தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

சுழற்சி நின்றதும்
தோன்றியது புழுக்கம்!
மின் விசிறி!

பிரித்து வைத்தாலும்
சேர்ந்து கொள்கிறது
குழந்தைகளிடம் மண்!

தலைகவிழ்ந்ததும்
நிமிர்ந்தான் விவசாயி!
பயிர்கள்!

காலச்சக்கரமில்லை
கடந்தன நாட்கள்
காற்றில் படபடத்தது நாட்காட்டி!

உயர்ந்த இடம்!
உயர்கிறது மதிப்பு!
இளநீர்!

நெடிய கட்டிடங்கள்
தடுத்து நிறுத்தியது
காற்றின் பயணம்!

அடையாளத்தை கொன்று
அகலமாகின சாலைகள்!
மரங்கள்!

விருட்சங்கள் வெட்டுபடுகையில்
விரைகிறது  
குளிர்சாதனப் பேரூந்து!

மிச்சமிருக்கும் வயல்களில்
எச்சங்களை தேடிக்கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி!

கீறினாலும்
இரத்தம் பீறிடவில்லை!
சுடு சொற்கள்!

குப்பையை கிளறி
இரை தேடுகின்றது
கோழி!

கைப்பிடித்து நடத்திச்செல்கையில்
கனவு தேசத்தை காண்பிக்கிறது
குழந்தை!

சிதறும் சிரிப்புக்களால்
சேர்த்து வைக்கிறது குடும்பத்தை
குழந்தை!

குறும்புகள் ரசிக்கப்படுகையில்
கோலோச்சுகிறது
குழந்தை!

சுடும் வெயில்
ஊடுறுவ விடவில்லை!
மரத்தின் நிழல்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!



Comments

  1. அருமையான ஹைக்கூ க்கள் நண்பரே
    நன்றாகவே ரசித்தேன் ...

    ReplyDelete
  2. கவிதைகளை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அனைத்தும் ரசிக்கத் தகுந்தவை நண்பரே.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையான ஹைக்கூக்கள் ரசித்தேன்.

    ReplyDelete
  6. அனைத்துமே நன்றாக இருந்தாலும் மூன்றாவது மனதைத் தொட்டது.

    ReplyDelete
  7. அனைத்தையும் ரசித்தோம் சுரேஷ். அருமை. ஒரு சில யதார்த்தம் என்பதால் மனதை வருத்தியது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2