தளிர் ஹைக்கு கவிதைகள்!
தளிர் ஹைக்கு கவிதைகள்!
குடியிருப்பு அகற்றம்
வேதனையில் எறும்பு!
விரிசலில் பூச்சு!
பற்றிய கால்கள்
விட மறுத்தது
ஈரநிலம்!
தேடிக் கொண்டே
இருக்கின்றன!
தொலைக்காதவாழ்க்கையை!
எறும்புகள்!
கூடி சமைத்து உண்டும்
பசியோடு வருகின்றன
குழந்தைகள்!
மண்சோறு!
எழவு வீட்டில்
அன்னியமாக சிரித்துக்கொண்டிருந்தது
தலைவரின் படம்!
மரிக்கையில்
மணந்து கொண்டிருந்தது
ஊதுபத்தி!
சேரும் இடத்தின்
சிறப்பை
தனதாக்கிக் கொண்டது!
தண்ணீர்!
வீசப்படும் எச்சில்
இலை!
காத்திருக்கும்
நாய்கள்!
தட்டிப்பறிக்கிறது
காற்று!
பலமுறை படித்து
முடிக்கையில்
காணாமல் போய்விடுகிறது!
புத்தகத்தின் புது
வாசனை!
பூட்டி வைப்பினும்
சேர்த்துவிடுகின்றது
அறையினுள் காற்று!
தூசு!
காற்று சேர்ந்தவுடன்
ஆர்பரிக்கின்றன!
கடல் அலைகள்!
நெல்கொத்தவரும்
குருவிகள்!
சிறகடித்து அழுதன!
நொடித்து போன வயல்கள்!
இருண்ட வீடு!
விளக்கேற்றின மின்மினிகள்!
மரங்கள்!
சுட்டெரிக்கும்
சூரியன்!
மீட்டெடுக்கவில்லை
தாகம்!
கானல் நீர்!
எழுதப்படாத பக்கங்கள்!
நிரப்பிக்கொண்டே வருகின்றது!
வாழ்க்கை!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் அருமை நண்பரே மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்
ReplyDeleteஎழுதப்படாத பக்கங்கள்!
நிரப்பிக்கொண்டே வருகின்றது!
வாழ்க்கை!
மிகவும் நன்று
அனைத்தும் அருமை அய்யா
ReplyDeleteஹைக்கூ க்குள்ளே ஹைக்கூக்கள்
ReplyDeleteஉங்கள் தளமே ஹைக்கூ
அதற்குள்ளே இத்தனை ஹைக்கூக்களா...!
அனைத்துமே அருமை. நன்றி.
ReplyDeleteஅருமை சகோ
ReplyDeleteஊற்று போல ஊறுகிறது சிந்தனை உங்களிடம். வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteஅனைத்தும் அருமை சுரேஷ்....எறும்பும், தலைவர் படமும் ஈர்த்தன அதிகம்..
ReplyDeleteஅனைத்தும் அருமை சுரேஷ். பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துகள். எல்லாமே நன்றாக இருக்கின்றன.
ReplyDelete