Posts

ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்!

ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்! வணக்கம் வலைப்பூ அன்பர்களே! உங்களின் நல் ஆதரவின் வழித்துணையோடு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் ஒன்றும் தெரியாதவனாக ஜனவரி மாதம் வலைப்பூ உலகில் அடியெடுத்து வைத்தேன். முதலில் சில பதிவுகள் எழுதி படிக்க யாரும் வரலையே என்று வருந்திக்கிடந்தேன். பின்னர் கூகுளார் உதவியுடன் ப்ளாக்கர் நண்பன் தளம் சென்று திரட்டிகளை இணைத்து அதில் பதிவுகளை இணைத்ததும் வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள். ஆர்வக்கோளாறில் நிறைய செய்திகளை காப்பி – பேஸ்ட் செய்து கெட்ட பெயர் வாங்கி தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். கொன்றைவனத்தம்பிரான் என்ற நண்பரோடு ஒரு மோதல். அப்புறம் அவர் நம் நன்மைக்குத்தான் சொல்கிறார் என்று காப்பி-பேஸ்ட் கைவிட்டு சொந்த பதிவுகள் மட்டும் எழுத ஆரம்பித்தேன். 2012 மத்தியில் இருந்து சொந்த பதிவுகள்தான். வாசகர்களும் நண்பர்களும் பெருக ஆரம்பித்தார்கள். பதிவுகள் எண்ணிக்கை குறைந்தாலும் பக்க எண்ணிக்கை அதிகரித்தது. நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு நண்பர்களுடன் உரையாட முடிந்தது. 2014ல...

கூடா நட்பு! பாப்பா மலர்!

Image
கூடா நட்பு! பாப்பா மலர்! ஒரு அடர்ந்த காட்டின் ஓரமாய் இருந்த ஓர் ஊரில் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த பூனை அந்த ஊரில் இருந்து அடிக்கடி பக்கத்து காட்டிற்கு சென்று வரும். அப்படி சென்று வருகையில் நரி ஒன்றை நட்பு பிடித்தது.    நரி வேட்டையாடி தின்ற மிச்ச சொச்ச உணவுகளை பூனைக்கு கொடுக்கும். பூனையும் ஒரு கட்டு கட்டும். இப்படி வாரம் ஒருமுறையேனும் காட்டுக்குச் சென்று நரி கொடுக்கும் விருந்தை ருசித்துக் கொண்டிருந்தது பூனை.   ஊருக்குள் சத்தம் போடாமல் யார் வீட்டின் அடுக்களைக்குள்ளாவது சென்று பயந்து பயந்து பாலையோ சோற்றையோ உருட்டித் தின்னுவதை விட காட்டு வாழ்க்கை பூனைக்குப் பிடித்து இருந்தது. அதே சமயம், நரிக்கு நகரத்துக்குச் செல்லவேண்டும் அங்குள்ள உணவு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆசையாக இருந்தது.    ஒருநாள் நரி,  “பூனை நண்பா! இத்தனை நாள் என்னுடைய விருந்தினராக வந்து நான் கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுச் செல்கிறாய்! ஆனால் உன் ஊருக்கு மட்டும் என்னைக் கூப்பிட மாட்டேன் என்கின்றாயே? நான் இதைக் கேட்க கூடாதுதான்! ஆனாலும் என் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசை கேட்கத் தூ...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90   1.    என்னது?மன்னருக்கு அவை’நடுக்கம்” அதிகமா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே? நன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே! 2.    கூட்டணியில இருந்து தலைவர் திடீர்னு தலைவர் விலகிட்டாரே ஏன் ? கூட்டணிக்காக “உடைச்சவரைக்கும்” போதும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்!   3.    கட்சியிலே ஒரு நியு எண்ட்ரிக்குத்தான் நாங்க பொதுச்செயலர் பதவி கொடுத்து இருக்கோம்! அப்ப அவர் “புதுச்செயலர்”னு சொல்லு! 4.    மன்னா மக்கள் எதிரிக்கு விலை போய் விட்டார்கள்? எப்படி? நம் ஏ.டி.எம்களில் எதிரி அவனது பணத்தை நிரப்பி விட்டான் மன்னா! 5.    அந்த கோயில்ல குருக்கள் ட்ரெண்டியா இருக்காரு! எப்படி சொல்றே? காணிக்கை வாங்கிறதுக்கு ஸ்வைப்பிங் மிஷினோட இருக்காரே! 6.    மன்னரின் உடை வாளை எவனோ திருடி விட்டானாம்! யார் அந்த கூறு கெட்டப் பயல்? 7.    தலைவர் எதுக்கு தொண்டர்களை துடுப்புகளோடு படையெடுத்து வாங்கன்னு அறிக்கை விட்டிருக்...

