Posts

கவன ஈர்ப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு ஏன்? தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன? தற்போதைய தமிழக அரசே காரணம். தமிழக அரசின் இலவச காஸ் இணைப்புக்கு பிறகு தமிழகத்தில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.அதே சமயம் புதிதாக இணைப்பு கேட்டு பெறுவோரும் அதிகரிக்க அதற்கு போதுமான அளவு சிலிண்டர்களை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும்.ஆனால் மத்திய அரசு வழக்கமான அளவே ஒதுக்கீடு செய்து வருகிறது.        தமிழக அரசோ இலவச சிலிண்டர்களை வழங்கி வருகிறது எப்படி? வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு   18 முதல் 20 நாட்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்கலை நாட்கடத்தி 25நாட்கள் கழித்துதான் பதிவு செய்யவேண்டும் என்று கட்டளையிடும் ஏஜன்சிகள் பதிவு செய்து 15நாட்கள் கழித்தே சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. ஆக குறைந்தபட்சமொரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்க வேண்டிய 12 சிலிண்டர்களை 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு சிலிண்டராக மாற்றி வழங்கி ஆண்டிற்கு இரண்டு சிலிண்டர்களை மிச்சம் பிடித்து இலவச பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.      இதனால் செயற்கையாக சிலிண்டர் த...

தளிர் அண்ணா கவிதைகள்

Image
தொட்டில் குழந்தை அன்று அழகே அமுதே என்று ஆரத்தழுவி அலங்கரித்த தொட்டிலில் தொட்டிலில் இட்டு ஆராரீரோ பாடினர் ஆனால் இன்றோ அரசுத் தொட்டிலில் அவசரமாய் இட்டு ஒடுகின்றனரே! வரதட்சணை பெண் பார்க்க வந்தவர் என்னை அழகுச்சிலை என்றார்.அதனால்தானோ ஐம்பதாயிரம் ரொக்கத்திற்கும் இருபது பவுன் நகைக்கும் ஹோண்டா பைக்கிற்கும் விலைபேசப்பட்டேன். மரத்தின் கேள்வி? நீங்கள் உயிர் வாழ ஆக்ஸிஜன் தருகிரேன் அனலாய் தகிக்கும் வெயிலுக்கு நிழலாய் குடை விரிக்கிறேன் உலர்ந்து போன பூமிக்கு புயலாய் மழையைத்த்ருகிறேன் உலர்ந்த பின்னும் விறகாய் எறிகிறேன் உங்கள் இல்ல கதவாய் மூடி திறக்கிறேன் சருகை தூவி பூமியை வளப்படுத்துகிறேன் இருப்பினும் என்னை வளர்க்காமல் அழிப்பது ஏன்? ஓ நீங்கள் மனிதர்கள் அல்லவா? விலைமாதர்கள் கல்யாணச் ச்ந்தையில் விலைபோகாத எங்களுக்கு கட்டில் சந்தையில் நல்லவிலை! காதலன் கிடைப்பானோ என்று ஏங்கிய எங்களுக்கு இன்று எத்தனையோ காதலர்கள்! பலரின் உடல்பசிதான் எங்கள் வயிற்று பசியை போக்கும் மருந்து.

தளிர் அண்ணா கவிதைகள்

Image
     குழந்தை கோடி வீட்டு கோமளா கண் வைப்பதும் பக்கத்து வீட்டு பாபுவிடம் பார்த்து பழகவும் திருட்டு பாலாஜி வந்தால் பொருட்களை மறைக்கவும் அடுத்த ஊரு மாமிக்கு அளப்பு ஜாஸ்தி என்பதும் தள்ளி வைப்பதும் குற்றம் காண்பதும் ஒளிவு மறைவு எதுவும் குழ்ந்தைக்கு கிடையாது. அதனுலகில் அதற்கு எல்லோரும் “பட்டுத்தாத்தா,பட்டுபாட்டி பட்டு அண்ணா,பட்டு அத்தை”மட்டும் தான். அப்பாவின் கட்டில். முற்றத்தில் நடு நாயகமாய் வீற்றிருக்கும் அப்பாவின் கயிற்று கட்டில். பர்மா தேக்குல செஞ்சதுடா என்று அவர் சொல்வதே தனி அழகு. யாரையும் அதில் அமர விட மாட்டார் என்னைத் தவிர வெயில் காலத்தில் வேப்ப மரத்தடி நிழலுக்கும் அறுவடைக்காலத்தில் களத்து மேட்டிற்கும் சென்றாலும் அப்பா அதை பராமரித்த விதமே தனி தளர்ந்த கயிறுகளை இறுக்கும் வித்தயை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னோர் நாளில் நீ படுத்துக்கோடா என்று அப்பா சொன்ன போது என் மகிழ்சிக்கு அளவே இல்லை காலத்தின் சுழற்சியில் கல்யாணமாகி மரக்கட்டில் பஞ்சு மெத்தை என மாறிப்போனது படுக்கை.இன்று அப்பாவை போல மூலையில் கிடக்கிறது அப்பாவின் கட்டில்.

