கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 65
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
65
1.
மந்திரியாரே!
ஆராய்ச்சி மணியின் நாவை அறுத்துவிட்டதாக புகார் வந்துள்ளதே…!
நீங்கள் தான் மன்னா! ஆராய்ச்சி
மணியின் ஓசை நம் நாட்டில் ஒலிக்காமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளச் சொன்னீர்கள்!
அதான் நாவை அறுத்துவிட்டேன்!
2.
அவரை
ஏன் அமலாக்க பிரிவினர் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போறாங்க!
தினமும் ஓட்டல்ல இட்லியும் வடையும்
சாப்பிட்டு வந்தாராம்! அதான் அளவுக்கு அதிகமா சொத்து சேர்த்து இருக்கிறதா கைது பண்ணிட்டு
போறாங்க!
3.
தலைவர்
பேச்சை கேக்க வர மக்கள் ஆர்வமா துண்டு சீட்டில் எதையோ எழுதி கேக்கறாங்களே என்ன அது?
தினமும் ஒரு ரெசிபி தலைவர் சொல்றார்
இல்லையா அதான் புது புது ரெசிபியை நேயர் விருப்பமா கேக்கறாங்க!
4.
தலைவர்
தொகுதியிலே நுழைஞ்சதும் மக்கள் அப்படியே சூழ்ந்து நின்னு இத்தனை நாளா தொகுதிக்கு என்னபண்ணீங்க
இப்ப வந்து நிக்கறீங்களேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க!
அப்புறம்?
இதுவரைக்கும் தொகுதிபக்கம் எட்டி
பார்க்காம இருந்ததே நான் உங்களுக்கு செஞ்ச நல்ல காரியம்தானேன்னு தலைவர் கேக்கவும் ஷாக்
ஆயிட்டாங்க!
5.
அந்த
டாக்டர் எழுதுற பிரிப்கிர்ஷன் மாதிரி வேற யாராலும் எழுதவே முடியாது ..
அவ்ளோ டேலண்டா?
ஊகும்…! வேற யாராலும் அவ்ளோ
மோசமா எழுத முடியாதுன்னு சொல்ல வந்தேன்.!
6.
அந்த
டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சாங்க?
மெடிக்கல் சர்டிப்பிகேட் வேணும்னு போய் கேட்டப்போ
எந்த மெடிக்கலோட சர்டிபிகேட் வேணும்னு கேட்டாராம்!
7.
பக்கத்து
நாட்டில் இருந்து குதிரைகளை வாங்கச்சொன்னேனே தளபதியாரே என்ன ஆயிற்று?
குதிரைக்கு விலை கேட்டால் யானை
விலை சொல்கிறார்கள் மன்னா!
8.
ஊழலற்ற
தமிழகத்தை உருவாக்க ஓர் வாய்ப்பு கொடுங்கள்…!
தலைவரே! அப்ப நீங்க எங்க போவீங்க?!
9.
தலைவர்
ஏன் எல்லா கூட்டத்திலேயும் நின்னுக்கிட்டே இருக்கார்…?
முதல்வர் நாற்காலி தவிர வேற
எந்த நாற்காலியிலேயும் அவர் உட்கார மாட்டாராம்!
10. அட்சய திருதியைக்கு என்ன வாங்கி கொடுப்பீங்கன்னு
என் ஒய்ஃப் சிட்டிகை போட்டு கேட்டா…!
அப்புறம்?
சிட்டிகை நேரம் கூட யோசிக்க
விடாம ஒரு அட்டிகையை வாங்கிட்டப்புறம் தான் விட்டா!
11. வருஷா வருசம் அட்சய திருதியைக்கு எதாவது வாங்கிட்டே
இருக்கோம்…!
அப்ப எதாவது வளருதா…?
ம்ம்ம்! நிறைய கடன் வளர்ந்து
நிற்குது!
