யுத்தபூமி!
யுத்த பூமி! காலையில் கண்விழிக்கும் போதே சின்னவனுக்கு காய்ச்சல் நெருப்பாய் சுட்டது. பெரியவன் உடலெல்லாம் அரிப்பதாக கூறினான். அந்த சின்ன சிமெண்ட் ஷீட் போட்டு தடுக்கப்பட்ட அந்த வீட்டில் வெக்கை அனலாய் வீட்ட சுழன்று கொண்டிருந்த மின்விசிறி வெக்கையை அதிகப்படுத்திக்கொண்டு இருந்தது. வேலைக்குச்சென்ற புருஷன் இன்னும் திரும்பவில்லை. தேன்மொழிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! காலை மணி 7 ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி தானும் அந்த கார்மெண்ட் கம்பெனிக்கு சென்றுவிட வேண்டும். சின்னவனுக்கு ஜுரமாக இருப்பதால் ஸ்கூலுக்கு லீவ் போட்டு ஆஸ்பத்திரி கூட்டிச்செல்ல வேண்டும். தூரத்து உருக்காலையில் இருந்து வெளிப்பட்ட புகை மண்டலம் நாசியைத் துளைத்து இருமலை வரவழைத்தது. அப்படி என்னத்தை போட்டுக் கொளுத்துவானுங்களோ! ஒரே புகை! நாத்தம்! என்னிக்கு இந்த கம்பெனி ஊருக்குள்ளே வந்ததோ அன்னிக்கே ஊருக்கு கிரகம் பிடிச்சுப் போச்சு! புலம்பிக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள் தேன்மொழி. அரைமணி நேரத்தில் பம்ப...