கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 94
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 94
1, தலைவரே கட்சியிலே
நிறைய ஸ்லீப்பர் செல்கள் சேர ஆரம்பிச்சிட்டாங்க!
அதுக்கென்னய்யா இப்ப?
தூங்கறதுக்கு வசதியா
பாயும் தலையணையும் கேக்கறாங்க!
2. கட்சி இப்படி
பல அணியா உடையும்னு தலைவருக்கு அப்பவே தெரிஞ்சிருக்கும் போலிருக்கு!
எப்படி சொல்றே?
கட்சியோட சின்னமா
கண்ணாடியைத் தேர்வு செய்து இருக்காரே!
3. எதுக்காக எம்.எல்.ஏக்களை ரிசார்ட்ஸ்ல அடைச்சு வைக்கிறீங்க?
ஆட்சியை ரீ_ ஸ்டார்ட் பண்ணனுங்கிறதுக்காகத்தான்!
4. மேடையிலே பேசும்
போது நம்ம தலைவர் நிறைய “அப்ளாஸ்” வாங்கினாராமே! அப்படி என்ன பேசி வாங்கினார்?
நீ வேற ராத்திரி சாப்பாட்டு பொறிச்சு தின்ன அப்பளம்
வாங்கினதைத்தான் அப்படிச் சொல்லிக்கிட்டு திரியறார்!
5. தலைவர் கண்ணசைவிலே
கட்சியை நடத்திக்கிட்டு இருந்தார்!
அப்புறம்?
இப்போ கண்ணைக்
கட்டி காட்டில் விட்டது போல தவிக்கிறார்!
6. எந்த விஷயத்தையும்
அவசரப்படாம ஆறப்போடறதுல என் மனைவி ஸ்பெஷலிஸ்ட் தெரியுமா?
அதான் உன் வீட்டு டிபனும் காபியும் இவ்வளோ ஆறிப்
போயிருந்துதா?
7. சில்லறை விஷயத்துக்கெல்லாம்
கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டிருந்த உன் பொண்டாட்டிக் கிட்டே இப்ப முன்னேற்றம்
இருக்கா?
இப்பல்லாம் “கட்டுக்கட்டா” என் மேல புகார் எடுத்துக்கிட்டு
போறா!
8. கல்யாண நாளுக்கு
“ரிங்” போடறேன்னு சொன்னிங்களே எங்க?
காலையில இருந்து உன் போனுக்கு எத்தனை ரிங் விட்டிருக்கேன்
பாரு நீதான் எடுக்கலை!
9. என் பொண்டாட்டி எப்பவும் “தட்டிக்கொடுத்து” வேலை வாங்கறதிலே சமர்த்து!
அதான் உன் முதுகு இப்படி வீங்கிப் போயிருக்கா?
10. வேலை நேரத்துல
வாட்சப் பார்த்தா என் பொண்டாட்டிக்கு கொஞ்சம் கூட பிடிக்காது!
நியாயம் தானே!
நீ வேற வீட்டு
வேலை செய்யற நேரத்துலன்னு சொல்ல வந்தேன்!
11. பயிர்க் கடன் வாங்கி அடைக்க முடியலேன்னு புலம்பறீங்களே
என்ன பயிர் வைச்சீங்க?
என் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனத்தான் சொல்றேன்!
அது ஆயிரங்காலத்து பயிர்தானே!
12. மாப்பிள்ளை
பெரிய ரிசார்ட்ஸ் ஓனர்!
அரசியல்வாதிங்க சகவாசம் அதிகமா இருக்கும் வேணாம்
வேற வரனைப் பாருங்க!
13. பையன் இஷ்டப்பட்டானேன்னு எஞ்ஜினியரிங் படிக்க வைச்சேன்!
அப்ப இப்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க!
14. எவ்வளவு பெரிய
பிரச்சனை வந்தாலும் அவர் ஊதித் தள்ளிடுவாராமே அவ்வளவோ செல்வாக்கானாவரா?
ஊகும்!
நாதஸ்வர வித்வானா இருக்கார்!
15. அந்த பவுலரை
டீம்ல சேர்க்க கூடாதுன்னு ஏன் கலாட்டா பண்றாங்க?
அவர் “சைனாமேன் பவுலராம்”!
16. எதிரியின் நாட்டுச்சிறையில் ஏதோ வசதி இருக்கிறதாமே
அமைச்சரே!
ஆம் மன்னா!
ஸ்பெஷலாக கவனித்தால் ஷாப்பிங் போய் வர அனுமதிப்பார்களாம்!
17. இளவரசரை
காவலர்கள் குதிரையேற்றத்தின் போது தடுத்து விட்டார்களாமே!
ஆம்! ஒரிஜினல் லைசென்ஸ் கொண்டு வரவில்லை என்று
தடுத்து விட்டார்களாம்!
18. இளவரசியின் சுயம்வரத்துக்கு எல்லா ஏற்பாடுகளும்
தயாராகி விட்டதா மந்திரியாரே!
தற்கொலைக்குத் தூண்டுவதாக யாரோ நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து விட்டார்கள் பிரபு!
19; எதிரியுடன் இனி என் வாள் பேசும்! வாய் பேசாது! என்று
சொன்னாரே மன்னர்
அப்புறம் என்ன ஆயிற்று!
மவுனமாய் வாளை
எதிரியின் பாதங்களில் வைத்து சரணாகதி ஆகிவிட்டார்!
20. கொடி அசைந்ததும்
காற்று வந்தது!
எப்படி?
எதிரியிடம் சமாதானக்
கொடியை ஆட்டியதும்தாம் மன்னருக்கு மூச்சே விட முடிந்தது என்று சொன்னேன்!
பின் குறிப்பு:
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்துள்ளேன்! குறையிருந்தால்
சுட்டுங்கள்! நிறையிருந்தால் பாராட்டுங்கள்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
எல்லாமே இரசித்து சிரித்தேன் நண்பரே... ஸூப்பர்.
ReplyDelete
ReplyDeleteஅருமை... ரசித்தேன் சகோதரா...
நல்ல ஜோக்ஸ்.வாழ்ததுக்கள்..!
ReplyDelete