கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66
1.
தலைவரே
மக்கள் நம்பளை ஏமாத்திட்டாங்க!
என்னய்யா சொல்றே?
எல்லா தொகுதியிலும் டெபாசிட்
வாங்கிட்டோம் தலைவரே!
2.
தலைவர்
எனக்கு முதல்வர் பதவி மேல ஆசை இல்லைன்னு அறிக்கை விட்டது ரொம்ப தப்பாய் போயிருச்சு!
ஏன்?
இந்த தடவையும் எதிர்கட்சி தலைவரா
உக்கார வைச்சிட்டாங்களே!
3.
ஒவ்வொரு
ரவுண்ட் முடிவு வரும்போதும் தலைவர் பண்ணுன அட்டகாசம் தாங்க முடியலை…!
என்ன பண்ணார்?
இவர் ஒரு ரவுண்ட் ஏத்திக்கிட்டே
இருந்தார்!
4.
மக்களுக்காக
நான்…! மக்களாகிய நான்!...!
டயலாக் எல்லாம் நல்லா பேசுங்க! ஆனா ஆளும்போது கோட்டை
விட்டுடுங்க…!
5.
தலைவரே
நாம மூணாவது இடம் பிடிச்சிருக்கோம்…!
ஆரம்பிக்கும் போதே நாம அங்கத்தானடா இருந்தோம்!
6.
மக்கழே!
என்னை வைத்து எத்தனை மீம்ஸ் போட்டு கலாய்த்து சந்தோஷப்பட்டீர்கள்! உங்களை சந்தோஷமாக
வைத்த எனக்கு ஓட்டுப் போட்டு சந்தோஷப்பட வைக்காமல் விட்டுவிட்டீர்களே மக்கழே! இது நியாயமா
மக்கழே!
7.
தலைவர்
எதுக்கு தன்னோட முதுகு காட்டிகிட்டு இருக்கிற பேனரை தொகுதி பூரா ஒட்டி வைக்க சொல்றாரு…!
ஜெயிச்சதுக்கு அப்புறம் யாரும்
அவரை திரும்பி பாக்கலைன்னு சொல்லக் கூடாதாம்!
8.
அதிமுக
ஜெயிச்சது உன்னோட பொருளாதாரத்தை பாதிச்சிருச்சா எப்படி?
அவங்க ஸ்கூட்டி கொடுக்கப் போறாங்க!
அத ஓட்ட பெட்ரோல் நான் இல்லே போடனும்!
9.
என்
வொய்ஃபுக்கு சேவையே வாழ்க்கைன்னு ஆயிருச்சு!
நிறைய உதவி செய்யறதை லட்சியமா
வச்சிருக்காங்களா கங்கிராட்ஸ்!
நீ வேற எப்ப டிபன் செஞ்சாலும் சேவை தான் பண்றான்னு
சொல்ல வந்தேன்!
10. நம் மன்னருக்கு சகுனத்தில் ரொம்ப நம்பிக்கையா?
கால் இடறிவிட்டது என்று போர்க்களத்திற்கு போவதை தவிர்த்துவிட்டாராமே!
ஊகும் அதெல்லாம் ஒன்றும் இல்லை!
முதல் நாளே எதிரி தன் தலையை இடறிவிடப்போகிறான் என்ற பயம் தான்!
11. சாமரம் வீசும் பெண்களிடம் அரசர் இப்போதெல்லாம்சில்மிஷம்
செய்வது இல்லையாமே…!
அரசியார் சிசிடீவி கேமரா வைத்துவிட்டாராம்!
12. தலைவரே தேர்தல்ல தோத்தாலும் நமக்கான வாய்ப்புகள்
இன்னும் இருக்கு…!
எங்கே…? எங்கே…?
புழல்…! வேலூர்…! திஹார்!
13. அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தது அவ
அப்பாவுக்குத் தெரிஞ்சு போயிருச்சு!
அப்புறம்?
