பிரதோஷம் என்றால் என்ன? ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடுகின்றார். எனவே நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுவே பிரதோஷகாலம் என்றும் சொல்லப்படுகிறது. பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும். வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது. தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை. நித்தியப் பிரதோஷம்: ...