12. அட்சய திருதியைக்கு உன் வொய்ஃப் கேட்டதெல்லாம் வாங்கி
கொடுத்தியே எதாவது கிரடிட் பண்ணாளா?
அவ பண்ண வேண்டியதே இல்லை! நிறைய
கிரடிட் வளர்ந்து நிக்குது!
13. தலைவர் கையிலே சாக்கு எடுத்துட்டு எங்க கிளம்பிட்டார்…!
வாக்கு சேகரிக்க வாங்கன்னு கூப்பிட்டதை
தப்பா புரிஞ்சிகிட்டார் போல…!
14. தலைவர் மாத்தி யோசியுங்க! மாத்தி யோசியுங்க!ன்னு
மக்கள் கிட்டே சொன்னது தப்பா போச்சு!
ஏன் என்ன ஆச்சு?
தேர்தல்ல தலைவரை மாத்தி யோசிக்க
விட்டுட்டாங்க!
15. சொத்து பத்திரத்தோட பையனை கூட்டிக்கிட்டு எங்க போயிட்டு
இருக்கே!
எல்.கே.ஜி அட்மிசனுக்கு ஒரிஜினல்
பத்திரத்தை பார்த்தப்புறம்தான் அட்மிசன் கொடுப்பாங்களாம்!
16. மாப்பிள்ளை அரசியல்வாதியா இருக்கலாம் ஆனா
இப்படி சொல்ல கூடாது…!
பொண்ணுக்கு என்னை பிடிக்கலைன்னா
மாற்று வேட்பாளரை ஏற்பாடு பண்றேங்கிறார்!
17. கூட்டணிக்கு யாரும் கூப்பிடலைன்னதும் தலைவர் ஷாக்
ஆயிட்டாராமே…!
இருக்காதா பின்னே! ஒரே ஒரு எம்.எல்.ஏ சீட்டும் புட்டுகிட்டா பாவம்
அவரும்தான் என்ன பண்ணுவார்?
18. எதிரி மன்னன் நம் மன்னரை பதுங்கு குழியில் பிடிக்கும்
வரை மன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்?
ராணியோடு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தார்!
19. புலவரே! உம் பாடல்களை மன்னர் எடை போட்டதில் உமக்கேன்
இவ்வளவு வருத்தம்?
எடை போடுகிறேன் என்று என் ஏடுகளை காயலான் கடைக்கு
அல்லவா எடைக்கு போட்டுவிட்டார்!
20. எதிரிக்கு முன் நம் மன்னர் அடிபணிய மாட்டார்…!
எதிரியை விரட்டி அடிப்பாரா….!
எதிரி முன் நிற்காமல் புறமுதுகிட்டு
ஓடிவிடுவார் என்று சொன்னேன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிரித்ததில் மனசு நிறைந்தது kavithaigal0510.blogspot.com-பக்கம் வாருங்களேன்.
ReplyDeleteஜோக் மழை பொழிந்து விட்டீர்கள்.சிரித்து ரசித்தேன்.
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteயூ கே ஜி க்கு ஒரிஜினல் பத்திரமேவா,,
ReplyDeleteஅனைத்தும் அருமை சகோ,,
நிறையவே சிரித்தேன் பாஸ் ஸூப்பர்
ReplyDeleteமனம் விட்டுச் சிரித்தேன்.
ReplyDeleteவழக்கம்போல் அதிகம் ரசித்தேன். நன்றி.
ReplyDeleteகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 65 என்பதாலோ என்னவோ ,சிக்கன் 65 போல் ருசிக்க வைத்தது :)
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteசிரித்து மகிழ்ந்தேன். நன்றி
ReplyDeleteபதினைந்தாவது அருமை! ஏனெனில் விரைவில் அப்படியும் நடக்கலாம். எல்லாமே நல்ல சிரிப்பு வரும்படித் தான் எழுதி இருக்கீங்க!
ReplyDeleteரசித்தோம்...சிரித்தோம் ..
ReplyDelete