினைவில் இருந்து மறந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் என்னுடைய பிரச்சனை.
           என்னங்க! சாப்பிடக் கூப்பிட்டு அரைமணி நேரம் ஆகுது! அங்க என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க! என்று மனைவி விளிக்கையில்தான் இன்னும் சாப்பிடவே இல்லை என்று உணர்ந்தேன். என்னுடைய பெரிய பிரச்சனையே இந்த ஞாபக மறதிதான். வீட்டில் மட்டும் அல்ல அலுவலகத்தில் கூட இந்த மறதியால் ஏகப்பட்டப் பிரச்சனைகள். அனுப்ப வேண்டிய மெயிலை அனுப்பாமல் வேண்டாம் என்று சொன்னதை அனுப்பி ஏகப்பட்ட அர்ச்சனைகள் மேனேஜரிடம்.

போனவாரம் அப்படித்தான்! காய்கறி வாங்க கடைக்குப் போனவன் காய்கறியெல்லாம் வாங்கிய பின்  பணத்தை கொடுத்துவிட்டு காய்கறிக்கூடையை எடுக்க மறந்து  கைவீசி வந்துவிட்டேன்.
  முந்தாநாள் மழை பேய்கிறதே என்று குடை எடுத்துப் போனேன் அலுவலகத்திற்கு மழைவிட்டு போனது. குடையையும் அலுவலகத்திலேயே விட்டுவிட்டேன்.
  இன்று எதையும் மறக்க கூடாது என்று முடிவெடுத்து  அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது காலையில் எடுத்து வந்த பொருட்களை செக் செய்து கவனமாக பேக்கில் அடுக்கினேன். அப்பாடா! இன்று எதையும் மறக்கவில்லை என்று பூரிப்புடன் வீட்டுக்கு வந்தேன். பேக்கை மனைவியிடம் கொடுத்துவிட்டு பெருமை பொங்க “பார்த்தியா! இன்னிக்கு எதையும் மறக்கவில்லை! என்று சொன்னதும் தாமதம்!
  “ உங்க பவுசை பாராட்டித்தான் ஆகனும்! மதியம் சாப்பிடக் கொடுத்த லஞ்ச் அப்படியே இருக்கு! சாப்பிடாமலேயே அப்படியே கொண்டுவந்திருக்கீங்க! என்று முறைத்தாள் மனைவி.
     “பேசாம ஒரு டாக்டரைப் போய் கன்சல்ட் பண்ணுங்க!” என்றார்கள் அலுவலகத்தில்.
    அடுத்த நாளே டாக்டரிடம் போய் நின்றேன்!  “டாக்டர் நீங்கதான் இந்த வியாதியிலிருந்து என்னை காப்பாத்தணும்!”
     நான் சொன்ன எல்லாவற்றையும் முழுவதும் கேட்ட டாக்டர்,  “என்ன சொன்னீங்க?” என்றார்.
   “மைகாட்! நான் சொன்ன எதையும் நீங்க காதிலே வாங்கிக்கவே இல்லையா?”
  மீண்டும் ஓர் அரை மணிநேரம் செலவழித்து அனைத்தையும் சொன்னேன்.
   “ ஐ காட் இட்! உங்களுக்கு மறதியே இல்லை!” என்றார் டாக்டர்.
     “ எப்படி டாக்டர் சொல்றீங்க?”
  முதல் அரைமணி நேரம் உங்க வியாதியை பத்தி சொன்னதை நான் திரும்ப கேட்டப்ப கரெக்டா ஒரு வரி விடாம திருப்பிச் சொன்னீங்களே! உங்களுக்கு மறதியே கிடையாது. ஒரு கேர்லஸ்தனம்தான் இருக்கு! இதையெல்லாம் நாம நினைவுல வைச்சிக்கணுமான்னு ஓர் அலட்சியம்! எல்லாத்தையும் சரியா செய்திடுவேன்னு ஓர் அசாத்திய நம்பிக்கை! அதனாலதான் கோட்டை விட்டுடறீங்க!”
      ”அப்ப எதிர் வீட்டுக்காரர், பால்காரர் இவங்களை கூட நான் மறந்திடறேனே டாக்டர்!”
      அத உளவியல் ரீதியா அனுகணும்! அவங்க மேல உங்களுக்கு ஓர் வெறுப்பு இருக்கலாம்!  இவங்களை தெரிஞ்சி வைச்சி என்ன ஆகப்போவுதுன்னு மைண்ட்ல அவங்க உருவை ஏத்தாம இருக்கலாம்!”

