தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ
கவிதைகள்!
கூடு திரும்புகையில்
ஊடுருவுகின்றது
பாசம்!
கிளையில்லாமல்
கிளைத்தது உறவு!
பாசக்கிளிகள்!
பற்று
விட்டதும்
உதிர்கிறது!
ஒட்டிய மணல்!
புதைந்த
உயிர்களை
மீட்டுவந்தது
மழை!
புற்கள்!
தோண்டத்
தோண்டக்
குறைந்துபோனது
நீர்!
மணல் கொள்ளை!
ஆட்டுவித்து
அடங்கிப்
போகிறது!
காற்று!
படபடவென்று
அடித்துக்கொண்டது!
பதட்டப்படவில்லை!
காற்றில்
புத்தகம்!
உடைந்த மனது!
ஒத்தடம்
கொடுத்தது
குழந்தையின்
சிரிப்பு!
பொங்கிவழிந்தது!
வீணாகவில்லை!
அன்பு!
குழந்தை
தவழ்கையில்
ஈரமானது
பூமி!
சாய்ந்து
ஓய்வெடுக்கையில்
துரிதமானது
நகரம்!
மாலைப்பொழுது!
கட்டிக்கொண்டதும்
விட்டுப்போனது
கவலைகள்!
குழந்தை!
தேவதை
பிறந்ததும்
தூது சொன்னது
காற்று!
பூ!
கருத்தவானம்!
உதித்தது நிலா!
கூந்தலில்
மல்லிகை!
கசக்கிப்
பிழிந்தார்கள்!
இனித்தது!
கரும்பு!
கடத்தல்
காரன்!
கட்ட
முடியவில்லை!
காற்று!
கறுத்த பெண்ணை
துரத்தி
அடித்தது வானம்!
மழை!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
ஹைக்கூ அனைத்தும் அருமை நண்பரே...
ReplyDeleteகசக்கிப் பிழிந்தார்கள்
இனித்தது
கரும்பு
ஸூப்பர்
நண்பரே... நலம்தானே ?
ஆழமான சிந்தனையில் விளைந்த
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அற்புதம்
வாழ்த்துக்கள்
ஆழமான சிந்தனையில் விளைந்த
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அற்புதம்
வாழ்த்துக்கள்
நண்பரே தங்களை வலையில் சந்தித்து நாட்கள் பல கடந்து விட்டனவே
ReplyDeleteகவி அருமை
அனைத்தும் அருமை.
ReplyDeleteபொருள் பொதிந்த கவிதைகள். ஒவ்வொரு கருவும் அருமை. சிறிது நாளாக இடைவெளி ஏனோ?
ReplyDeleteஅனைத்துமே அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை சகோ
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
கருத்து நிறைந்த வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்தும் அருமை....
ReplyDeleteபாராட்டுகள்...
துளி..துளி தேன் துளிகள்.
Deleteதங்கள் ஹைக்கூ அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஅனைத்துமே அருமை மிகவும் ரசித்தது //கசக்கிப் பிழிந்தார்கள்!
ReplyDeleteஇனித்தது!
கரும்பு//