மறக்காமல் போடுங்க ஓட்டு!
மறக்காமல் போடுங்க
ஓட்டு!
கரை போட்ட வேட்டி
கட்டி
கறைபடாத கரங்களுக்கு
சொந்தக்காரர் என
கேட்டு வருகின்றார்
ஓட்டு!
ஐந்தாண்டுக்கு
ஓர் முறை ஆட்சியில் ஓர் மாற்றம்
அதுதானே ஜனநாயகத்தின்
தோற்றம்!
ஓர் நபரே அரசாண்டால்
அது முடியாட்சி
ஊர் முழுக்க கூடி
தேர் இழுத்தால் குடியாட்சி!
மாற்றங்கள் என்று
சொல்லி கேப்பாரு ஓட்டு!
தோற்றங்களை உருவாக்கி
ஆளுகின்ற நாடு!
இலவசங்கள் என்றே
சொல்லி எல்லோரையும் பின்னோக்கி
பல வருசங்கள் தள்ளினது
யாரு?
கோடிகளை சேர்த்துக்
கொள்ள கொடுக்கிறாங்க சில நூறுகள்!
கேள்விகளை கேக்க
முடியுமா யோசித்து பாரு!
உன் ஓட்டு உன்னுரிமை
அதை விற்று நோட்டுக்கு
கொடுக்கலாமா முன்னுரிமை?
நோட்டாவுக்கு போட்டாலும்
போடு!
நோட்டுக்கு போடாதே
ஓட்டு!
நலத்திட்டங்கள்
நற்பணிகள் செய்வதிங்கே யாரு?
நல்லாவே நீ யோசிச்சு
பாரு!
உன் விரலில் கறை
பட்டாலும்
கறைபடாத நபர்களையே
நீ தேடு!
உன் ஒரு வாக்கும்
உருவாக்கும் ஓர் மாற்றம்!
உன் மனதில் இதை
நீ ஏற்று!
வாக்கினை பதிவாக்கி
உன் செல்வாக்கினை நீ உயர்த்து!
நம் நாட்டை வழிநடத்த
நல்லதொரு தலைவனை
நீ அடையாளம் காட்டு.
அதற்காகவேணும் உன் விரலில்
இட்டுக்கொள்ள வேண்டும் மை அடையாளம்!
இதுதானே சிறந்த
வாக்காளரின் அடையாளம்!
மறவாமல் இடுவீர்
ஓட்டு! மாநிலம் முழுக்க சிறக்கவேணும் கேட்டு!
டிஸ்கி: நேற்றே பதிவிட வேண்டியது. டேட்டா கார்டில் பணமில்லாததால் இன்று ரீசார்ஜ்
செய்து பதிவிட நேரமாகிவிட்டது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து
ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமை நண்பரே நானும் ஓட்டுப்போட போனேன் என்னை பாடாய்ப்படுத்திட்டாங்கே.....
ReplyDeleteஅவசியம் ஓட்டுப்போடுவேன். (தஞ்சாவூர்..தள்ளிவைத்துவிட்டார்கள் அல்லவா? ஆதலால் அடுத்தவாரம்தான் எங்களின் வாக்குப்பதிவு)
ReplyDeleteநல்ல வரிகள் சகோ..
ReplyDeleteநல்ல பகிர்வு. பெரும்பாலானவர்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.
ReplyDeleteகடமையை ஆற்றி விட்டேன் நண்பரே...
ReplyDeleteமுதல் ஆளாகப் போட்டாச்சு...!
ReplyDeleteஎங்கள் ஊரிலும் இதே நாள்தான் தேர்தல் ஓட்டுப் போட்டு முடிவுகளும் வந்துவிட்டன...
ReplyDeleteகீதா: நானும் முதல் ஆளாகப் போட்டேன்...உங்கள் வரிகள் அருமை. ஆனால் இப்போ முடிவுகள் ஹும்....
நாங்களும் சீக்கிரமே போய் ஓட்டுப் போட்டோம். :)
ReplyDelete