    “சரி டாக்டர்! அப்ப நான் என்ன செய்யணும்! மறக்காம இருக்கணும்னா!”
ஒவ்வொரு விஷயத்தையும் ஈடுபாட்டோட செய்யுங்க! கவனமா திட்டம் போட்டுக்கங்க! செய்ய வேண்டிய விஷயங்களை குறிப்பு எடுத்து வைச்சிக்கங்க! அப்புறம்  ஏதாவது ஓர் கைக்குட்டை மாதிரி பாக்கெட்ல வைச்சிக்கங்க! அதில் ஓர் முடிச்சை போட்டு வைச்சிக்கங்க! அந்த முடிச்சை பார்க்கும் போதெல்லாம் செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துரும்!”

  “ ஓக்கே டாக்டர்! உங்க ஆலோசனைக்கு நன்றி!”
  “சரி என்னோட கன்சல்டேசன் பீஸை கொடுங்க!”
“சாரி டாக்டர்! வீட்டில இருந்து கிளம்பும் போது பர்ஸை எடுத்துக்க மறந்துட்டேன்!”
    “அப்ப பஸ்ல எப்படி வந்தீங்க!”
   “டிக்கெட் எடுக்க மறந்துட்டேன் டாக்டர்!”
 “சரி பரவாயில்லை! அடுத்த முறை வரும்போது பீஸோட வாங்க! இப்ப நீங்க கிளம்புங்க!”
     சாரி டாக்டர்! நான் வீட்டுக்கு போற வழியை மறந்துட்டேன்!


  டிஸ்கி} நாளை கரூர் பயணம்! ஒரு நான்கு நாட்கள் பதிவுகளுக்கு இடைவேளை! வந்தபின் சந்திக்கின்றேன்!   

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வச்சானா ஆப்பு டாக்டருக்கு ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. பெரும் பாலும் மறதிக்கு அலட்சியமும் அசட்டையும் கூட காரணம் தான்.
    சரி நீங்கள் நன்றாக என்ஜாய் பண்ணிவிட்டு வாருங்கள் எல்லாம் மறக்காமல் எடுத்து வைத்தீர்கள் அல்லவா ஹா ஹா......

    ReplyDelete
  3. ஒன்று சொல்ல வேண்டும் தோழர். உங்களுக்கு எள்ளலோடு கூடிய ப்ரோஸ் வசப்படுகிறது. கூடுதல் கவனத்தை இதில் ஒதுக்குங்கள். பின்னிடுவீங்க

    ReplyDelete
  4. பெரிய தலை இரா. எட்வின் சொல்லிட்டார்..
    அப்புறம் என்ன
    கலக்குங்க ப்ரோ

    ReplyDelete
  5. இடைவேளை காரணமாகத் தான் கடந்த சில நாள்களாக தொடர் பதிவோ. ரசித்தேன்.

    ReplyDelete
  6. ஹா... ஹா... அனைத்தும் மறந்து... ஹா... ஹா...

    ReplyDelete
  7. மறதி பல சமயங்களில் நல்ல வசதி! :)

    ReplyDelete
  8. மறதி நல்லது என்று தோன்றுகிறது. ஆனால் எதையும் மறக்க முயல. தங்கள் பதிவு அருமை. நன்றி.

    ReplyDelete
  9. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  10. ஹஹஹஹஹ் மறதி எப்படி உதவுகின்றது பாருங்கள்! தர்மத்தின் தலைவன் படம் ரஜனி நினைவுக்கு வந்தார்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!