தளிர் சென்ரியு கவிதைகள்!

தளிர் சென்ரியு கவிதைகள்!


 ஆட்டம் போட்டவர்களுக்கு
 ஆடிக் காண்பித்தது பூமி!
 நிலநடுக்கம்!

குளிர் விட்டு போனதால்
நடுங்கியது பூமி!
நிலநடுக்கம்!

ஜவ்வாய் இனித்தது
கரைந்ததும் கசந்தது!
தீர்ப்பு!

பாதை மாறிய வழக்கு!
உபாதையானது!
சல்மான்கான்!

 கரையைக் கடந்த புயல்!
 இயல்புவாழ்க்கைக்கு திரும்பிய அமைச்சர்கள்!
 அம்மா வழக்கு!


 உரம் போடாமலே
 நிறம் மாறின வயல்கள்!
 வீட்டுமனைகள்!

 முதலை இழந்து
 கொள்முதல் ஆனது பணம்!
 மனையான வயல்கள்!

 இலக்கினை எட்டியும்
 தோற்றுப்போனது அரசு!
 டாஸ்மாக்!

சொர்கத்தில் வாழ்ந்தவர்களுக்கு
நொடியில் நரகம் காட்டியது!
பூகம்பம்!

விளையுள்  அதிகரிக்கையில்
வியாதியும் அதிகரித்தது!
நவீன வேளாண்மை!

சுற்றிலும் வயல்வெளியில்
உதயமானது நகரம்!
வீட்டு மனை!

எல்லாம் கிடைத்தும்
எதையோ இழந்து நிற்கின்றது!
நகரம்!

குடிநீருக்குத் தட்டுப்பாடு!
தட்டுப்பாடில்லை!
குடிமகன்களுக்கு!

விதவிதமாய் கட்டணங்கள்!
ஒரேவிதமாய் பயணம்!
அரசுப்பேருந்து!

குளிர்வித்து
கொல்கின்றன
குளிர்பானங்கள்!

மவுன சாட்சியாக காந்தி!
மரணித்தது நீதி!
லஞ்சம்!

வெள்ளை அடிக்கப்பட்டது
அரசு மாளிகை!
கருப்பு சேர்ந்தது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்க படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2