நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 7

விளம்பரம்!

 ச்சீ ச்சீ! அசிங்கமப்பா!  திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள்! என்று விளம்பரம் எழுதியவன் எழுந்தான். அவசர அவசரமாக சென்று மரத்தடியில் ஒதுங்கினான்.

கரண்ட் அஃபேர்ஸ்!

   ச்சே! பாழாப் போன மழை! ரெண்டு நாளா கரண்ட்டே இல்லை! ஆளறவங்களுக்கு ரெஸ்பான்ஸே இல்லை! என்றவள் கரண்ட் வந்ததும் போனை சார்ஜரில் சொருகி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தாள் கரண்ட் வந்துருச்சி!

ரிசல்ட்!
   நாளைக்கு ரிசல்ட்! மதிவாணன் பரபரப்பாக இருந்தார். முடிவு என்ன ஆகுமோ? வெற்றியா? தோல்வியா? நினைத்ததற்கு மாறாய்ப் போனால்… அப்புறம் என்ன ஆகும்? முடிவு வந்தது நினைத்தபடி அவர் கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. யாருக்கோ போன் செய்து தலைவரே ப்ளான் சக்ஸஸ்! என்றார் சந்தோஷமாக.

சிறப்புதரிசனம்!
   250 ரூபாய் சிறப்பு தரிசனம்! க்யு குறைவாக இருந்தது. பொது தரிசனம் நீண்டு இருந்தது. காசிருந்தா நாமும் சீக்கிரம் கடவுளை பார்க்கலாம்! ராமு சொல்ல,  சும்மா இருடா! காசில்லாவிட்டாலும் கடவுளோட சன்னிதானத்திலே நாமல்லாம் கொஞ்ச நேரம்  நிக்கிறோம்! காசை கொடுத்தும் அவங்க சீக்கிரமா இல்லே துரத்திவிட்டுடாறாங்க! என்றான் சோமு.

டிப்ஸ்!
  ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கேட்டு தலையை சொரிந்த சர்வரிடம் சம்பளம் வாங்கறே இல்லே! அப்புறம் என்ன தனியா டிப்ஸ்? முதலாளிகிட்டே சொல்லவா என்று கடிந்து கொண்டவர்  வெளியே வந்து செல்லை ஆன் செய்து பேசினார் சார்! உங்க பெண்டிங் வொர்க் முடிச்சிடறேன்! தனியா கவனிச்சிருங்க!


சிரிப்பு!
   தன் நகைச்சுவை எழுத்தால் எல்லோரையும் சிரிக்க வைக்கும் எழுத்தாளரின் மனைவி அவரை சாடிக்கொண்டிருந்தார். எப்ப பாரு மூஞ்சியை ‘உம்’னு வைச்சிகிட்டு ஒரு சந்தோஷம் இருக்குதா? ஒரு சிரிப்பு இருக்குதா? ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?

போராட்டம்!
   கோவில் எதிரே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. ஆம்… ஹைவேஸ் விரிவாக்கத்தில் கோவிலை இடித்துவிட்டார்கள்.

நவீன அப்பா!
   சதா போனை நோண்டிக்கிட்டு பேஸ்புக்கு, டிவிட்டர், வாட்சப்புன்னு மேய்ஞ்சிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா  புதுசா நாலு புதுப்படம் டவுண்லோட பண்ணித் தரலாம் இல்லே… நானாவாது பாப்பேன்… என்று கத்திக்கொண்டிருந்தார் அப்பா!

முரண்!
 ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பீர்! என்ற அழகாக மல்டிக்கலரில் பிரிண்ட் செய்து வைத்திருந்தார்கள் ப்ளாஸ்டிக்  அட்டையில்!

ஏக்கம்!
   சுதந்திரமாய் சுற்றித்திரிந்துக்கொண்டு இருந்த அரசு பள்ளி மாணவர்களை ஏக்கமாய் பார்த்தபடி தனியார் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை.


காஸ்ட்லி!
     தேர்தலில் ஜெயித்த கட்சித் தலைவர் தன்  சக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா போய்க்கிட்டிருக்கு போன தடவை  இருநூறு முன்னூறுக்கு வாங்கின ஓட்டை இப்ப ஐநூறு ஆயிரம்னு கொடுக்க வேண்டியதா இருக்கு! அடுத்த முறை எவ்ளோ ஆகுமோ?

சுதேசி!
    காந்தி வேசம் போட்டு முதல் பரிசை வென்ற குழந்தைக்கு கே.எப். சியில் ட்ரீட் வைத்து கொண்டாடினர் குடும்பத்தினர்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

 1. அனைத்தும் அருமை சுரேஷ்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. படித்தேன் இரசித்தேன்
  அனைத்தும் மிக மிக அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 3. நொடிக்கதைகள் அருமை நண்பரே...
  தொடர்ந்து தாருங்கள் பதிவுகள்...

  ReplyDelete
 4. உண்மையை சொல்லி விட்டீர்கள் ,ரிசல்ட்டில் வந்த தலைவர் ,மூன்றாம் அணியின் தலைவர்தானே :)

  ReplyDelete
 5. ஜோக் எழுதுபவர் பற்றிய வரிகள் படித்து எனக்குள் சிரித்துக் கொண்டேன் !

  ReplyDelete
 6. அருமையான தகவல்
  சிறந்த பதிவு

  ReplyDelete
 7. சுதேசி அருமை! மற்றதும் நல்லாவே இருந்தது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6