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்!

Image
நொடிக்கதைகள்! பகுதி 28 1.    பதுக்கல்!   “ இப்படி அவனவன் கட்டுக்கட்டா புதுநோட்டை பதுக்கி வைச்சிட்டான்னா அப்புறம் சாமான்யனுக்கு எங்க சார் பணம் கிடைக்கும்?” என்றவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த நோட்டை செலவழிக்கத் தயங்கி அப்படியே எடுத்து பீரோவில் வைத்தார். 2.    கோணம்!   புயல் நகரையே அழிச்சிட்டு போயிருச்சு! எல்லா மரமும் சாய்ஞ்சு போச்சு! எல்லாம் நாசம்! என்று சொன்னவரை மறித்து “நமக்கு பழைய    நினைவுகளை கிளறி கொடுத்துட்டு போயிருக்கு இயந்திரமாய் சுழன்றவர்களை கொஞ்சம் மனிதனாய் மாற்றியிருக்கு என்றார் மற்றவர்! 3.     ஆப்பு!    வார மாத இதழ்களை செல்போன் ஆப்பில் படித்துக் கொண்டிருந்தார் அப்பா! 4.    படிப்பு வாசனை! பெட்டிக்கடையில் தினசரி வார இதழ்களை விற்றுக்கொண்டிருந்தவரிடம் புத்தகத்தை வாங்கி இதுல என் கவிதை வந்திருக்கு இதோ பாருங்க! என்று ஆசையோடு காண்பிக்கையில் “எனக்கு எழுத படிக்க தெரியாது தம்பி!” என்றார்! 5.    பாலாபிஷேகம்!   தன் அபிமான நடிகரின் கட்-அவுட்டிற்கு குடம் ...

இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!

Image
இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!  கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் எனது ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. ஆண்டு கடைசியில் மீண்டும் விகடனில் என் பெயர் பதித்தது மட்டற்ற மகிழ்ச்சியினை தந்தது.   ஜோக்கினை பிரசுரம் செய்த விகடன் குழுமத்திற்கும் பாசுமணி சார், மற்றும் ஜோக்கினை பதிவிட்டு விபரம் சொன்ன தமிழக எழுத்தாளர் குழுவின் பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, ஏந்தல் இளங்கோ சார், ரவிக்குமார் சார் மற்றும் குழு நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! இந்த ஆண்டு இறுதியில் பிரசுரமான ஜோக் எனக்கு மேலும் ஊக்கம் தந்து இன்னும் நிறைய எழுத தூண்டி உள்ளது. ஆயினும் தந்தையின் உடல்நலக்குறைவு, வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான சூழல் சரிவர அமையவில்லை!     வர்தா புயல் பாதிப்பினால் பகல் பொழுதில் சரிவர மின்சாரம் இருப்பதும் இல்லை! இதனால் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் செல்வதும் படிப்பதும் குறைந்து உள்ளது. என் பதிவுகளும் குறைந்து உள்ளது. புத்தாண்டில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன். அன்பு நண்பர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். ...

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

Image
யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!      முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.    “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.    அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.      அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
   தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.    கரையைக் கடக்கையில் கஷ்டப்படுத்தியது    புயல்! 2.    வானில் பிறந்தாலும் மண்ணோடு கலந்தது மழைநீர்! 3.    பறித்து நடுகிறார்கள் துளிர்க்கிறது! திருமணம்! 4.    அரவணைக்கையில் உதறி தள்ளுகிறோம்! பனி! 5.    கட்டிய குடிசைகள்! அகற்றியது சூரியன்! பனி! 6.    வாடாத பூக்கள் வரவேற்றன! வாசலில் கோலம்! 7.    அசைந்தாலும் நகரவில்லை! நீரில் நிழல்! 8.    வெளிச்சத்துக்கு வந்தன நட்சத்திரங்கள்! அமாவாசை! 9.    தேடிக்கொண்டே இருக்கின்றன எதையும் தொலைக்கவில்லை! எறும்புகள்! 10. மொய்த்த கண்கள்! காசாக்கினாள் நடிகை! 11. நிஜத்தை தொலைத்து நிழலில் நிம்மதி காண்கிறாள் நடிகை! 12.  விரிசல்! உலர்ந்து போனது! ஈரம்! 13. பூக்களைப் பறித்தார்கள்! அழவில்லை! செடி! 14. திரைவிரித்தது வானம் இருண்டது பூமி! அமாவாசை! 15. பிடித்துக் கொண்டது நகர முடியவில்லை! மழை! ...