கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17

  1. எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு பொலம்பிக்கிட்டு இருக்கியே என்ன விஷயம்?
கல்யாணமாகி வந்தா மாமியார் கூட சண்டை போடலாம்னு பார்த்தா நான் எது சொன்னாலும் சரின்னு ஒத்துக்கிறாங்க! சண்டை போடுற மாமியார் கிடைக்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்!

  1. மண்டபத்துல புதுசா நாலு ஜோடிகளை சேர்த்துவச்சேன்!

அடடே! கல்யாண மண்டபத்துலேயே இன்னும் நாலு கல்யாணமா?
ஊகும்! புதுசா நாலு ஜோடி செருப்புக்களை  சேர்த்துவச்சேன்னு சொல்ல வந்தேன்!

  1. தலைவர் பேரைக் கேட்டாலே ஜட்ஜ் கூட மிரண்டு போயிருவாரு!
அவ்வளவு செல்வாக்கா?
நீ வேற அவ்வளவு வாய்தா வாங்கி வச்சிருக்காரு!

  1. ஃப்ரி எஸ்.எம்.எஸ் பண்ணி ஒரு பொண்ணை லவ்விக்கிட்டு இருந்தியே இப்ப என்ன ஆச்சு?
ஃப்ரி சிம் கொடுக்கிற ஆள் சிக்கினதும் அந்த பொண்ணு கழண்டுக்கிச்சு!


  1. மன்னருக்கு உடலெல்லாம் காதுகள் என்று எவ்வாறு சொல்கிறாய்?
    எதிரி மன்னன் அவன் நாட்டில் முரசு கொட்டுவதைக் கேட்டு இப்படி கால்கள் நடுங்குகிறதே!

  1. மன்னா! மன்னா! நட்பு பாராட்டி நூறு புறாக்களை அனுப்பிய பக்கத்து நாட்டு மன்னன் இலவச இணைப்பாக இன்னொன்றையும் அனுப்பிவிட்டான்!
    அட! என்ன அது?
   பறவைக் காய்ச்சல் மன்னா!

  1. மன்னருக்கு நம்பிக்கை அதிகம் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?
போரில் குதிரையை இழந்ததும் அதனால் என்ன ஓட கால்கள் இருக்கிறதே என்று ஓடிவந்துவிட்டாரே!

  1. டாக்டர்! இஞ்ஜெக்சனை கையிலே போடாம ஏன் பெட்டுல போடறீங்க?
    நீங்கதானே சொன்னீங்க வலிக்காம இஞ்செக்‌ஷன் போடுங்கன்னு!

  1. டாக்டர் இது உங்களுக்கு முதல் ஆபரேஷனா இருக்கலாம்! அதுக்காக என்னோட வயித்துல ரிப்பனை கட்டி ஓப்பன் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


  1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

மூக்கு ஒழுகுது டாக்டர்னு சொன்னா எம்சீல் வாங்கி அடைச்சிருங்கன்னு சொல்றாரே!

  1. கல்யாணம் ஆன நாளிலே இருந்து என் மனைவி ஆசைப்பட்ட எதையும் நான் வாங்கி கொடுத்தது இல்லே…
அடப்பாவி மனுசா…! ஏன் இப்படி?

இரு… இரு… அவளாவே வாங்கிட்டுத்தான் என்கிட்ட சொல்லுவான்னு சொல்ல வந்தேன்!

  1. தலைவருக்கு மேயர் பதவி கிடைச்சதும் தலைகால் புரியலை!
ஏன் என்ன ஆச்சு?
மேயர் மேயர்னு சொல்றீங்க? யாரைக் கட்டி மேய்க்கணும்னு கேக்கறாரு!

  1. சில்லரை இல்லாதவங்கள்லாம் பஸ்ஸைவிட்டு இறங்குங்க!
கண்டக்டர் உங்க கிட்ட சில்லரை இருக்கா?
 இல்லே!
அப்ப முதல்ல நீங்க கீழே இறங்குங்க!

  1. தலைவர் விஞ்ஞானிகள் கூட்டத்துல ஏடாகூடமா பேசி உளறிட்டார்!
அப்படி என்ன பேசினார்?
செயற்கைகோள் தயாரிப்பில் மட்டுமல்ல இயற்கைக் கோள் தயாரிப்பிலும் இந்தியா விரைவில் தன்னிறைவு அடையும்னு சொல்லிட்டார்.


  1. தலைவருக்கு பிரியாணி நியாபகம் வந்திருச்சுன்னா உடனே கிளம்பிடுவார்!
    எங்கே?
  உண்ணாவிரதப் பந்தலுக்குத்தான்!

  1. கட்டிங்க் பண்ணிக்க போய் உடனே திரும்பிட்டியே ஏன்?
    சலூன் காரன் ஒரு  ‘கட்டிங்க்’ போட்டுட்டு இல்ல கடையை திறந்து வைச்சிருக்கான்!

  1. மன்னரை வாயாற புகழ்ந்தீர்களே பரிசு கிடைத்ததா?
காதாற கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார்!

  1. அந்த டாக்டர் ஏகப்பட்ட கடன் வாங்கி இந்த கிளினிக்கை கட்டி இருக்கார்!
    அதான் அவர் வாங்கிற பீஸ்ல இருந்தே தெரியுதே!

  1. நோய் முத்திப் போச்சு! இனிமே இதை ஆபரேஷன்லதான் குணப்படுத்த முடியும்!
எதை வச்சு சொல்றீங்க டாக்டர்?
நான் வாங்கின கடனுக்கு டியு வந்திருக்கிறதை வச்சு சொல்றேன்!


  1. என்ன சொல்கிறீர் மந்திரியாரே! மன்னர் மரண அவஸ்தையில் இருக்கிறாரா?
பின்னே! மன்னரை பாட புலவர் சென்றுள்ளாரே!

  1. ஒரு நகை நட்டு கூட கேக்காம உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனே இதுல இருந்து என்ன தெரிஞ்சுது!
நீங்க ஒரு மறை கழண்ட கேஸுன்னு நல்லாவே தெரியுது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும் நன்றி!


   


Comments

  1. விழுந்து, விழுந்து சிரிச்சேன் பாஸூ...

    ReplyDelete
  2. நகைச்சுவை சுவையோ சுவை.....

    ReplyDelete
  3. ஹஹாஹாஹாஹ் ரொம்பவே சிரிச்சோம் பாஸ்!!

    ReplyDelete
  4. அனைத்தையும் ரசித்து சிரித்தேன், குறிப்பாக மன்னர்கள் பற்றியது, செயற்கை கோள், போலி டாக்டர் உடபட...

    ReplyDelete
  5. ரசித்து படித்து, சிரித்தேன். அதிலும் அந்த முதல் ஜோக் ரொம்பவே சூப்பர்.

    ReplyDelete
  6. ரசித்துச் சிரிக்க வைத்த துணுக்குகள்..

    ReplyDelete
  7. சிரித்தேன்
    ரசித்தேன்
    நண்பரே
    நன்றி

    ReplyDelete
  8. அருமையான நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  9. பதிவை இரசித்தேன்! அதுவும் அந்த 14 மற்றும் 15 இலக்கமிட்ட நகைச்சுவை துணுக்குகள் வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டன.

    ReplyDelete
  10. எப்பிடி இப்படி மடை திறந்த வெள்ளமாக அடுக்கடுக்காக இதனை தொடர்ந்து வருகிறதா wow very nice அனைத்தும் ரசித்தேன். வாழத்துக்கள் சகோ !

    ReplyDelete
  11. அனைத்துமே அருமை. ரசித்தேன் சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!