தளிர் ஹைக்கூ கவிதைகள்!





வலைப்பின்னல்!
யாரும் ரசிக்கவில்லை!
சிலந்திக்கூடு!

இரைதேடும் பல்லி!

வாழ்க்கையிழந்தன!
பூச்சிகள்!

பெரும் கட்டிடங்களில் 

அடைபட்டுப்போனது
ஆற்றின் வாழ்க்கை!

விளக்கின் அடியில் ஒளிந்தன!

வெளிச்சம் தேடிய
பூச்சிகள்!

துள்ளிக்குதித்த மீன்கள்!

குளத்தில் இறங்கியது
நிலா!

பற்றவைத்தவனுக்கு

உருகுகிறது
மெழுகுவர்த்தி!

உணவு இடைவேளை!

புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்தான்!
பசி!

குழந்தைகள் தினத்தில்

பெரியமனுஷனாகிறது குழந்தை!
மாறுவேடப்போட்டி!

மழை விட்ட இரவு!

ஓயாமல் அழைக்கிறது!
தவளை!

வானம் தொட்ட பறவைகள்!

பிடித்துக் கொண்டது
புகைப்படக் கருவி!

வீதியை அடைத்துக்கொண்டது!

நெரிசல் இல்லை!
மார்கழிக்கோலம்!

கூடைநிறைய பூக்கள்!

வருத்தமாய் இருக்கிறாள்!
பூக்காரி!

ஊடுருவல்!

தெரிந்தும் தடுக்கவில்லை!
விழிகள்!

சொல் இழுக்கு!

வழுக்கியது
கவிஞனுக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. ஸூப்பர் நண்பரே இரசித்தேன்.

    ReplyDelete
  2. மிக நன்று...அனைத்தும்...

    ReplyDelete
  3. ஆழமாகவே இருக்கின்றன சில ஹைக்கூக்கள்!

    ReplyDelete
  4. அருமை.
    அதிலும்
    மாறுவேடப்போட்டி இரசித்தேன்

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை!!! சில ரொம்பவே மாறுவேடப்போட்டி, விழி ஊடுருவல்.....மெழுகுவர்த்தி....

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!