ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது? கதம்பசோறு பகுதி 55
கதம்பசோறு! பகுதி 55 போக்குவரத்து தொழிலாளர் போராட்டமும் உறங்கும் அரசும்! ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட களம் இறங்கிவிட்டார்கள். அவர்களது கோரிக்கைகள் ஒன்றும் தள்ளிவிடக் கூடியதாக இல்லை! மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்ல முக்கிய வாகனம் பேருந்துதான். அலுவலகம், பள்ளி, பொழுதுபோக்கிடங்கள் என்று எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து மிக அவசியம். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே போராட்டம் தொடங்கிவிட தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அதுவும் விழா நாட்களில் இந்த மாதிரியான போராட்டங்கள் விழாவையே குலைத்துவிடும். வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கும் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் பேருக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் ஜனத்திரளுக்கு அவை போதுமானதாக இல்லை! தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவுக்கு வராமல் அரசு உறங்கிக் கிடக்கிறது. அவர்களுக்கென்ன இப்போது தேர்தலா வரப்போகிறது? அப்போதுதான் ஏழைகளின் கஷ்டம் அவர்களுக்குப் புரியும். கடலில் விழுந்த விமானம்! ...