நீ இன்னும் பழங்காலத்திலேயே
இருக்கே! வாட்சப்லே மெசேஜ் அனுப்பி இருக்கலாம்! இன்பாக்ஸ்லே கூப்பிட்டு சாட் பண்ணியிருக்கலாம்!
ஹைக் மெசெஞ்சராவது யூஸ் பண்ணி இருக்கலாம் இதெல்லாம் செய்யாம பழைய பஞ்சாங்கமா இருக்கியேன்னு
டோஸ் விடறாரு!
14. அதிர்ஷ்டம் அவரை ஒட்டிக்கிட்டு விடவே மாட்டேங்குதுன்னு
எப்படி சொல்றே?
ஸ்டிக்கர் வியாபாரம் செய்யறார்!
15. மன்னர் நமது புலவரை போர்க்களத்திற்கு அழைத்து
செல்ல போகிறாராமே?
எதிரியை ஓட ஓட விரட்டுவேன் என்று சொல்லி இருக்கிறாரே!
16. மூணு மாடி ஏறி குதிச்சு பூட்டை உடைச்சிருக்கியே ஏன்?
லிப்ட் ஒர்க் ஆகலை எஜமான்!
17. மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு தலைவர்
பிரச்சாரம் பண்ணது தப்பா போயிருச்சு!
ஏன்?
எம்.பி யா இருந்தவரை எம்.எல்.ஏவா
மாத்தி விட்டுட்டாங்களே!
18. மன்னர் இப்போதெல்லாம் அதிகாலையில் நடைப் பயிற்சி
மேற்க்கொள்கிறாராமே என்ன விஷயம்?
பூங்காவில் விதவிதமான உடைகளில்
பெண்கள் உடற்பயிற்சி செய்கின்றனராம்!
19. மன்னருக்கு நாக்கு நீளம் என்று எப்படி சொல்கின்றாய்?
எதிரியிடம் மண்ணைக் கவ்வி விட்டு மண் சரியில்லை
சுத்த உவர்ப்பாய் இருக்கிறது என்று சொல்கின்றாரே!
20. அந்த டைரக்டர் கதையை ரொம்ப மெதுவா நகர்த்திட்டு போறார்!
அப்ப டைம்பாஸ் டைரக்டர்னு சொல்லுங்க!
21. தலைவரே குடியை ஒழிப்போம்னு நாம அறிக்கை விட்டிருக்க கூடாது...!
ஏன்?
நம்ம குடியை அறுத்துட்டாங்களே!
22. தலைவர் எதுக்கு வித்தியாசமா குனிஞ்சு நிமிஞ்சு எக்ஸர்சைஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு...?
ஆளுங்கட்சியிலே அவருக்கு அமைச்சர் போஸ்ட் கொடுக்கிறதா சொல்றாங்களாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ரசித்தேன் சிரித்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி
பார்த்தேன், படித்தேன்,ரசித்தேன்,சிரித்தேன்
ReplyDeleteஅருமை நண்பரே வாழ்த்துகள்....
வெளிப்படையாகத் தலைவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும்,படிக்கும்போதே யாரை நினைத்து எழுதியது என்பது தெரிகிறது !
ReplyDeleteஅம்மாடியோ !!! அனைத்தும் அருமை .... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். அரசியார் வைத்த சிசிடிவியை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteஎப்படி நண்பரே மடை திறந்த வெள்ளம் போல் ஓடி வருகின்றது நகைச்சுவை ? அனைத்தும் ரசித்தேன் குறிப்பாக 1, 5, 11,
ReplyDeleteஅனைத்தும் அருமை நண்பரே. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஎனக்கு முதல்வர் பதவி மேல ஆசை இல்லைன்னு 2016 தேர்தலுக்கு முன் சொன்னவங்க உண்மையில் டெப்பாசிட்டை கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை!!
ReplyDeleteஹாஹாஹாஹா!
ReplyDelete