இந்திக்காரன் எடுத்த வாந்தி!
சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப் பார்க்க சென்னை பயணம். முன்பெல்லாம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் பிடிக்கும். மாலை டிராபிக் நெரிசல் என்றால் கூட ஒன்றேகால் மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம். இது நான் சென்னைக்கு பேருந்து ஏறும் இடத்தில் இருந்து பாரிமுனை சென்றடைய ஆகும் நேரமாகும். ஆனால் இப்போதெல்லாம் இரண்டரை மணிமுதல் மூன்று மணிநேரம்வரை சென்னை செல்ல நேரம்செலவிட வேண்டியதாகின்றது. சென்னை மாநகரமும் முன்பைவிட நெரிசல் அதிகமாகி சாலைகள் குறுகிப்போய் கிடக்கின்றது. முன் தினமே அடையாறு மலர் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்த என் தந்தை சொன்னார் 50 ரூபாய் டிக்கெட் தான் பெஸ்ட் என்று. காலையில் கிளம்ப முடியவில்லை! பதினோறு மணி அளவில் கிளம்பி வண்டியை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு பெரியபாளையம் கூட்டுரோட்டில் மெக்கானிக்கையே டிராப் செய்ய ச...