Posts

உலகின் குள்ளமான பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க கல்லூரி மாணவி

Image
சிகாகோ: 27 இன்ச் உயரமுள்ள அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரிட்ஜெட் ஜார்டன் (22). அவரது சகோதரர் பிராட் ஜார்டன் (20). பிரிட்ஜெட்டின் உயரம் 27 இன்ச், பிராடின் உயரம் 38 இன்ச். அவர்கள் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான உடன்பிறப்புகள் என்று கின்னஸ் சாதனை குழு தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்ஸில் உள்ள கஸ்கஸியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நாட்டியம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்கு. பிராட் கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, மேஜிக் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர். பிரிட்ஜெட் தான் உலகிலேயே குள்ளமான பெண்மணி என்று கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது. 28.5 இன்ச் உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன் தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமானப் பெண்மணியாக திகழ்ந்தார். இதுவரை வாழ்ந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்ட்ர்ஸ் தான். அவர் உயரம் வெறும் 24 இன்ச். அவர் கடந்த 1895-ம் ஆண்டில் தனது ...

நீயுமா??! சிறுகதை!

Image
நீயுமா??! காலேஜிற்குள் நுழைந்ததுமே டேய் சந்துரு உனக்கு விஷயம் தெரியாதா? என்றான் குமார்.என்னடா என்ன விஷயம் அப்படி எனக்குத் தெரியாம போயிடுச்சி என்று அவன் தலையில் தட்டினேன். அவன் அதை ரசியாமல் ப்ரியம் வதா... என்று இழுத்தான்.    ப்ரியம்வதா..! ம் அவளுக்கு என்ன? என்று அலட்சியமாக கேட்டேன். டேய் தெரியாமத்தான் கேக்கறியா? என்று குமார் கோபமாக கேட்டான். ஆமாடா! என்னவிஷயம்? என்றேன்.     ப்ரியம்வதா செத்து போயிட்டாடா! இதை சொல்வதற்குள் குரல் உடைந்து இரண்டு சொட்டு கண்ணிர்விட்டுவிட்டான் குமார். என்னுள் ஆயிரம் ஒல்ட் மின்சாரம் பாய்ந்தார் போல் ஓர் அதிர்ச்சி. அப்படியே சிலையென நின்றுவிட்டேன்.     குமார்தான் பிடித்து உலுக்கினான். டேய்! டேய்! என்னாச்சுடா! உனக்காகத்தான் காத்திருந்தேன். காலேஜே அவளுக்கு இறுதி மரியாதை செலுத்த போயிருக்கு வாடா போகலாம் என்றான் குமார்.     மௌனமாக தலையை குனிந்து கொண்டேன். குமார் என்னருகில் வந்து நம்ம கையில என்னடா இருக்கு? ஃபீல் பண்ணாதே! வா! கடைசியா ஒரு தடவை அவ முகத்த பார்த்துட்டு வந்துடலாம் என்றான்.   நான் வரலை நீ போடா! என்றே...

பொறுமை கடலினும் பெரிது

Image
பொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும். ஒருவன், கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான். "இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதிஇருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான். உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று... ...

ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்

Image
டோக்கியோ: ஜப்பானின் தெற்கு கடற்கரையில் ஒரு சிறுமியால் தூக்கி வீசப்பட்ட ஒரு பாட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் ஹவாய் தீவு கடற்கரையில் கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜப்பானின் தென்கோடியில் உள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா என்ற நகரின் கடற்கரையில், சாகி அரிகவா என்ற சிறுமி, ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலை கடலில் வீசி எறிந்துள்ளார். கடந்த வாரம், ஹவாய் தீவில் உள்ள குவாய் பகுதியில், கடற்கரையை பணியாளர்கள் சுத்தப்படுத்திய போது, ஒரு பாட்டில் கிடைத்தது. அந்த பாட்டிலுக்குள் சில பொருட்கள் இருந்ததை அடுத்து, அதை அதிகாரிகளிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர். அந்த பாட்டிலை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதில் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கொக்கு, அரிகவா சிறுமி படித்த துவக்கப் பள்ளியின் புகைப்படமும், அதன் பின்புறம், அரிகவாவின் கையெழுத்தும் இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகவல், அரிகவாவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது 17 வயதாகும் அவர், இதுகுறித்து அளித்த பேட்டியில்,"இதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பாட்டில் திரும்பக் கிடைத்ததன் மூலம், என் பள்ளி நாட்கள் நினைவுக்கு ...

அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?

Image
கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ரியல் எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். பிற நிலங்களை விட வயல்களை பிளாட் ஆக்குவதால் 25 முதல் 100 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது. விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்திருந்த நிலப்பரப்பு, தற்போது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகி விட்டது. தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தி...

நான் ரசித்த சிரிப்புகள் 3

Image
நான் ரசித்த சிரிப்புகள் 3 1.ரீ சார்ஜ் பண்ணினதுலேர்ந்து எப்போ பேசினாலும் போன்ல நாய் குரைக்கிற சவுண்ட் கேட்டுகிட்டே இருக்கு! ஃபுல்Dog டைம் சொல்லு!       2.யோவ் என்ன தைரியம் இருந்தா என் வீட்டுமேலயே ஏறிநின்னு என்னைப் பார்த்து ஓடுகாலின்னு சொல்வே? ஐயோ அம்மா கூரை மாத்த நீங்க வாங்கி தந்த ஓடு எல்லாம் தீர்ந்துடுச்சுன்றதைதான் அப்படிச் சொன்னேன். 3.என்னதான் கதைக்கு அவசியம்னாலும் அவ்வளவு கேவலமா நடிக்க முடியாதுன்னு டைரக்டர்கிட்டே சண்டை போட்டீங்களே ஏன்..ஆடையில்லாம நடிக்கசொல்றாரா?   ஊஹூம் மேக்கப் இல்லாம நடிக்கணுமாம்.                      -ஜெயாபிரியன். 4.இந்த படத்துல செகண்ட் ஹீரோன்னு சொன்னீங்களே படத்துல பார்க்கவே முடியலையே? ஒரே செகண்ட்தானே வரேன்.        கு வின்செண்ட் 5.இவர் ரொம்ப வெகுளின்னு எப்படிச் சொல்றே? மெடிக்கல் ஷாப்பில போயி ஆரண்யகாண்டம் ஒருபாக்கெட் கொடுங்கன்னு கேட்டாரே!             குட்...

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Image
இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை துவங்க உள்ள நிலையில், திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில், போராட்டத்திற்கு பின், அரசியல் பின்னணியும் உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் முன்பு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, ஒரு வழியாக வி.வி.இ.ஆர்.,-1000 என்ற தொழில்நுட்பத்துடன், பணிகள் துவங்கப்பட்டன.இந்திய அணுமின் கழகத்தின், 16 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் திட்டங்கள் துவங்கின. இரண்டு யூனிட்களில், தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. கடந்த 2001ல், அணு நிலைய கட்டுமான பணிகள் துவங்கி, 2007ல் முடிந்தன. பின், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, 2007ல் கொதிகலன் நிறுவப்பட்டது. அணு மின் உற்பத்திக்கான கருவிகள், 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்ப...