sunday special

பார்வைகள்      சிறுகதை எழுதியவர்: எஸ்.எஸ்.பி எண்ணெய் கண்டு பலநாளானபரட்டைத் தலையுடன் அழுக்குச் சட்டையும் கிழிந்த பேண்டும் அணிந்து அவன் பேருந்தில் ஏறியபோது பயணிகள் சிலர் முகம் சுளித்தனர்.சில கல்லூரி மாணவிகள் இதுக்கெல்லாம் எதுக்கு பஸ்? என்று அவன் காதுபடவே முணூமுணுத்தனர்.அவன் எதயும் லட்சியம் செய்யாமலே டிச்கெட் வாங்கி கொண்டு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பக்கம் அமர்ந்தான்.         அப்பெண், யோவ் இது லேடீஸ் சீட் இதுல உக்கார என்ன தைரியம் உனக்கு என்று எதிற்க இன்னா கொறஞ்சா பொயிடும் உன் கற்பு? என்று பதில் பேச , கண்டக்டரோ யோவ் தகறாறு பண்ணாம வேற இடத்துல உக்காருய்யா! என்று அதட்ட மன்னிச்சுருப்பா என்று எழுந்து என் பக்கத்தில் அமர்ந்தான்.           அவன் உடை என்மீது படாதவாறு தள்ளி அமர்ந்தேன் பெரிய ரவுடியாய் இருப்பானோ. அழுக்கும் வியர்வையும் கலந்துஒரு நெடி அவன் மீது வீசவே பார்வையை ஜன்னல் பக்கமாய் திருப்பினேன்.      அடுத்த ஸ்டாப்பில் ஒர் இளைஞர் பட்டாளமே பஸ்ஸில் ஏறி...

ஹை! ஹைக்கூ!

Image
வரதட்சணை தட்டு நிறையப் பொண்ணோடு போனவள் அடிபட்டு உடம்பு நிறைய  புண்ணோடு திரும்பினாள் மழை! மேகத்தொட்டியில் மிகப்பெரிய ஓட்டை! இடி! அட ஆகாயத்தில் கூடவா அடுப்படிச் சண்டை ஆசை மனிதனுக்குள் மறைந்த்திருக்கும் மருந்தில்லா  தொற்றுநோய் எழுத்து வெள்ளைப் புடவையில் விதவிதமான டிசைன்கள் கண்ணீர் இமையின் கரை உடைந்ததால் எவ்வளவு வெள்ளம்? சிகரெட் பற்றவைத்தவனை பற்றவைக்கும் கண்ணிவெடி! துடைப்பம் நான் அழுக்கானால் உன் வீடு அழகாகும்    

தளிர் அண்ணா கவிதைகள்

Image
ஐயையோ ஹைக்கூ   நட்சத்திரங்கள் அடி வான பெண்ணே! உன் புடவையில் இத்தனை ஜிகினாக்களா? அமாவாசை அடி நிலாப்பெண்ணே! உனக்கு யார் மீது கோபம் இப்படி முகத்தை திருப்பிக்கொண்டாய் பனி  பனி மகளே! காதலன் கதிரவனை கண்டதும் ஏனிந்த வெட்கம்? கண்ணிமைப்பதற்குள் காணாமல் போகிறாய். அழகு மனதை மயக்கி அறிவைமழுங்க செய்யும் அபாயப்பொறி கோபம் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளம் புழுங்கி வீசும் புயல்.

செல் போன் செய்திகள்

எனக்கு பிடித்த எஸ்.எம்.எஸ் கள்   ஜேம்ஸ் பாண்ட் ஒரு இந்தியனை சந்தித்தபோது தன் பெயரை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார். ஐ யம் பாண்ட், ஜேம்ஸ்பாண்ட். அதுக்கு நம்மாளு சொன்னபதில், ஐ,ம் நாயுடு. வெங்கடநாயுடு, சிவவெங்கடநாயுடு, லக்ஷ்மிநாராயண சிவ வெங்கடநாயுடு.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு, சீத்தாராமராஜசேகர.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு,...... பாண்ட்: டேய் தெரியாம சொல்லிட்டேன் விட்டுருடா! நிஜங்கள் தரும் சந்தோஷத்தைவிட நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.நிஜங்கள் நிலைப்பதில்லை.நினைவுகள் அழிவதில்லை. Fact of life: solve simple mistakes early before it leads to big problem. Becoz we always slip from small stones and not from a mountain. எதையும் விட்டுக்கொடுக்கும் பழக்கம் உனக்கிருந்தால் எல்லாமே உன்னிடம் சேர்வதற்கு விறுப்பப் படும்    -புத்தர். Reversela padichalum adhe words varum. Madam, Eye, Radar, Rotator, Eve, Malayalam,Deified, Repaper, Redivider idhu ellam vida “AmmA”, “AppA”   how is it.