Posts

Showing posts from December, 2014

ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது? கதம்பசோறு பகுதி 55

Image
கதம்பசோறு! பகுதி 55 போக்குவரத்து தொழிலாளர் போராட்டமும் உறங்கும் அரசும்!        ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட களம் இறங்கிவிட்டார்கள். அவர்களது கோரிக்கைகள் ஒன்றும் தள்ளிவிடக் கூடியதாக இல்லை! மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்ல முக்கிய வாகனம் பேருந்துதான். அலுவலகம், பள்ளி, பொழுதுபோக்கிடங்கள் என்று எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து மிக அவசியம். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே போராட்டம் தொடங்கிவிட தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அதுவும் விழா நாட்களில் இந்த மாதிரியான போராட்டங்கள் விழாவையே குலைத்துவிடும். வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கும் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் பேருக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் ஜனத்திரளுக்கு அவை போதுமானதாக இல்லை! தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவுக்கு வராமல் அரசு உறங்கிக் கிடக்கிறது. அவர்களுக்கென்ன இப்போது தேர்தலா வரப்போகிறது? அப்போதுதான் ஏழைகளின் கஷ்டம் அவர்களுக்குப் புரியும். கடலில் விழுந்த விமானம்!     காணாமல் போன  ஏர் ஏசியன்   விமான

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.மறைந்து முத்தம்  காட்டிக்கொடுக்கின்றன கால்கள்!    ஆற்றுமீன்கள்! 2.கரையக்கரைய  வெளுக்கிறது பூமியின் அழுக்கு!  மேகம்! 3.எதிரியின் ஊடுறவல்  ஆட்டம்கண்டது உடல்!  குளிர்! 4.சலித்தது  மிஞ்சவில்லை நீர்!  மேகங்கள்! 5.குளத்தில் இறங்கி குளித்தாலும்  வாடிக்கொண்டிருந்தது  மரங்கள்! 6.நனைந்த மரங்களை  துவட்டி விட்டது காற்று!  மழை! 7.அருகில் இருந்தும்  தூர நிறுத்துகிறது!  எண்ணங்கள்!   8.ஒளிக்குப் பின்னே  ஒளிந்துகொண்டது இருட்டு!  விளக்கு! 9.ஈரத்தடங்கள்!  எளிதாய் அழித்தது  காற்று! 10.கைகொடுத்தவனை  கழற்றிவிட்டார்கள்!  துணிக்கிளிப்புகள்! 11.காற்றுவிரட்டுகையில்  பூமியிடம் அடைக்கலமாகின்றன  பூக்கள்! 12.அழுத்தம் அதிகமானதும்   வெடித்தது மேகம்!   மழை! 13.தாயான குழந்தைமடியில்   சுகமாய் உறங்குகின்றது   பொம்மை! 14.காணாமல்போன சூரியன்!   கதறி அழுதது வானம்!    மழை! 15.பிடித்தவர்களிடம்   பிடித்துப்பார்க்கிறது குழந்தை!   அடம்! 16.படிக்காமலேயே நிறையக்   கற்றுக்கொடுக்க

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

Image
     முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.    “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.    அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.      அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குறை சொல்லக் கூடாது! என்றது.     இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிங்கராஜ

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26

Image
   கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26 தலைவருக்கு செண்ட்ரல்ல பவர் அதிகம்! பிரதமர்கிட்டேயா இல்ல அமைச்சர்கள் கிட்டேயா? நீ வேற நான் சொன்னது செண்ட்ரல் ஜெயில்லன்னு! பாரதரத்னா விருதை கோடானுகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் அனுஷ்காவிற்கு தராமல் மாளவிகாவிற்கு தந்ததை வன்மையாக கண்டிக்கிறோம்..!     தலைவரே! அது மாளவிகா இல்லே மாளவியா! தலைவர் எதுக்கு இவ்ளோ பெரிய காந்தத்தை முதுகிலே கட்டிக்கிட்டு திரியறார்!     மக்களை கவர்ந்து இழுக்க முயற்சி பண்றாராம்! கல்யாணமான புதுசுல என் வொய்ஃப் வாயைத் திறந்து எதையும் பேசவே மாட்டா?      இப்போ?    வாயைத் திறந்தா மூடவே மாட்டேங்கிறா! மன்னா! இளவரசர் தங்கள் மகன் என்பதை நிரூபித்துவிட்டார்! அடடா! அப்படி மெச்சும்படி என்ன காரியம் செய்தான்? கோலிவிளையாட்டில் தோற்றுவிட்டு நண்பர்களை ஏமாற்றி ஓடி வந்துவிட்டார்! மன்னர் அரசு கஜானாவை திறந்துவிடுங்கள் என்று சொல்கிறாரே மக்கள் மீது அவ்வளவு அக்கறையா? நீ வேறு காலியாக இருக்கும் கஜானாவை எதற்கு பூட்டிவைக்க வேண்டும் என்றுதான் அப்படி சொல்லுகிறார்! மூணு அடிக்கு

பாரத ரத்னாக்களும் கடவுளின் ஆஃபரும்! கதம்பச்சோறு! பகுதி 54

Image
மார்கழி மரணங்கள்!      நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன்! டிசம்பர் சீசன் சங்கீதத்திற்கு உகந்தது போல மரணங்களுக்கும் ஏற்றது போல! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் (மார்கழி) வருகையில் பிரபலங்கள் மறைந்து வருகிறார்கள். இந்த வருடமும் விகடன் பாலசுப்ரமண்யம், பாலச்சந்தர், கூத்தபிரான் என்று பெரும் பிரபலங்கள் மார்கழி மாதத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்து சாதித்தவர்கள். வேறுபட்ட துறைகளில் தங்கள் உழைப்பை வெளிப்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவர்கள். இவர்களின் இழப்பால் இன்று வளர்ந்து நிற்கும் அந்தந்த துறைகளுக்கு பெரிய இழப்பொன்றும் இல்லைதான். ஆனாலும் சம்பிரதாய இரங்கல் தெரிவிப்பது எனில் அந்த துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அனைவரும் சொல்வது பழக்கம் ஆகிவிட்டது. பாலச்சந்தர் திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரிமாறி சர்ச்சைகளில் சிக்கியவர். இன்று இறந்தபோதும் அவரைப்பற்றி முகநூலில் இரங்கல் என்ற பெயரில் உலாவும் சர்ச்சைகள் வேதனைக்குரியது. ஒருவர் இறந்த பின் அவர் நல்லவன், கெட்டவன், வியாபாரி, உயர்ந்தஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடுகள் விவாதங்கள் தேவையில்லை! இத்தனைகாலம் வாழ்ந்தார் அ

கண்ணிருந்தும் குருடர்களாய்....! சிறுகதை

Image
நான் அவளை பலமுறை இதே பேருந்தில் பார்த்திருக்கின்றேன்.அவள் அப்படியொரு அழகு.இருபதுமுதல் எழுபது வரை அவளை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகு.      அவள் எப்போதும் பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டுவருவாள் அது மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை. எத்தனயோ இருக்கை காலியாக இருக்க அவள் ஏன் அதில் அமர வேண்டும் பார்த்தால் படித்தவள் போலத் தெரிகிறது. அதுவும் அலங்காரத்திற்கு குறைவில்லை. மடிப்பு கலையாத புடவையும் பொருத்தமான ப்ளவுஸும் அணிந்து “பை”பின்னல் போட்டு “பர்ப்யும்”மின் தூக்கலான வாசனை கண்களுக்கு கூட கூலிங் கிளாஸ் ,டம்பப்பை,சகிதமாக சர்வலங்கார பூஷிதையாக செல்லும் இவள் நிச்சயம் படிக்காதவளாக இருக்கமாட்டாள்.        பின் ஏன் ஊனமுற்றோர் இருக்கையில் அமரவேண்டும்?அழகிருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பார்களேஅது சரியாகத்தான் உள்ளது.       அன்று பேருந்தில் வழக்கதைவிட கூடுதலான நெரிசல்,நான் நிற்க இடமில்லாமல் தவிக்க வழக்கம்போல் அவள் முதலிருக்கையில் கூலிங்கிளாஸோடு அமர்த்தலான பார்வையில் அமர்ந்திருக்க அவள் அருகிலேயே கால் ஊனமுற்ற ஒரு பெண் நிற்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.அதைப்பார்த